சீமானுக்கு கவிஞர் அறிவுமதி சவால்… விவாதத்துக்கு ரெடியா?

பெரியாரை ஒழித்துக்கட்டுவது தான் என்னுடைய முதல் அரசியல் என்று தொடர்ந்து பெரியார் மீது சீமான் தாக்குதல் நடத்திவருகிறார். பெரியார் பற்றி என்னுடன் விவாதிக்க யார் வந்தாலும் சரி, நான் ரெடி என்று சவால் விட்டிருந்தார். சீமானுடன் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று திருமுருகன் காந்தி ஏற்கெனவே கூறியிருந்தாலும் அவரை சீமான் தரப்பினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் சீமானுக்கு அடைக்கலம் கொடுத்த கவிஞர் அறிவுமதி பெரியார் பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாகச் சொல்லி […]
விஜய் கட்சிக்குப் போகிறாரா காயத்ரி ரகுராம்..? அண்ணாமலை டீம் போலி நோட்டீஸ்

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே காயத்ரி ரகுராமுக்கும் அவருக்கும் மோதல் நிலவியது. ஒரு கட்டத்தில் காயத்ரி ரகுராமுக்கு எதிராக அண்ணாமலை வார் ரூம் தொடர் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அ.தி.மு.க.வுக்குத் தாவினார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு நல்ல பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக, ’யார் அந்த சார்’ போராட்டத்துக்கு வந்த காயத்ரி ரகுராமுக்கும் […]
சீமானை விட அதிக ஓட்டு வாங்கியிருக்கலாம். விஜய் அறிவிப்புக்கு புலம்பும் கட்சியினர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடப் போவது இல்லை என்று ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், இன்று பொதுச்செயலாளர் ஆனந்த் கடிதம் மூலம் அதனை உறுதி செய்திருக்கிறார். சீமான் கட்சியினர் விஜய் ஆட்களை வளைக்க முயற்சி செய்வதைத் தடுக்கவே கடிதம் மூலம் எச்சரிக்கை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இன்று ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் […]
அடுத்து எம்.ஜி.ஆர். ஆட்சி தான்… எடப்பாடி பழனிசாமியின் வீர வணக்க நாள்

எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி அத்தனை தலைவர்களும் இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். தி.மு.க. சார்பில் சேகர் பாபுவும் இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அடுத்தது எம்.ஜி.ஆர். ஆட்சிதான் என்று எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு வரும் 25ம் தேதி மாணவர் அணியின் சார்பில் வீரவணக்க நாள் கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், […]
ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை..? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்… அதிரடி நடவடிக்கை

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு இன்னமும் தீர்வு கிடைக்காத நிலையில், ஐஐடி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வெளிவந்து அதிர வைத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஐடி மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்த்தில் புகாரளித்தார். அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார், […]
மத்திய அமைச்சரின் அண்டப்புளுகு அம்பலம். மன்னிப்பு கேட்பாரா அண்ணாமலை..?

தமிழகம் மீதும் தமிழக மக்கள் மீதும் பா.ஜ.க. அரசுக்கு வன்மம் மட்டுமே இருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. மதுரை – தூத்துக்குடி திட்டம் பற்றி செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் சொன்ன பதில் அண்டப்புளுகு ஆகாசபுளுகு எனது அம்பலமாகியிருக்கிறது. இதை நம்பி போராட்டம் நடத்துவதாக அறிவித்த அண்ணாமலை எப்போது மன்னிப்பு கேட்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்துக்கு வந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘’மதுரை – அருப்புக்கோட்டை தூத்துக்குடி புதிய பாதை […]
எடப்பாடி பழனிசாமி மீது குருமூர்த்தி நேரடி அட்டாக். சீமானுக்கு செம பாராட்டு

எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இல்லை என்று துக்ளக் குருமூர்த்தி வெளிப்படையாகப் பேசியிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் அரசியல் நிலைப்பாடு கேள்வியாகியுள்ளது. துக்ளக் இதழின் 55வது ஆண்டு நிறைவு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றதில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அண்ணாமலை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பேசிய குருமூர்த்தி, ’’தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன என்றார்.திமுகவை தோற்கடிக்க வேண்டும் என […]
ஆளுநர் ரவிக்கு தி.மு.க. செம ரிவீட்டு… ராஜ்பவன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தமிழக ஆளுநர் ரவிக்கும் தி.மு.க. அரசுக்கும் ஆரம்பம் முதலே மோதல் நிலவி வருகிறது என்றாலும் கடந்த சுதந்திர தினத்தன்று யாரும் எதிர்பாராத வகையில் டீ பார்ட்டியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டது பெரும் திருப்பமாக கருதப்பட்டது. இந்த நிலையில் சட்டசபை நிகழ்ச்சிக்குப் பிறகு ஆளுநரும் தி.மு.க. அரசும் கடுமையான மோதலை தொடர்ந்து வருகிறது. முரசொலியில் ஆளுநருக்கு மிகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் தேசிய கீதத்தை முன்வைத்து வெளிநடப்பு செய்தார். இதை சட்டமன்றத்திலே கண்டித்த […]
அஜித் வெற்றிக்குக் காரணம் ஜெயலலிதாவா, உதயநிதியா? அரசியல் அக்கப்போர்

நடிகர் அஜித்குமார் கார் ரேசில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெற்றி அடைந்திருக்கும் நிலையில், இந்த வெற்றிக்குக் காரணம் உதயநிதியா… ஜெயலலிதாவா என்று அக்கப்போர் மோதல் நடக்கிறது. துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அஜித் குமார் 414ஆம் எண் கொண்ட காரின் ஓட்டுநராக கலந்துகொண்டார். அவருக்கு ‘ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது வழங்கப்பட்டது. அஜித்குமார் தனது […]
கடலில் பாலம் கட்டுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு..? கவர்னர் விழாவுக்குப் பிறகு அறிவிப்பு

தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்றார். இந்த விழாவில், மீனவப் பெண்கள் 64 பானைகளில் பொங்கல் வைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 65வது பானையில் பொங்கல் வைத்து பொதுமக்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பிறகு, வரவேற்பு நடனம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். தொடர்ந்து, அவர் மீனவ மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். அவர்களுடன் ஆளுநர் பேசுகையில், ‘’எனது இதயத்துக்கும் […]

