1 கோடி வாக்காளர்கள் அவுட். நடுக்கத்தில் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது மிகச்சரியாக 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டை விட கிட்டத்தட்ட 40% மக்கள் தொகை அதிகம் கொண்ட பீகார் மாநிலத்தில் மொத்தமே 65 லட்சம் வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டு இருந்தார்கள். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1 கோடி பேர் நீக்கம் என்பது திமுகவுக்கு மிகப்பெரும் சிக்கல் என்கிறார்கள். இது குறித்துப் பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’தமிழ்நாட்டில் […]
காந்தி திட்டத்துக்கு மூடு விழா..? காங்கிரஸ் போராட்டம் எடுபடுமா.?

காந்தியின் பெயரில் நடைபெற்றுவந்த 100 நாள் வேலைத் திட்டத்துக்கு புதிய பெயர் சூட்டி நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றிவிட்டது. இதற்கு அதிமுக துணை போயிருக்கிறது. விவசாய சட்டம் போன்று இதனை வாபஸ் பெறுவதற்குப் போராடுவோம் என்று காங்கிரஸ் கொதிக்கிறது. ஆனால், எடுபடுமா என்பதுதான் விடை தெரியாத கேள்வி. காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025 அவையின் மையப்பகுதிக்கு வந்து தாள்களைக் கிழித்து எறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு இடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை […]
ஆண்களுக்கு குவார்ட்டர், பெண்களுக்கு தங்கம்… தயாராகிறது திமுக தேர்தல் அறிக்கை

தேர்தல் சூடுபிடித்துவிட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் 11 கொண்ட குழுவை அமைத்துள்ளது திமுக. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு துறை சார்ந்தோரிடமும் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கையை உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று திமுகவும் 10% கூட நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. இந்நிலையில் வரும் தேர்தலுக்கு திமுக என்னவெல்லாம் அறிக்கையில் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று பல்வேறு யூகங்கள் […]
வேட்புமனுவுக்கு மல்லுக்கட்டு. இபிஎஸ் வியூகத்துக்குத் தடுமாறும் பாஜக

யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வேட்புமனு விநியோகத்தைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. முதல் நாளில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை வாங்கிச் சென்றதைக் கண்டு பாஜக பதறி நிற்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், விருப்பமனு வழங்க ஏதுவாக விருப்பமனு விநியோகம் தொடக்க நிகழ்ச்சி, சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் பொது மற்றும் தனி தொகுதிகள் அனைத்துக்கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்களை […]
ஸ்டாலினுக்கு தங்க சிம்மாசனம் இல்லையா..? என்ன ரேட் தெரியுமா..?

திருவண்ணாமலை திமுக வழங்கிய வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டைலாகக் ‘கால் மேல் கால்’ போட்டு அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல் கடும் எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது. திருவண்ணாமலை மலைப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த […]
சீமான் கைது ஆவாரா..? திமுக நபருக்கு கும்மாங்குத்து

காருக்கு வழிவிடாமல் போன வழக்கறிஞரை திருமாவளவனின் ஆட்கள் அடித்து உதைத்தார்கள். அதே பாணியில் எதிர்ப்பு கோஷம் போட்ட திமுக பிரமுகரை சீமானே காரில் இருந்து இறங்கி அடித்துள்ளார். அதோடு நாம் தமிழர் தம்பிகளும் அடி பொளந்து கட்டியிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், கோ.பொன்னேரி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சர்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சீமான் […]
கேரளாவில் பாஜக வந்தாச்சு. கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவுரை..?

பாஜகவால் நுழையவே முடியாத இரண்டு மாநிலங்கள் என்று கேரளா மற்றும் தமிழ்நாட்டை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரத்தை பாஜ கைப்பற்றிவிட்டது. அடுத்து தமிழகம்தான் என்று தாமரைக் கட்சியினர் குஷியாகிறார்கள். இந்த தோல்வி குறித்து அரசியல் ஆர்வலர்கள், ‘’ஒருபுறம் அதானி, அம்பானிகளை வசைபாடிக் கொண்டே, மறுபுறம் தாங்கள் ஆளும் கேரளாவில் அதே அதானி, அம்பானிகளுக்கு வெண்சாமரம் வீசுவது, தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டே, தங்கக் கடத்தலில் ஈடுபடுவது, இந்திய பங்கு சந்தையை விமர்சித்துக் கொண்டே, வெளிநாட்டு […]
ஸ்டாலினை மிரட்டிய சர்வே. சீமானுக்கு இத்தனை தொகுதியா..?

தேர்தலும் சர்வேயும் பிரிக்கவே முடியாத ஒன்று. சர்வே முடிவுகள் சாதகமாக இருக்கும்போது மட்டும் நம்பிக்கை வைக்கும் கட்சிகள் எதிர்ப்பாக இருக்கும்போது, இவையெல்லாம் பொய் என்று அடித்துவிடுவார்கள். ஆனாலும், சர்வேக்களை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் தனியார் பத்திரிகை ஒன்று திமுகவுக்காக சர்வே எடுத்தது. 200 தொகுதிகளை வெல்வோம் என்று திமுகவும் 210 தொகுதிகள் வெல்வோம் என்று அதிமுகவும் கூறிவரும் நிலையில் சர்வே நிலவரம் அப்படியெல்லாம் இல்லை. விஜய் தனியே நின்றால் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று […]
விஜய் கட்சிக்கு சின்னம் ரெடி. செங்கோட்டையன் மீண்டும் ஃபெயில்

சமீபத்தில் மேடையில் பேசிய செங்கொட்டையன், ‘தவெக சின்னத்தைப் பார்த்துவிட்டேன்’ என்று கூறியிருந்தார். அது என்ன சின்னம் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் ஈரோட்டில் அவர் தேர்வு செய்யும் இடங்கள் எல்லாமே அரசினால் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுவது சிக்கலாகிவருகிறது. வரும் தேர்தலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் உட்பட 10 சின்னங்கள் கேட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டது. ஆட்டோ அல்லது விசில் சின்னத்துக்கு பலரும் ஆதரவாக இருக்கும் நிலையில், விஜய்க்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது, எளிதில் எல்லோரிடமும் கொண்டுபோய் […]
அமித்ஷாவுக்குப் போட்டியாக ராகுல் பராக். சூடு பிடிக்கும் தமிழக தேர்தல்

என்.டி.ஏ. கூட்டணி மூலம் இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்று அமித்ஷ நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதேநேரம், சத்தமே இல்லாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ராகுலும் பிரியங்காவும் களம் இறங்குவதற்கு விறுவிறுப்பான வேலைகள் நடந்துவருகின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் இருவரும் முக்கிய நட்சத்திரங்களாகத் திகழ்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி 3ஆவது வாரத்தில் இருந்து ஒவ்வொரு நபராக மாற்றி மாற்றி தமிழ்நாடு […]

