ஜானகி எம்.ஜி.ஆருக்கு எடப்பாடி பழனிசாமி பிரமாண்ட விழா… இணைப்புக்குப் பச்சைக் கொடியா..?

இன்று அண்ணா தி.மு.க. சார்பில் புரட்சித்தலைவியின் துணைவியார் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி, ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். இது இணைப்புக்கு பச்சைக் கொடியா என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணா திமுக வின் பெருமை மிகு அடையாளமான ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை 1950களில் அதாவது புரட்சித்தலைவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு வி.என்.ஜானகியின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டது ஆகும். அவர் தானமாக எழுதிக் கொடுத்த இடமே […]
திருமாவளவனுக்கு இப்படி ஒரு அவமானமா..? நோட்டாவிடம் மெகா தோல்வி

மகாராஷ்டிரா தேர்தலில் ராகுல் காந்தியின் இண்டியா கூட்டணிக்கு எதிராக நான்கு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய திருமாவளவன், எல்லா தொகுதிகளிலும் நோட்டாவை விட மோசமான வாக்குகள் வாங்கியிருக்கிறார். இண்டியா கூட்டணிக்கு எதிராக வேலை பார்த்த திருமாவளவனே, தலித் ஓட்டுகளை பிரிச்சு காங்கிரஸை தோக்கடிச்சுட்டாங்க என்று இரட்டை வேடம் போட்டிருப்பது குரூர நகைச்சுவையாகியுள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் போக்கர்டான் தொகுதியில் 97 வாக்குகள், அவுரங்காபாத் கிழக்கில் 57 வாக்குகள், புலம்பிரி தொகுதியில் 216 வாக்குகள் மற்றும் பிம்பிரி தொகுதியில் 351 வாக்குகள் […]
ரஜினியுடன் சீமான் இரண்டரை மணி நேரம் சந்திப்பு .? சங்கி என்றால் நண்பன் என்று புரியவைத்தாரா..?

என்னை யாராவது சங்கீ என்று சொன்னால் செருப்பைக் கழட்டி அடிப்பேன் என்று சொன்ன நாம் தமிழர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துத் திரும்பியதும், ‘சங்கீ என்றால் நண்பன் என்று அர்த்தம் சொன்னதையும் முடிச்சுப் போடுகிறது மீடியா. வரும் 2026 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக சீமானைப் பயணிக்க வைக்கும் முயற்சி நடப்பதாக பேச்சு எழுந்துள்ளது. அதேநேரம் இது சாதாரண சந்திப்பு என்கிறது நாம் தமிழர் டீம். இது சாதாரண சந்திப்பு என்றால் அங்கே ரவீந்திரன் துரைசாமி […]
தர்ம யுத்தத்திற்கு தயாராகும் கனிமொழி..? 2026 தேர்தல் கணக்கு

உதயநிதி அணியினர் பேச்சுப்போட்டி நடத்தி தமிழகத்தில் பரபரப்பு ஊட்டியது போன்று கனிமொழி வினாடி வினா போட்டி நடத்தி தனி யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார். இது உதயநிதியுடன் நேரடிப் போட்டி என்றே பார்க்கப்படுகிறது. கட்சிக்குள் தன்னுடய இருப்பைக் காட்டும் வகையில் பள்ளி மாணவர்களை கருணாநிதி சமாதிக்கு அழத்துச்சென்றுள்ளார். இது குறித்து கனிமொழி, ‘’முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதமாக நடத்தப்படும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியில், இன்று நடைபெறும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்கள் மற்றும் […]
மகாராஷ்டிராவில் மோடிக்கு மெகா வெற்றி, ராகுல் தலைமைக்கு ஆபத்து..?

பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி மகாராஷ்டிரா மக்கள் கொடுத்திருக்கும் வெற்றி கிடையாது அதானியின் உதவியுடன் தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் என்றாலும், ராகுல்காந்தியின் திட்டமிடல் தோல்வியே இதற்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க, ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவாரின் என்.சி.பி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ், சிவசேனா (யு.பி.டி) உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியான மஹா […]
எடப்பாடி பழனிசாமிக்குத் துரோகம் செய்தாரா வேலுமணி..? உண்மையில் நடந்தது என்ன?

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் கள ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருநெல்வேலிக் கூட்டத்துக்கு வந்த எஸ்.பி.வேலுமணி ரகசியமாக நயினார் நாகேந்திரனை சந்தித்து கூட்டணி குறித்துப் பேசியதாக செய்திகள் வந்தன. எடப்பாடிக்குத் துரோகம் செய்கிறா எஸ்.பி.வேலுமணி என்று கட்சிக்குள் கடும் கொந்தளிப்பு நிலவியது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எஸ்.பி.வேலுமணி, ‘’நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் […]
ரஜினிகாந்த்தை திடீரென்று சந்தித்த சீமான்! பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திடீரென்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (நவம்பர் 21) சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு சீமான் பதில் அளித்தார். அவர் […]
சீமானுக்கு ரஜினி ஆதரவு..? கோட்டை விட்ட விஜய்

சூப்பர்ஸ்டார் விவகாரத்தில் ரஜினிக்கும் விஜய்க்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூகவலைதளத்தில் கடுமையாக மோதிக்கொண்டார்கள். ஆனால், விஜய் கட்சி தொடங்கிய நேரத்தில் பெருந்தன்மையுடன் வாழ்த்து தெரிவித்தார். அதனை விஜய் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் இன்று சீமான் சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஏனென்றால், ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்ன நேரத்தில் சீமான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் இங்கு வாழலாம் ஆனால், எங்களை ஆள […]
அங்கன்வாடியில் உணவருந்திய சிறுமி பலி! என்ன ஆச்சு?

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகளில் அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அங்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம், மனம் மற்றும் சமூக வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுத்து குழந்தை பராமரிப்பு பழக்கத்தினை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உப்பேரிக்குளம் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடியில் மோனிகா என்ற சிறுமி பயனாளியாக […]
ஸ்டாண்ட் வித் அதானி… முட்டுக்கொடுக்கும் மோடியின் வைரல் ஹேஸ்டேக்

உலகம் முழுக்க அதானியின் ஊழல் நாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், பா.ஜ.க.வினர் மட்டும், ‘ஸ்டான் வித் அதானி’ என்று ஒரு ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகிறார்கள். அதாவது, இது அதானி மீதான தாக்குதல் இல்லையாம், இந்திய தொழிலதிபர் மீது தாக்குதல் ஆகவே, இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க.வினர், ‘’ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரை தமிழ்நாடு, சட்டிஸ்கர், ஆந்திரா,ஒடிஸா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் மின்சார கொள்முதலில் அந்தந்த மாநில அரசுகளோடு […]

