அண்ணாமலை கால் ரிகார்டு வைத்திருக்கிறாரா..? அந்த சார் போலீஸ் அதிகாரியா?

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ என்பதை வெளியிடவில்லை என்றால் நானே வெளியிடுவேன், என்னிடம் எல்லா ரிகார்டும் இருக்கிறது, ஞானசேகரன் ஒரு போலீஸ் அதிகாரியிடமும் பேசியிருக்கிறார் என்று செய்தியாளர்களிடம் பேசிய விவகாரம் தீயாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க.வினர் ‘ஒரு பெண்ணுக்கு நடந்த அநியாயத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தன்னையே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை இப்போது தன்னிடம் யார் அந்த சாருக்கு ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறார். இவர் […]
அமாவாசையில் விஜய் போட்ட கையெழுத்து. வியூக அமைப்பாளர் ஆதவ் அர்ஜூனா

அமாவாசை நாளில் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜூனா இணைந்துவிட்டதுடன், அவரது நிறுவனம் த.வெ.க.வுக்கு தேர்தல் வியூகம் அமைப்பதற்கு ஒப்பந்தம் நிறைவேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுனா. தனது வாய்ஸ் ஆஃப் காமன் என்ற தேர்தல் வியூக நிறுவனத்தின் மூலமாக விசிக மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார். இதற்காக ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிகவின் துணை பொதுச்செயலாளர் […]
டெல்லியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகப் போர்க்கொடி..? ஸ்டாலின் கூட்டத்தில் முடிவு

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில், இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்ப தி.மு.க. முடிவு செய்திருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், ஆளுநருக்கு நடத்தை விதிகளை வகுக்க வேண்டும். மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் […]
பேட் கேர்ள் படத்துக்குத் தடை..? பார்ப்பனர்களுக்கு எதிரான படமா?

வெற்றிமாறன் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கும் ‘பேட் கேர்ள்’ படத்தில் ஹிருது ஹாரூன், சாந்தி பிரியா, அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது. பிராமணப் பெண்களை அவமானப்படுத்துவதால், இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லரில் பள்ளி வயதினரின் சேட்டைகள் காட்டப்படுகின்றன. வீட்டில் கட்டுப்பாடுகள் விதித்தால் பெண் பிள்ளைகள் எப்படியெல்லாம் எதிர்வினையாற்றுவார்கள் என்பதை ஒரு பெண் […]
எடப்பாடிக்கும் அடுத்து அண்ணாமலைக்கும் பாராட்டு விழா..? டங்ஸ்டன் அலப்பறைகள்

டங்ஸ்டன் சுரங்கத்தை தடுத்து நிறுத்தியதாக தொடர் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், போராடிய ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அடுத்து மத்திய அமைச்சருக்கு நாளை பாராட்டு விழா நடப்பதாக அண்ணாமலை அறிவிப்பு செய்திருக்கிறார். குடியரசு தினத்தன்று கவர்னரின் டீ பார்ட்டியை புறக்கணித்துவிட்டு டங்ஸ்டன் பாராட்டு விழாவில் கலந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் […]
மகா கும்பமேளாவில் சிதறிய உடல்கள்… நீராடப் போகாதீங்க

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இம்மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் அமைப்பின் கும்பமேளாவுக்கான நீராடும் தேதிகள் மற்றும் நல்ல நேரங்கள் ஜோதிடர்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்படி, நடப்பு கும்பமேளாவில் புனித நீராட 6 நாட்கள் மிகவும் புனிதமானவை என்றாலும் ஜனவரி 29 மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இன்றைய தினம் சுமார் […]
அல்லக்கை காளியம்மாள்… சீமான் திரும்பவும் கடிச்சிட்டாரு.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட காளியம்மாளை, பிசிறு என்றும் அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் சீமான் பேசியதாக ஓர் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவை உட்கட்சி விவகாரம் என்று சொன்னாரே தவிர, பொய்யான ஆடியோ என்று மறுக்கவில்லை. அதன் பிறகு சீமானும் காளியம்மாளும் பல இடங்களில் சந்தித்துக்கொண்டாலும் இன்னமும் அவர்கள் உறவு சீராகவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அதோடு, பிரபாகரனை சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் சீமான் என்று சீமானை மேடையில் […]
அடேங்கப்பா…. பா.ஜ.க. மலைக்க வைக்கும் வசூல் வேட்டை

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளைக் கொண்டு பெரும் புள்ளிகளை மிரட்டுவதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரம் மூலம் ஒரே ஆண்டில் கூடுதலாக 1,800 கோடிக்கும் அதிகமாக கிடைத்திருக்கும் செய்தி அதிர வைக்கிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில்,, ஆளும் பா.ஜ.க.வுக்கு தன்னார்வ பங்களிப்புகள் 2022-2023 ஆண்டில் ரூ.2,120.06 கோடியிலிருந்து 2023-2024 ஆண்டில் ரூ.3,967.14 கோடியாக அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது. இதில், […]
எம்.ஜி.ஆர். சவுக்குடன் விஜய் ஆணையிட்டால்..? இன்று நிர்வாகிகள் சந்திப்பு கேன்சல்

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப்பட மாட்டார்’ என்று எம்.ஜி.ஆர். பாடிய ஸ்டைலில் விஜய் அடுத்த படமான, ‘ஜன நாயகன்’ அறிவிப்பு வெளியானது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்நிலையில், இன்று நடப்பதாக இருந்த நிர்வாகிகள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தன்னுடைய 69 ஆவது திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என்பதை அறிவித்து விட்டார். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்துக்கு ‘ஜனநாயகன்’ என தலைப்பு வைத்ததுடன் […]
பிரபாகரனுக்கும் சீமானுக்கும் இம்புட்டுத்தான் உறவு… சாட்சி சொல்லும் ஒளிப்பதிவாளர்

விடுதலைப்புலிகளின் ஒரே நம்பிக்கை என்றே நாம் தமிழர் சீமானை தமிழக இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவர் பெரியாரை விமர்சனம் செய்யத் தொடங்கியதும் காட்சிகள் மாறின. பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ஒரு வெடிகுண்டு வீசினார். அடுத்ததாக பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன், “சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட […]

