News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ரசிகரை தாக்கிய சிவாஜியின் மகன்! அதிர்ச்சி வீடியோ!

நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசனின் 97வது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை அடையாறு தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள சிவாஜி மணிமண்டபத்தில் சிவாஜி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.   தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிவாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிவாஜியின் மன்களான ராம்குமார், பிரபு, நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் […]

அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறார் செந்தில் பாலாஜி..? சிறையில் இருந்து தப்பிக்க ஒரே வாய்ப்பு

அமைச்சராகப் பதவியேற்ற சந்தோஷம் கலைவதற்குள் செந்தில்பாலாஜி தலைக்கு மேல் நீதிமன்றத்தின் கத்தி ஊசலாடத் தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை, அதனால் சாட்சியங்கள் கலைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தோடு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் அமைச்சரான காரணத்தினால் அவர் சாட்சியை கலைப்பார், அதனால் இவருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள விவகாரம் காரணமாக செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே […]

ரஜினிகாந்த்துக்கு நடந்த ஆபரேஷன் இது தான்… எப்போது டிஸ்சார்ஜ்..?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் நலம்பெற்று திரும்ப வேண்டுமென தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த நிலையில் அவருக்கு நடைபெற்ற சிகிச்சை விபரம் தெரியவதுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இன்று நடந்த சிகிச்சையில் அடி வயிறுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது என்றும் இருதய மருத்துவர் சாய் சுதீஷ் தலைமையிலான […]

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை! நடந்தது என்ன?

திருமணம் என்ற பந்தத்தில் ஆண், பெண் இணைவது வாடிக்கையானது. ஆனால் சில சமயங்களில் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பும், மற்றொரு தரப்பில் ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது. பல்வேறு நாடுகளில் இதற்கு தடையும் கிடையாது.   ஆனாலும் வித்தியாசமாக இன்னொரு திருமண பந்தம் இருக்கிறதென்றால் அதுதான் சோலாகாமி என்ற முறை. அதாவது தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் முறை. வெளிநாடுகளில் மணமகள், மணமகன் இன்றி தன்னைத்தானே திருணம் செய்து […]

லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்!

லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வந்த நிலையில் அதனை செப்டம்பர் மாதம் வெளியிட்டது எதற்காக என்று சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.   திருப்பதி லட்டு விவகாரம் சர்வதேச பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். […]

மகனுக்கு ஐ.போன் பரிசளித்த குப்பை வியாபாரி! என்ன விலை தெரியுமா?

ஐ.போன் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு என்றே சொல்லலாம். லட்சங்களில் விற்கப்படும் ஐ.போனை கையில் வைத்திருந்தாலே கவுரவம் என்று நினைக்கும் பலர் புதிய மாடல் அறிமுகமானால் உடனே அதையும் வாங்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள். ஆசையிருந்தாலும் லட்ச ரூபாய் கொடுத்து ஐ.போனை வாங்க வேண்டுமா என்று குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆன்ட்ராய்டு போன்களை வாங்கி பயன்படுத்துபவர்கள்தான் அதிகம்.   இந்தநிலையில் சமூக வலைதளத்தில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. பெயர் தெரியாத […]

உதயநிதிக்கு ஆதரவா..? பன்னீரை வெளுத்தெடுக்கும் எடப்பாடி டீம்

கருணாநிதியை எதிர்த்து கட்சி தொடங்கினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.  அதே வழியில் கருணாநிதியை கடுமையாக எதிர்த்து கட்சி நடத்தினார் புரட்சித்தலைவி ஜெயலலிதா. அதே வழியில் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை எதிர்த்து கட்சிநடத்திக்கொண்டு இருக்கிறார். எந்த நிலை வந்தாலும் திமுகவினருக்கு எதிராக நின்று எதிராக அரசியல் செய்வது தான் அ.தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு. இந்த நிலையில் அரசியல் நாகரீகம் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கொஞ்சம் கூச்சமே இல்லாமல் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி கூறி பதிவு வெளியிட்டிருப்பது கடும் சர்ச்சையை […]

இன்பநிதிக்கும் வாழ்த்து சொல்வாரா ’தியாகி’ கனிமொழி..? வருத்தத்தில் ஆதரவாளர்கள்

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது உறுதியானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே தி.மு.க.வின் பவளவிழா கொண்டாட்டத்தில் கனிமொழி கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இதை உறுதி செய்வது போன்று உதயநிதி பதவியேற்பு விழாவுக்கு தாமதமாக வந்து எதிர்ப்பை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி உதயநிதி பதவியேற்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘’உதயநிதிக்கு நான் அட்வைஸ் செய்ய அவசியம் இல்லை’’ என்றும் கூறியிருக்கிறார். முன்னதாக சி.ஐ.டி. காலனிக்கு வந்து உதயநதி நேரடியாக கருணாநிதி படத்துக்கு மாலை போட்டுவிட்டு புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டுச் […]

புஸ்ஸி ஆனந்த் அடாவடிக்கு ரெய்டு விட்ட விஜய். இப்படி எல்லாம் நடக்கிறதா..?

விஜய் கட்சியின் கொடியில் இருக்கும் யானை விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் கூறியதை அடுத்து விஜய் கூடாரத்தில் பெரும் கொண்டாட்டமே நடக்கிறது. இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு கடும் எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது. தஞ்சாவூரில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ‘’மாநாட்டுக்கு வர்றது முக்கியம். லீவு கிடைக்கலைன்னா வேலையே போனா என்ன? வேலையே வேண்டாம்ன்னு தளபதிய பாக்க வர்றவன் தான் உண்மையான தொண்டன்’’ என்று பேசியது செம வைரலாகியது. ‘’வேலை வேண்டாம்னு […]

செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநிலத்துக்கு மாத்துங்க… ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்பு

ஊழல் வழக்குக்கு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜியை தியாகி என்று வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதோடு அவருக்கு முந்தைய துறையே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், அவரது வழக்கு தமிழகத்தில் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை என்ற கருத்தை எழுப்பியிருக்கிறார் டாக்ட்ர் ராமதாஸ். பா.ம.க. தலைவர் ராமதாஸ் இதுகுறித்து, ‘’சட்டவிரோத […]