என்னாச்சு.. வேல்முருகனும் தி.மு.க.வுக்கு எதிராப் பேசுறாரு..? எடப்பாடி கூட்டணிக்குப் போகிறாரா..?

கூட்டணிக் கட்சிகள் என்றாலே வாயைப் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம். ஆட்சியில் பங்கு என்று விடுதலை சிறுத்தைகளும், சாம்சங் விவகாரத்தில் கம்யூனிஸ்ட்களும் தி.மு.க.வுக்கு எதிராகக் குரல் கொடுத்தன. அதே வரிசையில் இப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் தி.மு.க.வுக்கு எதிராக கம்பு சுற்றியிருக்கிறார். தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் என்பது சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்பதால் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் அவர், ‘’தமிழ்நாட்டின் நீர்வளத்தையும், நிலவளத்தையும் […]
கேப்டன் முகுந்துக்கு திட்டமிட்டு அவமானம்..? இப்போது போர்க் குற்றவாளி புகார்

அமரன் படத்தின் நாயகன் ஒரு பிராமணர் என்பதைக் காட்டாமல் திட்டமிட்டு ஏமாற்றினார்கள் என்ற சர்ச்சையே இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் முகுந்த் போர்க் குற்றவாளி என்ற அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்துப் பேசிய திருமுருகன் காந்தி மீது பா.ஜ.க.வினர் கடுமையாகப் பாய்ந்து தாக்குதல் நடத்திவருகிறார்கள். அமரன் படம் குறித்துப் பேசிய திருமுருகன் காந்தி, ‘’’அமரன்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், ‘இந்திய இராணுவத்தின் முகத்தை பார்’ என சொல்லி சுட்டுக்கொலை […]
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் .

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் இஸ்ரேலியன் கொல்லப்பட்டனர் . இதை தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றனர் . அதையடுத்து ஹமாஸ் ஆய்தக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதை தொடர்ந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட […]
11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை சிறையில் இருந்து பத்திரமாக மீட்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று (நவம்பர் 12) […]
மழைக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்! அசந்து போன பொதுமக்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தனது ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது என்று மகிழ்ச்சியடைய நேரமே இல்லாமல், வீடுகளுக்குள் புகுந்துவிடும் மழைநீரை எப்படி வெளியேற்றுவது, எங்கே தஞ்சமடைவது, வீட்டு உபயோகப் பொருட்களை எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணமே மக்கள் மனதில் மேலோங்கி வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் என்ற வாதம் முன்வைக்கப்படும் போதிலும், பொதுமக்கள் நெகிழி பைகளையும், நெகிழி பொருட்களையும் ஆங்காங்கே வீசி, மழைநீரை உறிஞ்ச முடியாத அளவுக்கும், […]
த.வெ.க. பிரமுகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு! என்ன விஷயம் தெரியுமா?

தமிழக வெற்றிக்கழகத்தின் தேனி மாவட்ட தலைவர் லெஃப்ட் பாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது கட்சித் தலைமை மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தன்னுடைய கட்சியின் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வரப்போகும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்த கட்சியின் […]
ஏர் இந்தியாவுடன் இணைந்தது விஸ்தாரா ஏர்லைன்ஸ்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியது . அதன்பின்னர் டாடாவின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஏர் இந்தியா – விஸ்தாரா இணைப்பு முறைப்படி அமலுக்கு வந்துள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைந்ததையடுத்து, விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா விமானங்களாக வானில் […]
புரோ கபடியில் இன்று பெங்களூரு காளை – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

11-வது புரோ கபடி லீக் போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் களமாடியுள்ளன . இதில் ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும் . இந்தநிலையில் , இந்த தொடரில் இன்று 2 கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நேற்று மும்பா – அரியானா அணிகள் […]
திருமாவளவனுக்கு தில் இருக்குதா..? அவன் இவன் என்று பா.ஜ.க. ஆவேசம்

திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்யாமல் தனியே நின்றால் தான் பா.ஜ.க.வின் உண்மையான கள நிலவரம் தெரியவரும். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வாக்கு வங்கியே கிடையாது என்று திருமாவளவன் சவால் விட்டிருந்தார். இதற்குப் பதிலடியாக திருமாவளவன் தனியே நின்று அவரது செல்வாக்க நிரூபிக்க வேண்டும் என்பதுடன் அவன், இவன் என்று ஏகவசன்ம் பேசியிருப்பது விடுதலைச் சிறுத்தைகளைக் கொதிக்க வைத்திருக்கிறது. இது குறித்து பா.ஜ.க. தலைவர் நாராயணன் திருப்பதி, ‘’2001 லிருந்து பாஜக திமுகவுடனும் கூட்டணி வைத்து பார்த்தான், […]
ஏரோப்ளேன் இல்லாம ஏழைகளுக்கு இப்படியொரு வாக்குறுதி?! பிரதமர் மோடி சுட்ட சூப்பர் வடை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து ஆளுக்கு 15 லட்சம் பிரித்துக்கொடுப்போம் என்று கூறினார் மோடி. அது நடக்கவில்லை. பண மதிப்பிழப்பு நேரத்தில் இந்த சட்டம் தவறு என்று தெரியவந்தால் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். மக்கள் அவதிப்பட்டார்களே தவிர கருப்புப் பணமும் தீவிரவாதச் செயலும் குறையவில்லை. இப்படி மோடி தொடர்ந்து பொய் வாக்குறுதிகள் கொடுத்துவருவதால் அவர் பேசுவதை எல்லாம் வடை சுடுவதாகவே சொல்கிறார்கள். இந்த நிலையில் ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தல் பிரசார […]

