சீமானுக்கு அண்ணாமலையின் பொங்கல் பரிசு..? டெபாசிட் வாங்க வைக்கும் திட்டம்

சீமானை தி.மு.க.வினர் தொடர்ந்து டெபாசிட் வாங்குவதற்கு வக்கு இல்லாத கட்சி என்று தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அந்த விமர்சனத்தை அடித்து நொறுக்குவதற்காக எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து விலகி நிற்பதாகக் கூறப்படுகிறது. தமிழக எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது. அதேபோல் மாவட்டச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டி அறிவித்துவிட்டார். அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்றதும் பா.ஜ.க. களத்தில் இறங்கி அதிக வாக்குகளை வாங்கி முக்கிய […]
நீட் அறிக்கைக்கு அடுத்து பரந்தூர், விஜய் அரசியல் டூர் ஆரம்பம்

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பொய்யாகப் பிரசாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்து தி.மு.க. ஏமாற்றிவிட்டது என்று த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் மக்களை சந்திக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது. விஜய் முதல் டூர் அதிரடி கிளப்பும் என்று எதிர்பார்க்கிறார்கள். விஜய் நீட் குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘’எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் […]
எங்கே சார் அந்த தமிழக அரசு லெட்டர்..? சர்ச்சையில் மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டம்

தென்மாவட்ட மக்களின் வளர்ச்சியின் மீது மிகுந்த அக்கறைக்கொண்டு மத்திய பாஜக அரசால் கொண்டு வந்த திட்டமான மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் ரயில்பாதை திட்டத்தை வேண்டாம் என்று தி.மு.க. அரசு எழுதிக் கொடுத்துவிட்டதாக மத்திய அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் […]
ராஜ்பவனுக்கு மான் பூங்கா மிரட்டல்..? கவர்னர் ரவிக்கு சிக்கல் மேல் சிக்கல்

இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியபோது, கவர்னர் மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறார். அரசால் தயாரிக்கப்படும் உரையை, அப்படியே வாசிக்க வேண்டும் என்பது தான் நடைமுறை; ஆனால் திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் தான், ஆளுநர் குறியாக இருக்கிறார் என்று குறிப்பிட்டார். அதோடு, முதல் ஆண்டு திராவிட அரசு எழுதிக்கொடுத்த உரையை முழுமையாகப் படித்தார். அதன் பிறகு வேண்டுமென்றே ஏதேனும் இடையூறு செய்துவருகிறார். சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் […]
விஜய் கட்சியை புஸ்ஸி தான் வைச்சிருக்காரா..? வைரலாகும் ஆப்சென்ட் சர்ச்சை

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொல்வதையே நடிகர் விஜய் செயல்படுத்துகிறார், விஜய்க்கென எந்த அரசியல் பார்வையும் பாதையும் இல்லை என்று சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று கூட்டப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை என்பது அரசியல் அதிர்ச்சியாகியுள்ளது. சென்னை பனையூரில் இன்று காலை தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாகவும், கட்சி உட்கட்டமைப்பு […]
சீமானுக்கும் பெரியாருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா..? போட்டுத் தாக்குறாங்கப்பா

பெரியாரை அப்பா அப்பான்னு கூப்பிட்ட அந்த பெண்தான் பிற்காலத்தில் அவர் மணந்த மணியம்மை. அப்பா என்று கூப்பிட்ட ஒரு பெண்ணை மணந்தவருக்கு மற்ற உறவுகளை மாற்று எண்ணத்தில் கண்டிப்பாக பார்த்திருப்பார் எண்ணியிருப்பார் என்றே யூகிக்க முடிகிறது. எனவே, காம இச்சையை பெற்றவளிடம் தீர்த்துக்கொள் என்று நிச்சயம் பெரியார் சொல்லியிருப்பார் என்று நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீமானுக்கும் அவரது மனைவி கயல்விழிக்கும் உள்ள உறவுகளை எடுத்துப் […]
விஜய் கட்சிக்கு 2% ஓட்டு..? ஆடியோ சிக்கலில் புஸ்ஸி ஆனந்த்

எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று அவரது ஆளுமையை நிரூபித்துக் காட்டினார். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தேர்தலில் விஜய் கட்சி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்டது. இந்த நிலையில் விஜய் கட்சி நிர்வாகி ஒருவருடன் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக சொல்லப்படும் ஆடியோ கட்சிக்குள் கடும் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது. அந்த ஆடியோவில் விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளராகக் கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி பேசுகையில், […]
அடேங்கப்பா… சீமான் இத்தனை பேரை திட்டியிருக்காரா..? பெரியார் காம இச்சை சர்ச்சை

ஒரு காலத்தில் பெரியாருக்கு விழா எடுத்த சீமான் சமீபத்தில் அவர் மீது கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்தார். அதாவது, “உன் காம இச்சையை தீர்த்துக்கொள்ள உன் தாயிடமோ, சகோதரியிடமோ உறவு வைத்துக்கொள்ளலாம் என்று கூறிய ஒருவரை எப்படி என் தலைவனாக ஏற்றுக்கொள்வது?’’ என்று கேள்வி கேட்டிருந்தார். இதையடுத்து பெரியார் ஆதரவாளர்கள், ‘’பெரியார் அப்படி எங்கேயும் கூறவே இல்லை. புராண, இதிகாசங்களில் இப்படியெல்லாம் முறை தவறிய உறவுகள் இருக்கின்றன என்று சுட்டிக் காட்டியிருந்தார். 1945ம் ஆண்டு குடியரசு கட்டுரையில் […]
பல்கலை வன்கொடுமைக்கு கவர்னரே பொறுப்பு..? கவன ஈர்ப்பு தீர்மானம். கவர்னரை இப்படி பேசிட்டாங்களே…

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகசட்டப்பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொண்டுவந்தகவன ஈர்ப்பு தீர்மானம் இன்று அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைமாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் கட்சியில்ஒருவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கண்டிக்கும்வகையில் சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர்.ஆனால், அவர்கள் பேசியது தொலைக்காட்சியில் காட்டப்படவில்லை. […]
அண்ணாநகர் பாலியல் வழக்கில் திடீர் டிவிஸ்ட். அ.தி.மு.க. நிர்வாகி கைது. அடுத்தது யார்..?

அண்ணா பல்கலைக்கழக வழக்கில், ‘யார் அந்த சார்?’ என்று அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், அதற்கு முன்னதாக நடந்த அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க.வினர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக உண்மையான குற்றவாளியைக் காப்பாற்றியது மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்த பெற்றோரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவி செய்த பெண் காவல் ஆய்வாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் 10 வயது […]

