News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இளைஞரின் உயிரை பறித்த ரெயில் படிக்கட்டு பயணம்! சைதாப்பேட்டையில் அதிர்ச்சி!

சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரைஸ் சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்தபடி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்து கொண்டிருந்தார்.   அப்போது காலை நீட்டியபடி அமர்ந்திருந்த நிலையில் திடீரென்று அவரது இரண்டு கால்களும் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த நடைமேடையில் உரசியதாக தெரிகிறது. அதில் நிலைதடுமாறி நடைமேடையில் விழுந்த அவர் சுமார் 150 […]

இயக்குனரான சூர்யா – ஜோதிகாவின் மகள்! விருது வென்றதால் குவியும் வாழ்த்து!

நட்சத்திர தம்பதியான சூர்யா ஜோதிகாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 17 வயதில் தியா என்ற மகளும், 14வயதில் தேவ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் தந்தை சிவக்குமாருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த இவர்கள், தற்போது மும்பையில் குடிபெயர்ந்துள்ளனர்.   தாய், தந்தை போலவே மகள் தியாவுக்கும் சினிமா மீது அதிக ஆர்வம் உள்ளது என்பது தற்போது நடந்திருக்கும் சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது.   திரிலோகா இன்டர்நேஷனல் பிலிம்பேர் விருது நடத்திய போட்டியில் […]

ஜக்கி வாசுதேவ் மீது விசாரணைக்குத் தடை..! கொண்டாட்டத்தில் ஈஷா மையம்

ஈஷா யோகா மையம் போன்ற இடங்களில் ராணுவம், போலீஸார் நுழைவது சரியாக இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டியிருப்பதை அடுத்து ஜக்கி வாசுதேவ் நிம்மதிப் பெருமூச்சு விடுத்துள்ளார். ஒரு சாதாரண விஷயத்திற்கே உச்சநீதிமன்றத்தில் போய் தடை வாங்குகிறார்கள் என்றால் மிகப்பெரிய தப்பு நடந்திருக்கிறது என்று கொதிக்கிறார்கள், ஈஷா யோக மைய எதிர்ப்பாளர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு கோவை வடவள்ளி […]

பா.ஜ.க. கூட்டணிக்கும் துண்டு போடுகிறாரா திருமாவளவன்..? சர்ச்சையாகும் ராஜாஜி கட் அவுட்

கருணாநிதி நாணயம் வெளியீட்டுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் இணக்கமாக ஸ்டாலின் இருந்துவருகிறார். அதே பாணியில் ராஜாஜி கட் அவுட் மூலம் பா.ஜ.க. கூட்டணியிலும் இடம் போட்டு வைக்கிறாரா திருமாவளவன் என்று எக்கச்சக்க கேள்விகள் எழுந்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் ‘மது – போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டுத்’ திடலில் மூதறிஞர் ராஜாஜியின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. மது விலக்குக்கைக் கொள்கையாகக் கொண்டவர் என்பதாலே அவருக்கு கட் அவுட் வைக்கப்பட்டிருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார். ஆனால் […]

தாயின் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகன்! என்ன தண்டனை தெரியுமா?

பெற்ற தாயை கொலை செய்த மகன் அவரின் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூரம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த கொடூரனுக்கு ரொம்பவும் ஸ்பெஷலான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அது என்னவென்று விரிவாக பார்க்கலாம்.   கடந்த 2017ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் குச்சொரவி என்ற இளைஞர் தனது 63 வயது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தாயை கொடூரமாக கொலை செய்த குச்சொரவி, அவரின் உடலின் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளார். இதயம் மற்றும் விலா எலும்புகளை எண்ணெயில் வறுத்து […]

த.வெ.க. முதல் மாநாடு பூஜை! எப்போது எங்கே தெரியுமா?

தமிழக வெற்றிக்கழகத்தோட முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில இந்த மாதம் (அக்டோபர்) 27ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு மூச்சுடன் மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் முன்னதாக தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.    இதனால் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட வேண்டும் […]

பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமனம்!

தமிழக அரசின் உத்தரவின்படி முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி உயர்கல்வித்துறை செயலாளராக இருந்து வந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் உயர்கல்வித்தறை செயலாளராக கோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.   * கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார்.   * தமிழ்நாடு தலைமை தேர்தல் […]

ஈஷா மையத்துக்கு சீல் வைக்கப்படுமா..? இரண்டாம் நாளாக விசாரணை

கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா மையத்தில் இரண்டாவது நாளாக விசாரணை தொடர்வதையடுத்து, இந்த மையத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி முதல் பிரதமர் வரையில் பலரையும் வரவழைத்து பிரமாண்டமாக விழா நடத்தும் அளவுக்கு ஜக்கி வாசுதேவ் வலிமையுடன் இருப்பதால் விசாரணையில் இருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு சீல் வைத்தால் மட்டுமே நியாயமான விசாரணை நடத்த முடியும் என்கிறார்கள். நில அபகரிப்பு, அனுமதியின்றி கட்டிடம் கட்டுதல், வசூல் மோசடி, ஆட்கள் காணாமல் போதல், […]

இஸ்ரேல் போரில் அமெரிக்காவும் குதிச்சாச்சு… வேலை இழப்பு அச்சத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள்.

இஸ்ரேல் பாலஸ்தீன் இடையிலான போரை நிறுத்துவதற்குப் பல நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அதேநேரத்தில் லெபனான் ஈரான் என ஒவ்வொரு நாடாக இஸ்ரேல் தாக்கத் தொடங்கியது. இதற்கு ஈரான் மிகக் கடுமையாக பதிலடி கொடுத்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக களத்தில் குதித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஈரானின் […]

டேட்டிங் செல்ல சம்பளத்துடன் விடுமுறை: எந்த நாட்டில் தெரியுமா?

தனியார் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் செய்தி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது எந்த நாடு என்பது குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம்.   விடுமுறைகளில் பல வகை உண்டு. மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, சாதாரண விடுப்பு. இவைகளில் குறிப்பிட்ட காலவரம்பை தாண்டினால் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்து விடுவார்கள். சில நிறுவனங்களில் மட்டும் சுற்றுலா செல்ல சிறப்பு விடுப்பு விடுவதும் உண்டு. ஆனால் தாய்லாந்தில் […]