இண்டிகோ பஞ்சாயத்து. மோடியின் மானம் காற்றில் பறக்குது.

ஏழாவது நாளாக இண்டிகோ விமானம் பறக்காத காரணத்தால், உலகம் முழுக்க பயனாளர்கள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத மோடியின் மானம் காற்றில் பறக்கிறது. சென்னை விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை, புறப்பாடு என மொத்தம் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள், பிற ஏர்லைன்ஸ் விமானங்களை நாடும்போது, அதன் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் விமானப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். […]

