News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

உலக நாகரிகத்தின் முன்னோடி தமிழ் இனமே… முதல்வர் ஸ்டாலின் ஆதாரபூர்வ அறிவிப்பு

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதோடு, உலகின் பிற பகுதிகளில் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ் நாட்டில் இரும்பின் காலம் தொடங்கியதாக தமிழ் நாடு அரசு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று வரலாற்று சிறப்புமிக்க […]

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்னாச்சு..? இப்படி மாறிட்டாரே..

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொருத்தம் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால், அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் நிறையவே மாற்றம் தென்படுகிறது. அதாவது தி.மு.க அரசுக்கு சாதகமாக நடந்துகொள்வதைக் கண்டு பா.ஜ.க.வினர் அதிர்ந்து நிற்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தையொட்டி தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை சாட்டையடிப் போராட்டம் நடத்தினார். யார் அந்த சார் என்று அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். நடிகர் விஜய் நேரடியாக ஆளுநரை சந்தித்து புகார் கடிதம் கொடுத்தார். ஆனால், […]

ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை..? வலிப்பினால் உயிருக்கு ஆபத்து..? யார் அந்த 3 பேர்?

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் போலீஸ் காவலில் உள்ள நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக வந்திருக்கும் தகவலை அடுத்து உயிருக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் […]

விஜய்க்குக் கிடைத்த மெகா சக்சஸ்..? பரந்தூருக்கு அரசு திடீர் விளக்கம்

நடிகர் விஜய் பரந்தூர் போராட்டக்காரர்களை சந்தித்துப் பேசுவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரசிகர்கள் கலந்துகொள்ளவும் தடை செய்யப்பட்டது. ஆனாலும் போராட்டக்களத்துக்கு வந்த விஜய், ‘உங்களுக்குக் கடைசி வரை துணை நிற்பேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பரந்தூர் மக்களைப் பாதிக்காத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விஜய்க்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகவே அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழக அரசு சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், ‘’சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது […]

சீமான் படத்துக்கு செருப்படி… முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை?

தந்தை பெரியார் குறித்து வரலாற்று உண்மைகளுக்கு புறம்பாக கீழ்தரமாகவும், அவதூறாகவும் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை இன்று 30க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்திவருகிறார்கள். சீமான் வீடு முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி சென்னை முழுவதும் எக்கச்சக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்களும் ஓட்டப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சீமான் படத்துக்கு செருப்பு மாலை போடுவதுடன் ஃப்ளக்ஸை செருப்பால் […]

கோமியம் குடிக்கும் போராட்டம் நடத்துமா பா.ஜ.க.? மீண்டும் காமகோடி ஆதரவு

கோமியம் மிகப்பெரிய மருந்து என்று ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதற்குகடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் கோமியம் குறித்து ஆய்வறிக்கை இருக்கிறது,நானும் குடித்திருக்கிறேன் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்காமகோடி. இது குறித்து பேசும் மருத்துவர்கள், ‘’கோமியம் குறித்த புரளி வரும்போதெல்லாம் அமெரிக்காவில் patent வாங்கி  வைத்திருப்பதாகசொல்வது வழக்கம். அப்படித்தான் காமகோடியும் அதை மேற்கோள் காட்டியிருக்கிறார். உண்மையில்அமெரிக்கர்கள் யாரும் பேடண்ட் வாங்கவில்லை. நாக்பூரைச் சேர்ந்த Go VigyanAnusandhan Kendra என்ற பசுக்கள் ஆராய்ச்சி நிறுவனம் தான் ஆய்வு […]

அண்ணாமலைக்கு கட்சிக்குள் இத்தனை எதிரிகளா..? வானதி கூட மதிக்கலையே

அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி மட்டும் தரவில்லை என்றால் பா.ஜ.க.விலே இருக்கமாட்டோம் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பா.ஜ.க.வில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். இதுகுறித்து அண்ணாமலை, ‘’மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தேசியத் தலைவர் நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து […]

ஒர்க் ஃப்ரம் ஹோமுக்கு ஆப்பு. மூன்றாம் பாலினம் இல்லை. டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் நடந்த பதவியேற்பு விழாவில் அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி டொனால்டு டிரம்புக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது தனது குடும்ப பைபிள் மற்றும் ஆபிரகாம் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி அதிபராக பதவி ஏற்று கொண்டார் டிரம்ப். பதவியேற்றதும் டிரம்ப் பேசுகையில், ‘’அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது என்று கூறிய டிரம்ப், இந்த நாளில் இருந்து நமது […]

சீமான் போட்டோ… ஆடியோ எல்லாமே போலியா..? இப்படி பண்றீங்களேப்பா

பெரியார் மீது சீமான் விமர்சனம் வைக்கத் தொடங்கியபிறகு அவரது ஆதரவாளர்களே எதிர்நிலை எடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் சங்ககிரி ராஜ்குமார். வெங்காயம், பயாஸ்கோப் போன்ற படங்களை இயக்கியிருக்கும் ராஜ்குமார் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் பேசிய சங்ககிரி ராஜ்குமார், ‘’நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக பணி செய்து வந்தேன். அப்போது நண்பர் ஒருவர் பிரபாகரன் மற்றும் சீமான் புகைப்படங்களை கொடுத்து இரண்டையும் ஒன்றாக மேட்ச் செய்து தருமாறு கேட்டார். எதற்காக […]

ஐஐடி கேன்டீனில் கோமியம் சப்ளை..? இயக்குநருக்கு எவ்ளோ மூளை

  சென்னை மேற்கு மாம்பலம் கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, ‘”கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. தமிழர்கள் காசி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்” என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வட மாநிலங்களைப் போன்று தென் மாவட்டத்தையும் மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. காமகோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழ்நாடு மாணவர் கழகம், ’’கோமியம்  குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் […]