ஸ்டாலினுக்கும் பாஜகவுக்கும் அண்டர்கிரவுண்ட் டீலிங்..? நேரு கிரேட் எஸ்கேப்

அமலாக்கத்துறை தமிழகத்தில் நுழைவதும் உடனடியாக திமுகவினர் டெல்லிக்குப் போவதும் தொடர்ந்து நடப்பதைப் பார்க்கையில் ஸ்டாலினுக்கும் மோடிக்கும் இடையில் அண்டர்கிரவுண்ட் டீலீங் இருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது. ஏனென்றால் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்ததும், ஜனவரி 5 ஆம் தேதி துரைமுருகன் டெல்லி பயணமானார். ஏப்ரல் மாத இறுதியில் டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும் மே மாதம் செந்தில் பாலாஜி டெல்லிக்குப் பயணம் செய்தார். இவர்களைக் […]
அமைச்சர் நேரு பதவி பறிக்கப்படுமா..? அமலாக்கத்துறை திகில் ஆதாரங்கள்

வேலைக்கு லஞ்சம், ஹவாலா பரிவர்த்தனை என அமைச்சர் நேரு 1,020 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாட்டின் தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் அமலாக்கத்துறை ஒரு புதிய கடிதம் எழுதியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து அமைச்சர் நேரு பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வழங்கப்பட்ட 2,538 பணி நியமன ஆணைகளில் சிலருக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாக […]
ஸ்டாலினுக்காக துர்காவின் ஒட்டக பூஜை… சபாஷ் சரியான பகுத்தறிவு

கோமாதா, கோமியம் என்றாலே திராவிடக் கட்சிகளுக்கு ஆகாது. மாட்டைத் தொழுவதையும் பூஜை செய்வதையும் மூட நம்பிக்கை என்று கிண்டலோ கிண்டல் செய்வார்கள். அதேநேரம், துர்கா ஸ்டாலினும் சேகர் பாபுவும் கோயில் கோயிலாக சுற்றித் திரிகிறார்கள். கார்த்திகை தீபம் விளக்கு ஏற்றுவதை தடுத்த காரணத்தால் ஸ்டாலினுக்கு தோஷம் வந்துவிட்டதாம். இதைத் தடுப்பதற்காக ஒட்டகத்துக்குப் பூஜை செய்திருக்கிறார் துர்கா ஸ்டாலின். இதற்காக ஒட்டகம் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி சமாதியில் பொங்கல், வடை வைத்து வழிபடும் உடன்பிறப்புகள் இதற்கும் […]
நேரில் வந்து தீபம் ஏற்றுவாரா நீதிபதி…? நாடாளுமன்றத்தில் திமுக போர்க்கொடி

நீதிமன்றங்களில் திமுக எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காத நிலையில், பணிந்துபோக அரசு தயாராக இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புவதற்கு திமுக முழு அளவில் தயாராகி இருக்கிறது. ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவர்கள் தலைவர்கள் குரல் கொடுப்பார்களா என்று கேள்வி எழுந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. ஆக, இரண்டு கும்பலும் எதிர்ப்புக் குரல் கொடுப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம், உச்ச நீதிமன்றத்தில் தற்போது […]
ஐயப்பனுக்கு ஒரு நீதி… முருகனுக்கு ஒரு நீதியா..? திருப்பரங்குன்றத்தில் மதத் தீ

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் எப்போதும் போல் ஏற்றப்பட்டுள்ளது. அதேநேரம், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தீபத்தூணில் தான் விளக்கேற்ற வேண்டும் என்று துடித்த இந்து முன்னணியினர் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்ற அவமதிப்புக்கு அஞ்சாமல் 144 தடையுத்தரவு போட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த திமுக அரசுக்கு ஒரு பக்கம் பாராட்டு கிடைக்கும் நிலையில், பாஜகவினர் ஆட்சியைக் கலைக்க குரல் கொடுத்துவருகிறார்கள். இது குறித்து […]
பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் ரெடி…? அண்ணாமலை, சரத், நயினாருக்கு எந்த தொகுதி..?

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி இன்னமும் முடிவு செய்யாத நிலையில் பாஜகவினர் பட்டியலே தயார் செய்திருப்பது அரசியல் கலவரமாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் எப்படியும் 40 இடங்கள் பெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதன்படி இப்போதே 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கன்னியாகுமரி, சென்னை மாவட்டங்களில் தலா மூன்று தொகுதிகளும், திருநெல்வேலி, மதுரை, சிவகாசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா இரண்டு […]
டாக்டர் ராமதாஸ்க்கு பாஜக கொடுத்த அல்வா. திமுக கூட்டணிக்கு ரெடி?

டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையில் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டிப்பிடித்துள்ளது. கட்சியின் தலைவர் நானே தான் என்று இருவரும் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் கட்சியும் சின்னமும் அன்புமணிக்கு சொந்தம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பது டாக்டர் ராமதாஸை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. பா.மக.வில் அதிகாரப் போட்டி நடப்பதற்கு முக்கிய காரணமே அண்ணாமலைதான். கடந்த தேர்தலில் அன்புமணி பாஜகவை தேர்வு செய்தார் அன்புமணி. அதற்கு நன்றிக் கடன் போன்று பாமக கட்சியும், சின்னமும் அன்புமணிக்கு சொந்தம் என்று தேர்தல் […]
தொழிலாளர் சட்டத்துக்கு வெண்குடை வேந்தர் ஸ்டாலின் கப்சிப். கண்சிவக்கும் கம்யூனிஸ்ட்கள்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கடந்த வாரம் 4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை வெளியிட்டது. 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து இந்த சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பல்வேறு அம்சங்கள் தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாக இருப்பதாக கூறி இடதுசாரி கட்சிகளும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை அமைதி காப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டம் அறிவிப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. பாஜக அரசின் புதிய தொழிலாளர் […]
உதயநிதி பிறந்த நாளை காலி செய்த விஜய்.. ஜனநாயகன் Vs நிஜநாயகன்

இன்று உதயநிதியின் பிறந்த நாள். இதை கொண்டாட திமுகவினர் தீயாக வேலை செய்துவந்தனர். திமுக ஐடி விங் சார்பில், ‘கழகத் தலைவரின் திராவிட மாடல் அரசுக்குத் தூணாய் துணை நிற்கும் துணை முதலமைச்சர், அறிவுத் திருவிழா நடத்திய ஆற்றல்மிக்க இளம் தலைவர், கருத்தியல் களங்களில் கொள்கை வீரர்களைத் தயார் செய்யும் கழக இளைஞர் அணிச்செயலாளர், உதயநிதிக்கு 49-வது பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வணங்கி மகிழ்கிறோம்…’’ என்று கொண்டாட்ட அறிவிப்பு வெளியிட்டார்கள். தமிழகமெங்கும் ஜனநாயகனுக்கும் நிஜநாயகனுக்கும் போட்டி என்று […]
ஆளுநருக்கு காலக்கெடு இல்லை..? மீண்டும் ஸ்டாலின் போர்க்கொடி

ஆளுநருக்கு மசோதாவை கிடப்பில் போட்டுவைப்பதற்கு சட்டரீதியாக எந்த உரிமையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று கூறிவிட்டது. இதையடுத்து இது பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடி வருகிறார்கள். இந்த விஷயத்தை விடப்போவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆவேசம் காட்டியிருக்கிறார். இதுகுறித்து ஸ்டாலின், ‘’சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள […]

