விஜய் கட்சிக்குத் தாவும் ஆதவ் அர்ஜுனா… புத்தக வெளியீட்டு விழாவில் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்திருக்கும், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்பது உறுதியாகியிருக்கும் நிலையில், திருமா ஆப்செண்ட் ஆகியிருக்கிறார். இந்த கூட்டத்திலேயே விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர இருப்பதாக அறிவிப்பு வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த புத்தக விழா குறித்து சர்ச்சை எழுந்த நேரத்தில் முதலில் பொதுவிழாவில் கலந்துகொள்வதில் தவறு இல்லை என்றும் ஓர் ஆண்டுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்வு என்றும் திருமாவளவன் கூறினார். […]
படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலி !

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் லோகோநெட்-சாரி பகுதியில் உள்ள டாராக் தீவில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்தது, இந்த விபத்தில் 20 பேர் நீரில் மூழ்கி பலியான நிலையில் மேலும் பலர் நீரில் முழ்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது . தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் நீரில் மூழ்கியவர்களை தேடி வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். […]
அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்த மக்கள்!

திண்டுக்கல் அருகே , அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்து நூதன போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை அடுத்த ராஜக்காபட்டி அருகே லட்சுமிநாயக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ள. இந்த கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் சாலை சேதமடைந்து மண் பாதையாக மாறியது. இதையடுத்து சாலையை சீரமைக்கக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் […]
விராப் கோலியை புகழ்ந்து தள்ளிய பில் சால்ட்

18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூபாய் 639.15 கோடிக்கு விற்கப்பட்டனர் . இதில் இங்கிலாந்து வீரரான பில் சால்ட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூபாய் 11.50 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியில் பில் சால்ட் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் […]
50 துண்டுகளாக்கப்பட்ட காதலி! வனவிலங்குகளுக்கு விருந்தளித்த காதலன்!

லிவ் இன் உறவில் இருந்த காதலியை 50 துண்டுகளாக வெட்டி அவற்றை காட்டில் உள்ள விலங்குகளுக்கு இரையாக்கிய கொடுமை ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. திருமணம் செய்து கொள்வதற்கான ஒத்திகை என்ற பெயரிலும், புரிதலுக்கான காலக்கெடு என்ற பெயரிலும், திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்ற முற்போக்குவாதிகள் என்ற அடையாளத்திலும் இருக்கும் இளம்வயதினர் சிலர் லிவ் இன் உறவில் இருந்து வருகிறார்கள். இவர்களில் சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். பலர் உறவு சலித்துப் போய் பிரிந்து விடுகிறார்கள். […]
போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.

இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.அதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் . நுற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் […]
அரசியல் ஞான ஒளி இல்லாத ராமதாஸ்க்கு தி.மு.க. நெத்தியடி

ராமதாஸ்க்கு வேற வேலை இல்லை என்று ஸ்டாலின் சொன்னதையடுத்து வட தமிழகமே குலுங்கும் என்று பா.ம.க.வினர் பயமுறுத்தினாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது குறித்து பேசிய ராமதாஸ், ‘ஸ்டாலினுக்குப் போல் எனக்குப் பிரகாசமான அரசியல் ஞான ஒளி இல்லை என்ன செய்வது?’ என்று கிண்டல் செய்திருந்தார். அதோடு ராமதாஸும் அன்புமணியும் தொடர் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்கள். இன்று காவிரி பாசன மாவட்டங்களில் 52,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம்: ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு […]
சீமானுக்குப் போட்டியாக வேல்முருகன்..? அரசியல் சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை

மாவீரர் நாளை முன்னிட்டு வழக்கமாக திருமாவளவனும் சீமானும் மட்டுமே மேடை போட்டு பேசுவார்கள். அதன்படி மதுராந்தகத்தில் சீமான் கூட்டம் நடத்திய அதே நேரத்தில் திருச்சியில் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஒரு பெருங்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த கூட்டத்திலும் எக்கச்சக்கப் பேர் கலந்துகொண்டதையடுத்து யாருக்கு அதிகக் கூட்டம் என்று சமூகவலைதளத்தில் மோதல் நடந்துவருகிறது. சீமானுக்கு எதிரியாக வேல்முருகனை நிறுத்தி சச்சரவைத் தொடங்கியிருக்கிறார்கள். மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய சீமான் பேச்சுக்கள் வழக்கம் போல் வைரலாகிவருகின்றன. ‘’சேர […]
இந்திய வம்சாவளி பேராசிரியர் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக நியமனம் .

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பல இடங்களை கைப்பற்றி , முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றர். இதை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கான ஆட்களை நியமித்து வருகிற நிலையில் , அமெரிக்காவின் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா என்பவர் நியமனம் செய்யப்படுகிறார் என டிரம்ப் அறிவித்து உள்ளார். அமெரிக்காவை மீண்டும் சுகாதார நாடாக பட்டாச்சார்யா மற்றும் அவருடைய குழுவினர் உருவாக்குவார்கள் என டிரம்ப் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. […]
மாமல்லபுரத்தில் விபரீதம்: கார் மோதி 5 பெண்கள் பலி

மாமல்லபுரம் அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள், கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு ஈ.சி.ஆர். பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் பெண்கள் கூட்டம் கூட்டமாக மாடு மேய்த்து செல்வது வழக்கம். அதன்படி இன்று (நவம்பர் 27) மதியம் 5 பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஈ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் அமர்ந்தபடி மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 […]

