ஆம்ஸ்ட்ராங் படுகொலை மர்மம் அம்பலம். வெளியான ஒப்புதல் வாக்குமூலம்

அரசியல் படுகொலை என்று சென்னையை நான்கு நாட்கள் பாடாய் படுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் முழு உண்மைகளும் ஒப்புதல் வாக்குமூலமாக வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னே ஆளும் கட்சி இல்லை என்றாலும் அரசியல் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி தனது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்களால் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அன்று இரவே ஆறு பேர் கொண்ட கும்பல் சென்னை அண்ணா நகர் காவல் […]
சாம்சங் ஊழியர்கள் மீண்டும் ஸ்ட்ரைக்..? சி.ஐ.டி.யூ எச்சரிக்கை.

ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த சாம்சங் ஊழியர் போராட்டம் முதல்வர் ஸ்டாலின் தலையிட்ட பிறகு அவசரம் அவசரமாக முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி நிர்வாகம் செயல்படுவதாக சி.ஐ.டி.யூ. கொதிப்பு காட்டியிருக்கிறது. இது குறித்துப் பேசும் சி.ஐ.டி.யூ. சங்கத்தின் தலைவர் முத்துக்குமார், ‘’கடந்த ஒரு வார காலமாக சாம்சங் நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் முறையாக முழுமையாக பணியில் அமர்த்துவதற்கு மாறாக 150 தொழிலாளிகளுக்கு ஒரு வாரத்திற்கு வகுப்பு என்கிற முறையில் உற்பத்தியில் ஈடுபடுத்தாத ஒரு […]
அஜித்துக்கு கொம்பு சீவும் உதயநிதி…. கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்

இத்தனை காலமும் சினிமா படப்பிடிப்புக்கு இடையில் ஏகப்பட்ட கார் பந்தயத்தில் கலந்துகொண்டவர் நடிகர் அஜித். இத்தனை காலமும் இல்லாத வகையில் திடீரென அஜித்துக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களை அரசியல் களத்தில் இறக்கும் முயற்சி என்ற விமர்சனம் எழுந்துள்ளது துபாயில் நடைபெற உள்ள ஜிடி3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் நடிகர் அஜித் பங்கேற்க இருக்கிறார். இதற்காக, அஜித் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் கூட்டணி உறுதியா..? இப்படி ஆதரவு கொடுக்கிறாரே..

நடிகர் விஜய் மாநாடு போட்டதிலிருந்து தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அவரை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு ஆதரவு கொடுத்திருப்பது மிகப்பெரும் அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இன்று எடப்பாடி பழனிசாமி, ‘’மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் விஜய் பேசுகிறார். அதிமுக சிறப்பாக செயல்படுவதால் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்று நினைக்கிறேன். விஜய் அவருடைய கட்சித் தலைவர், அவர் கட்சி கொள்கையை சொல்கிறார் இதில் விமர்சிக்க என்ன […]
விஜய் கட்சியில் பிசிறு காளியம்மாள், துரைமுருகன்..? கோபத்தில் கொதிக்கும் சீமான்

விஜய் மாநாடு நடத்தும் வரையிலும் வாய்க்கு வாய் என் தம்பி, என் தம்பி என்று விஜய் மீது பாச மழை பொழிந்துவந்தார் நாம் தமிழர் சீமான். அரசியல் கட்சி தொடங்கியதும் சீமானும் விஜய்யும் கூட்டணி சேர்வார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அவர் பெரியாரை தலைவர் என்றும் திராவிடம் என்னுடைய ஒரு கண் என்றதுமே கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றாகிப் போனது. இதையடுத்து, நாம் தமிழர் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் காளியம்மாளும், சீமானிடம் அவ்வப்போது திட்டு […]
விஜய்க்குப் பயந்து ஓடிவந்த அண்ணாமலை. லண்டன்ல படிச்சும் கலாச்சாரப் பொய் எதுக்கு..?

விஜய் மாநாடு நடத்தியதிலிருந்து அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. தி.மு.க.வுடன் மோதுவதற்கு அண்ணாமலையால் மட்டுமே முடியும் என்று நம்பியிருந்த ஒரு கூட்டம் இப்போது விஜய் பக்கம் சாய்வதைக் கண்டு அண்ணாமலை அதிர்ந்துபோயிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அதனால் இத்தனை நாட்களும் ஒழுங்காக படித்துக்கொண்டிருந்த அண்ணாமலை வேண்டுமென்றே பட்டாசு பிரச்னையைக் கிளப்பி கூட்டத்தை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றமே பட்டாசுக்கு தடை போட்டிருக்கும் நிலையில் இன்று அண்ணாமலை, ‘’பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் […]
சிறுத்தைக்கும் அணிலுக்கும் ரகளை ஆரம்பம். விஜய்யின் அம்பேத்கர் அரசியலுக்கு உரிமைப் போர்

குடும்ப ஊழல் ஆட்சிக்கு நாங்கள் எதிரி என்று விஜய் நேரடியாக ஆளும் தி.மு.க.வை விமர்சனம் செய்தார் என்றாலும் இப்போது தி.மு.க.வினரை விட சிறுத்தைகளே அதிகம் தாக்குதல் நடத்துகிறார்கள். அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடிவரும் திருமாவளவனுக்கு விஜய் நேரடியாக அழைப்பு விடுத்து அவமானப்படுத்தியிருப்பதாக சிறுத்தைகள் பல்லைக் கடிக்கிறார்கள். அரசியல் அணுகுண்டு என்று விஜய், ‘ஆட்சியில் பங்கு’ தர்றோம் என்று மற்ற கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார். அம்பேத்கர் படத்தை வைத்து அரசியல் செய்து அரசியல் செய்துவரும் திருமாவளவனின் வாக்கு வங்கியை விஜய் […]
கருவாட்டு சாம்பார் விஜய்… சேதாரக் கடுப்பில் சீமான்

விஜய் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட தினத்திலிருந்து தினமொரு வாழ்த்து அனுப்பிக்கொண்டே இருந்தார் நாம் தமிழர் சீமான். அதோடு, கொள்கைகள் சரியாக இருந்தால் கூட்டணி வைப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மாநாடு தொடங்கிய நேற்றைய தினமும் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், மாநாடு முடிந்த பிறகு விஜய் மீது சீமானுக்கு கடும் அதிருப்தி உண்டாகியிருப்பதை அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது. ஏனென்றால் சீமான் ஏற்றுக்கொள்ளாத பெரியாரை தன்னுடைய முதல் தலைவராக அறிவித்தார் சீமான். அதோடு பெருந்தலைவர் காமராஜரை […]
அ.தி.மு.க.வைப் பார்த்துப் பயப்படுகிறாரா விஜய்..? இப்படி ஆதாரம் காட்டுறாங்களே…

மாநாட்டு மேடையில் நடிகர் விஜய் பா.ஜ.க.வை மென்மையாகவும் தி.மு.க.வை கடுமையாகவும் எதிர்த்துப் பேசினார். சீமானைக் கூட பெயரைச் சொல்லாமல் எதிர்த்துப் பேசினார். ஆனால், அ.தி.மு.க.வை ஒரு இடத்திலும் விமர்சனம் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆரை பாராட்டியே பேசினார். இதையடுத்து அ.தி.மு.க.வைப் பார்த்து அஞ்சுகிறார் விஜய் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குஷியாக இருக்கிறார்கள். இது குறித்துப் பேசும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ‘’விஜயகாந்த் கட்சியை உடைத்து அவரை ஓட்டாண்டி ஆக்கியவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. இது எல்லோருக்கும் தெரியும். […]
விஜய்க்கு விழுந்த முதல் விக்கெட். திருமாவுக்கு ஆசைப்பட்டா கிருஷ்ணசாமி மாட்டுகிறார்.

விஜய் அரசியல் மாநாட்டில் கண்டிப்பாக தி.மு.க. எதிர்ப்பு இருக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது என்றால், அது ஆட்சியில் பங்கு என்ற புதிய கோட்பாடு. விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கவர்வதற்காக போடப்பட்ட ஸ்கெட்சியில் புதிய தமிழகம் சிக்கியிருக்கிறது. இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒருபோதும் கூட்டணியில் பங்கு கொடுப்பது குறித்துப் பேசுவதே கிடையாது. மைனாரிட்டி அரசாக கருணாநிதி ஐந்து ஆண்டு காலத்தையும் நிறைவு செய்தாரே தவிர, […]

