News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பொய் சொல்லி மாட்டிக் கொண்ட அமித் ஷா… அண்ணாமலைக்கு வார்னிங்?

அமித்ஷா இரண்டு நாட்களில் தமிழகம் வருவார், அதன் பிறகு மிகப்பெரும் அரசியல் மாற்றம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவிப்பு செய்திருந்தார். அதேபோன்று சி.ஐ.எஸ்.எஃப் 56-வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டத்தையொட்டி, தக்கோலம் பயிற்சி மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக தனி விமானம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் வந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்.டி.சி) செயல்பட்டு வருகிறது. ராஜாதித்ய […]

கையெழுத்து போட்ட மாஜியை கட்டம் கட்டிய இபிஎஸ்… பா.ஜ.க.வுக்கு நாக் அவுட்

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பாக போராட்டம் நடத்திவரும் வேளையில் அ.தி.மு.க.வும் இருமொழிக் கொள்கை என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வினர் மும்மொழிக் கொள்கைக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் பார்க்கும் நபர்களிடம் எல்லாம் கையெழுத்து வேட்டை நடத்திவருகிறார்கள். அந்த வகையில் மும்மொழி கொள்கைக்கு கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் ஆதரவு தெரிவித்து கையெழுத்துப் போட்டார். அப்போது அவர், ’’தி.மு.க. மொழியை வைத்து அரசியல் செய்கிறது. எனவே நான் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறேன்’’ […]

திரும்பவும் முதல்ல இருந்தா..? அமலாக்கத்துறை ரெய்டில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்

தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருக்கிறார் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2022ம் ஆண்டு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் செந்தில் பாலாஜி அண்மையில் ஜாமீனில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்தவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்று ஒரு வழக்கு பதியப்பட்டு அதுவும் நடந்து வருகிறது. […]

பிரேமலதா முதுகில் குத்தினாரா எடப்பாடி பழனிசாமி..? மக்களுடன் கேப்டன் மகன் பயணம் ஆரம்பம்

கடந்த பிப்ரவரி மாதம் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்தபோதே உறுதி செய்யப்பட்டது என்று பேசியிருந்தார். அதற்கு அப்போது அ.தி.மு.க. தரப்பில் எந்த பதிலும் சொல்லப்படவில்லை.’’ நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘’தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று நாங்கள் சொன்னோமா? யார் யாரோ சொல்வதை வைத்துக் கேட்காதீர்கள்’ என்று பிரேமலதா ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார். இதையடுத்து தே.மு.க.வினர் போர்க்கோலம் கொண்டுள்ளனர். சமூகவலைதளத்தில் ஆவேசம் காட்டி வருகிறார்கள். இதுகுறித்து தே.மு.தி.க.வினர், […]

விஜய்யைத் தடுத்து பாலிடிக்ஸ் செய்தாரா ஆதவ் அர்ஜூனா..? ஆவேசமாகும் ரசிகர்கள்.

முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சர்ப்ரைஸ் விசிட்டாக விஜய் ஆஜராக பிளான் வைத்திருந்தாராம். அப்படி விஜய் ஆஜராகி இருந்தால் ஒட்டுமொத்தக் கூட்டமும் மிரண்டு போயிருக்கும். அதோடு, அனைத்து மீடியாவும் விஜய்க்கு ஆதரவாக நின்றிருக்கும். இந்த நல்ல வாய்ப்பை ஆதவ் அர்ஜூனா தடுத்து நிறுத்தியதாக கட்சிக்குள் ஒரு பஞ்சாயத்து ஓடுகிறது. முதல்வர் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பார் என்று சொல்லப்பட்டுவிட்டாலும், அறிக்கை தயாரானதும் தானே இந்த விபரங்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிவிடுகிறேன் […]

எதிர்க் கட்சித் தலைவராக அசத்திய விஜய்… வைரலாகும் அறிக்கை… புலம்பும் ரசிகர்கள்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு ஸ்டாலின் கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நடிகர் விஜய் கட்ச்யின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டுள்ளார். அதேநேரம் தொகுதி மறு சீரமைப்பு குறித்து தெள்ளத் தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகர் விஜய். எதிர்க் கட்சித் தலைவராக செயல்படுவார் விஜய் என்று சொல்லும் அளவுக்கு அந்த அறிக்கை செம வைரலாகிவருகிறது. விஜய் விடுத்துள்ள அறிக்கையில், ‘நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு […]

இரண்டு அரசியல் அனாதைகள் திடீர் சந்திப்பு. நடுரோட்டில் ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன்.

மிஸ்டர் பணிவு, மூன்று முறை முதல் அமைச்சர் என்றெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் மீது மக்களுக்குக் கொஞ்சம் மரியாதை இருந்தது. தர்மயுத்தம் என்று தொடங்கி சசிகலாவை அம்பலப்படுத்தப் போகிறேன் என்று சொன்னவர் அப்படியே பல்டி அடித்து மீண்டும் சசிகலாவின் அடிமையாக மாறினார். அவரும் அ.தி.மு.க.வை கைப்பற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விட்ட டிடிவி தினகரனும் திடீரென ரோட்டில் சந்தித்துப் பேசியது செம கலாய்க்கு ஆளாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்துகொண்டே கட்சிக்குள் தொடர்ந்து வம்பு வழக்கு என்று […]

விஜய்க்கு குல்லா, இப்தார் விருந்து… இப்படி பண்றீங்களே புரோ..?

அரசியலில் நாங்கள் மற்ற கட்சி மாதிரி இயங்க மாட்டோம். எங்க ரூட்டே தனியாக இருக்கும். என்று தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கும் நேரத்தில் மிகப்பெரிய பில்டப் கொடுத்தார் நடிகர் விஜய். அவர் மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே குல்லா போட்டுக்கொண்டு இப்தார் கஞ்சி குடிப்பதற்குத் தயாராகி இருப்பதைப் பார்த்து அவரது ரசிகர்களே கொதிக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 7ம் தேதி ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் […]

வேலுமணி வீட்டுக் கல்யாணமா… பா.ஜ.க. மாநாடா..? இபிஎஸ் எஸ்கேப் அரசியல்

  கோவை ஈச்சநாரியில் அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான வேலுமணியின் மகன் விகாஸ் – தீக்‌ஷனா திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு பா.ஜ.க.வின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததும் ஏகப்பட்ட அரசியல் யூகங்களைக் கிளப்பியிருக்கிறது. வேலுமணி இல்லத் திருமண விழாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, நடிகை குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் ஏகப்பட்ட தலைவர்கள் வரிசையாக வந்து ஆஜரானார்கள். பா.ஜ.க. […]

விஜய்காந்த் சிலையா… குட்டிச் சாத்தானா..? பிரேமலதா அலப்பறைகள்

விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுக்கு எல்லாம் பிரேமலதா அன்புக்கட்டளை போட்டிருக்கிறார். அதாவது, அவரவர் ஏரியாவில் விஜயகாந்திற்கு சிலை ஏற்பாடு செய்ய வேண்டும். அதனை நானே திறந்து வைப்பேன். சிலை வைக்காத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்று நெருக்கடி கொடுக்கிறாராம். இதையடுத்து அவரது நிர்வாகிகள் அவர்களால் முடிந்த வரை செலவு செய்து விஜயகாந்திற்கு அவர்களுடைய சொந்த இடத்தில் குட்டிக் குட்டி சிலைகளை உருவாக்கிவருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணத்தில் பிரேமலதா திறந்த விஜயகாந்த் உருவச் சிலை கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ஏனென்றால், அந்த […]