பா.ஜ.க. நெருக்கடியை தாக்குப் பிடிப்பாரா எடப்பாடி பழனிசாமி..? மிரட்டும் ரெய்டு வேட்டை

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கைப்பாவையாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்றவை இயங்கிவருகின்றன என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகள் வைத்துவருகின்றன. இது உண்மை என்று நிரூபிப்பது போன்று எதிர்க்கட்சிகள் மற்றும் முரண்டு பிடிக்கும் கட்சிகள் மீது மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். ஆனால், வரும் தேர்தலில் கூடுதல் எம்.எல்.ஏ.க்களை பெற வேண்டிய கட்டாயத்துக்கு பா.ஜ.க. ஆளாகியுள்ளது. […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் அண்ணாமலை..? விஜய் எஸ்கேப்

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான மனு தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கி, 17ம் தேதி முடிவடைகிறது. இங்கு மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட வாய்ப்பு அதிகம் என்றாலும் முதல்வர் ஸ்டாலினை கலந்துபேசி முடிவு அறிவிப்போம் என்று […]
நிலநடுக்கத்தில் நடிகை செய்த துணிச்சலான செயல்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இன்று (ஜனவரி 7) காலை நேபாள எல்லையையொட்டி ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொருட்படுத்தாது நடிகை மணிஷா கொய்ராலா செய்த துணிச்சலான விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் நேபாள எல்லையொட்டி இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 7.1 ஆக பதிவானது. இந்நிலக்கத்தை தொடர்ந்து 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். முக்கியமான பொருட்களை கையில் […]
அண்ணாமலை மனைவி வாங்கிய சொத்து மதிப்பு 70 கோடியா… 7 லட்சமா..? விறுவிறு மோதல்

அரசியல்வாதிகளின் சொத்து ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பைக் கிளப்புபவர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இப்போது அவரது மனைவி சொத்து வாங்கிய விவகாரம் சமூகவலைதளத்தில் சக்கை போடு போடுகிறது. ஆனால், இதுவரை அண்ணாமலை இது குறித்து வாய் திறந்து பேசவே இல்லை. சமீபத்தில், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இவர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் மச்சான் என்பது தெரியவந்தது. இந்த செந்தில்குமாரிடம் இருந்து மட்டும் 10 கோடி ரூபாய் ரொக்க பணம், […]
கவர்னர் எதிர்ப்பு இல்லீங்க… எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. போராட்டம்

தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும் ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் இன்று காலை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கவர்னருக்கு எதிர்ப்பு என்று சொல்லப்பட்டாலும், இந்த போராட்டத்தின் நோக்கம், யார் அந்த சார் என்று தமிழகத்தைக் கலக்கும் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. இன்று சென்னையில் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட […]
பொம்பள சீமானா பிரேமலதா..? என்ன இப்படியெல்லாம் பேசுறார்..?

இன்றைய அரசியல்வாதிகளில் எக்குத்தப்பாகப் பேசுவதில் சீமானைப் போன்றவர் பிரேமலதா. வாய்க்கு வந்ததை எல்லாம் கருத்தாகப் பேசுபவர். தேசியகீதத்திற்காக கவர்னரின் வெளிநடப்பு விவகாரத்தில் அவர் பேசியிருக்கும் கருத்து செம வைரலாகி வருகிறது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அனுமதி மீறி தே.மு.தி.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ‘’கவர்னர் என்ன வருசத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் வர்றாரு. தேசிய கீதம் பாடச் சொன்னா […]
பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகத்தில் மொத்தம் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பணி மற்றும் கல்வி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ள பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களில் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பண்டிகை காலங்களில் தமிழக போக்குவரத்துக்கழகம் […]
எடப்பாடி பழனிசாமியின் யார் அந்த சார் பாட்ஜ்..? திட்டமிட்டு திசை திருப்பினாரா கவர்னர்..?

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்பதற்காக இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள், ‘யார் அந்த சார்..?’ என்ற பேட்ஜ் சட்டையில் அணிந்துகொண்டு சட்டசபைக்கு வந்தார்கள். யார் அந்த சார் என்ற எடப்பாடியின் குரல் ஆக்ரோஷமாக ஒலிக்கும் என்பதாலே, அதை திசை திருப்பவே கவர்னர் சட்டசபையைப் புறக்கணித்து தி.மு.க.வுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த காயத்ரி ஜெயராம், ‘’மீண்டும் திமுகவுக்கு உதவும் முயற்சியில் ஆளுநர். பிரச்சினையை […]
விஜய் அரசியல் ஆலோசகர் ஐ.ஆர்.எஸ். அதிகாரி..? பா.ஜ.க. தொடர்பு உண்மையா..?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் வந்த நேரத்தில் அவரது அரசியல் ஆலோசகராக அர்ஜுனமூர்த்தியை பா.ஜ.க. களம் இறக்கியது. அதேபோன்று இப்போது நடிகர் விஜய்க்கு ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜை பா.ஜ.க. களம் இறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்து திருச்சி சூர்யா, ‘’*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசகர்களாக இருவர் இருக்கிறார்கள். ஒருவர் 2016ல் *மாற்றம் முன்னேற்றம் அன்புமணி* என்று பாமகவிற்கு வேலை செய்த ஜான் ஆரோக்கியசாமி. தொண்டர்களுக்கு தெரியவில்லை என்றாலும் அரசியல் விமர்சகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இவர்தான் […]
இந்த ஆண்டும் ஆளுநர் தப்பியோட்டம்… தேசிய கீதத்துக்கு அவமானமா..?

2025 ஆண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று முறைப்படி தொடங்கியது. அரசு எழுதிக்கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாகப் படிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், கூட்டம் ஆரம்பித்த 3 நிமிடங்களில் அவையில் இருந்து வெளியேறி மீண்டும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார் ஆளுநர். கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் உரை என்பது சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்தது. இந்நிலையில் சுமார் 9 மணி 15 மணி அளவில் சட்டமன்ற கூட்டத்திற்கு ஆளுநர் வருகை தந்தார். அவருக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு […]

