News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள்! எங்கு தெரியுமா?

உலகபிரசித்தி பெற்ற மும்பை சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள் இருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   திருப்பதி லட்டு விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சத்தி விநாயகர் கோவில் லட்டு விவகாரம் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.   மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து பக்தர்கள் வழிபட்டு செல்வது […]

லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா..?  மேயர் பிரியா பொறாமை லீலைகள்

சென்னைக்கு அழகான பெண் மேயர் பிரியா கிடைத்திருக்கிறார், மழை வெள்ளத்தில் மக்களுடன் நிற்கிறார் என்றெல்லாம் மக்கள் பெருமைப்பட்டு வரும் நேரத்தில், தன்னை விட கலக்கலாக லிப்ஸ்டிக் போட்டிருந்த காரணத்திற்காக சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதரான மாதவி பணியிட மாற்றம் செய்திருப்பதாக வந்திருக்கும் செய்தி கலங்கடிக்கிறது. கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தபேதார் மாதவி போட்டிருந்த லிப்ஸ்டிக் மேயர் பிரியாவை விட அழகாகவும் கலர் தூக்கலாகவும்  இருந்ததாம். எனவே, பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். […]

நாகரிகக் கோமாளியா கவர்னர் ஆர்.என்.ரவி..? மீண்டும் தி.மு.க.வுடன் மோதல்

கவர்னருடன் டீ பார்ட்டியில் கலந்துகொண்டு திடீரென தி.மு.க. இணக்கம் காட்டியது. இதையடுத்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் பொன்முடி பூச்செண்டு கொடுத்து வரவேற்கவும் செய்தார். இந்த நிலையில் செக்யூரிலரிசம் பேசிய கவர்னருக்கு தி.மு.க.வினர் கடுமையான எதிர்ப்பு காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை எனப்படும் செக்யூலரிசம் என்பதே ஐரோப்பிய சிந்தனை. இந்தியாவுக்கு ஏற்றது இல்லை என்று கவர்னர் வழக்கம் போல் வம்பிழுக்கும் பேச்சை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இதற்கு தி.மு.க.வினர், ‘’கவர்னர் பதவி ஐரோப்பியக் கருத்து தான். […]

தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட காலாண்டு விடுமுறை! மாணவர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.   விடுமுறை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் தேர்வு எழுதிவிட்டு வரும் விடுமுறைக்காக காத்திருக்கும் மாணவர்கள் விடுமுறை நீட்டிக்கப்படதா என்று ஏங்குவதும் உண்டு.   தமிழகத்தில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலாண்டு தேர்வுகள் முடிவுக்கு வரும் நிலையில், செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையில் விடுமுறை என்று […]

தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை!

பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் வெற்றி பெற்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.   பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான துளசிமதி, நித்யஸ்ரீ, மணிஷா மற்றும் வீரரான மாரியப்பன் ஆகியோருக்கு மொத்தம் ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் […]

திருப்பதி லட்டு விவகாரம்: பவன்கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி!

லட்டு விவகாரம் குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதால் வருந்துவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாணிடம், நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.   செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது மெய்யழகன் திரைப்படம். கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடிப்பில் தயாராகி உள்ள இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் மொத்த படக்குழு ஈடுபட்டுள்ளது.   படப்ரமோஷனுக்காக ஆந்திராவிற்கு சென்ற கார்த்தியிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்டு வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கார்த்தி நகைச்சுவையாக அது ரொம்ப சென்சிட்டிவ் எனக்கு […]

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: திரியை பற்ற வைத்த தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழக அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றம் யாருக்கு ஏற்றம் யாருக்கு ஏமாற்றம் என்று பேசியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.   சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.   தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து பேசிய அவர், அமைச்சரவை மாற்றம் என்பது அமைச்சர் உதயநிதிக்கு ஏற்றமாகவும், அண்ணன் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கு என்று தெரிவித்தார். இதில் யாருக்கு ஏற்றம், யாருக்கு ஏமாற்றம் என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க […]

2 உயிர்களை பலி வாங்கிய கூகுள் மேப்! என்ன நடந்தது தெரியுமா?

கூகுள் மேப் காட்டிய வழியில் பயணித்த போது கார் ஆற்றில் கவிழ்ந்து 2பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கோமாளி திரைப்படத்தில் கூகுள் மேப் காட்டிய வழியில் செல்லும் யோகிபாபு பல்வேறு இன்னல்களை சந்திப்பதையும், ஆட்டோக்காரருக்கு தெரியாத வழியா என்று ஜெயம்ரவி அவரை சரியான இடத்திற்கு கொண்டு செல்வதுமான காட்சிகள் இப்போது இந்த செய்திக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.   வழி தெரியாத இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆண்ட்ராய்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக கூகுள்மேப்பில் முகவரியை டைப் […]

திருமாவின் அட்மின் அர்ஜுனாவா..? ரவிக்குமாரை களம் இறக்கிய தி.மு.க.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவருமே தி.மு.க. ஆதரவாளராக இருக்கும் நிலையில் மற்றவர்களை அமைதிப்படுத்திவிட்டு ஆதவ் அர்ஜுனாவை மட்டும் பேச வைத்திருக்கிறா திருமாவளவன். அவரும், ’வரும் 2026 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. சந்திரபாபு நாயுடு கூட்டணிக் கட்சியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டது போன்ற பெருந்தன்மை இங்கே இல்லை. வட மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் தி.மு.க.வால் ஜெயிக்கவே முடியாது’ என்று வெளிப்படையாகப் பேசி வருகிறார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா குறித்து […]

ஆண்மைக் குறைவுக்கு மோகன் ஜி அரஸ்ட்…! திருமா விவகாரத்தை திசை திருப்ப பா.ம.க.வுடன் மோதலா?

vதிருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு விவகாரம் பற்றி எரிகிறது. இப்போது லட்டுக்குள் குட்கா பாக்கெட், பீடித் துண்டு இருப்பதாக தினம் ஒரு செய்தி வெளியாகிறது. இந்த நிலையில் ஆண்மைக் குறைவு கருத்தடை மாத்திரை பழனி பஞ்சாமிர்தத்தில் கலந்ததாக குற்றம் சாட்டிய சினிமா இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிருப்பது பா.ம.க. வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. சமீபத்தில் மோகன் ஜி ஒரு வீடியோவில், ‘’நாம பெருசா நினைக்கிற ஒரு கோவிலில் இருக்கிற பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்ததாக […]