News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எடப்பாடி தீர்மானத்துக்கு பன்னீர் ஆதரவு…. எம்.எல்.ஏ. பறிப்பு திட்டம் பணால்

சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த  நம்பிக்கை இல்லா தீர்மானம் என்று சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்காமல் பா.ஜ.க. வெளியேறியது, பா.ம.க.வும் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்தின் மூலம் பன்னீர் மற்றும் செங்கோட்டையன் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி போட்ட திட்டம் பணால் ஆகியுள்ளது. தமிழ்நாடு சட்ட மன்ற சபாநாயகர் அப்பாவு பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்று அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட பின்னரும், எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியில் அவரை […]

அண்ணாமலையை கைது பண்ணிட்டாங்க…. ஒண்ணும் ரியாக்‌ஷன் இல்லையே….

அண்ணாமலையை கைது செய்தால் தமிழகமே பற்றி எரியும் என்று தமிழக பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசுக்கு சவால் விட்ட நிலையில், இன்று அண்ணாமலையை கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழகம் முழுக்க எந்த ரியாக்‌ஷனும் இல்லை என்பது தமிழக பா.ஜ.க.வினரையே அதிர வைத்திருக்கிறது. தொடர்ந்து டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து போராட்டத்துக்குப் புறப்பட்ட நிலையில் அக்கரையில் வைத்து காவல்துறை அவரை கைது செய்தது. அதேபோல் தமிழிசை […]

செங்ஸ் சமாதானம் ஆவாரா..? இபிஎஸ் முயற்சிக்கு அண்ணாமலை முட்டுக்கட்டை

கட்சிக்குள் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாகப் பேசிவரும் நிலையில், செங்கோட்டையன் மேற்கொள்ளும் அமைதிப் புரட்சி பெரும் கலவரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பின்னே ஒவ்வொரு தலைவராக வெளியே வருவார்கள் என்று சொல்லப்படும் நிலையில், இன்று செங்கோட்டையனிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுகுறித்து பேசும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள், ‘’அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் மட்டுமே திமுகவை எதிர்க்க முடியும் என்பதில் டெல்லி உறுதியாக உள்ளது. அதேசமயம் பலம் வாய்ந்த அதிமுக […]

இஸ்லாமியர்கள் எச்சையா..? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஓவர் பேச்சு

குஷ்பு பற்றி கன்னாபின்னாவென்று பேசி கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இப்போது அவர் விஜய் தொப்பி அணிந்து நோன்பு திறந்த விவகாரத்தில்  இஸ்லாமியர்களைப் பற்றி கேவலமாகப் பேசி மாட்டியிருக்கிறார். இந்த விவகாரத்தை விஜய் கட்சியினர் கடுமையாக டிரோல் செய்துவருகிறார்கள். இது குறித்து பேசும் விஜய் கட்சியினர், ‘’விஜய் இஸ்லாமிய சகோதரர்களுடன் நோன்பு திறந்ததை தரம்தாழ்ந்து விமர்சித்ததோடு, உச்சமாக, இஸ்லாமிய சகோதரர்களை எச்சசோறு உண்பவர்கள் என்று வரம்புமீறிப் பேசினார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற தரம்கெட்ட பேச்சாளர்களை வளர்த்தெடுக்கும் […]

செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கம்..? இபிஎஸ் சீரியஸ் ஆலோசனை

ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பிரதமர் மோடியை வானளவுக்குப் புகழ்ந்திருக்கிறார். அதோடு நான் தெளிவான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன். வேடிக்கை மனிதரைப் போல் வீழ்ந்துவிட மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதையடுத்து செங்கோட்டையனை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். இது குறித்து பேசும் அ.தி.மு.க.வினர், ‘’செங்கோட்டையனுக்கு பாஜகவுக்கு போகும் திட்டம் இருந்தால் போக சொல்லுங்க. பொதுவெளியில் பேட்டி கொடுத்து கொண்டு […]

எப்போது செங்கோட்டையன் தர்மயுத்தம்..? சட்டமன்றத்தில் வெடித்த உட்கட்சி மோதல்

அண்ணா தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டயனுக்கும் நீண்ட நாட்களாகவே பனிப்போர் நடந்துவருகிறது. செங்கோட்டையன் மூலம் பா.ஜ.க. அரசியல் அதிரடி நிகழ்த்த இருப்பதாகவும் பா.ஜ.க. கூட்டணிக்கு வளைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணிப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டசபை நடந்துவரும் சூழலில் சபாநாயகர் அப்பாவுவை இரண்டாவது நாளாகவும் இன்று சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன். இதையடுத்து […]

பா.ஜ.க.வின் மூன்று அடிமைகள்… ஓட்டுக்காக தொப்பி நாடகம்

தி.மு.க.வுக்கு விழும் இஸ்லாமியர் ஓட்டுகளை எப்படியாவது வாங்கவேண்டும் என்பதற்காகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதை சொல்லப்படுவதை உறுதி செய்வது போன்று ரம்ஜான் நோன்பு குடித்து ஒரு பரபரப்பைக் கிளப்பிவிட்டார். அதே பாணியில் பா.ஜ.க.வின் கைப்படியில் பொம்மையாக ஆடிக்கொண்டிருக்கும் மூன்று கொத்தடிமைகளும் ரம்ஜான் நாடகம் போட்டிருப்பது காமெடி வைரலாக மாறியிருக்கிறது. மூன்று முறை முதலமைச்சர் என்றாலும் பக்கத்தில் கூட சேர்க்க மாட்டேன் என்று ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி அடித்தே விரட்டிவிட்டார். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் […]

10 கோடி ரூபாய் குப்பைக்குப் போயாச்சு. யார் ஐடியா சார் இது..?

இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இருக்கிறது. எல்லோருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. இந்த நிலையில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்புக்கு பணம் ஒதுக்கியது முட்டாள்தனமான யோசனை என்று அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் எக்கச்சக்க நல்ல திட்டங்கள் இருக்கிறது என்பதால், அதை மக்கள் நேரடியாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வகையில் […]

பிரிவினைவாதத்துக்கு ஆட்சிக் கலைப்பு..? ஸ்டாலினை மிரட்டும் நிர்மலா சீதாராமன்

இந்தியைத் திணிக்க முயலும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரூபாய்க்கான குறிபீட்டை ஸ்டாலின் நீக்கியிருப்பது தேச விரோதச் செயல் என்று மத்திய நிதியமைச்சர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நிர்மலா சீதாராமன், ‘’மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது, அரசியலமைப்பின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் உறுதிமொழிக்கு எதிரானதாகும் பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக […]

தமிழ்நாட்டுக்கு மானக்கேடு. குற்றவாளி யுவராஜை செருப்பால் அடிக்க வேண்டாமா..?

தமிழகத்தில் தலித்துகள் வாழவே முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சாதி வெறியால் கொடூரமாக கோகுல்ராஜ் என்ற இளைஞனை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ் பரோலில் வெளிவந்த நேரத்தில், அவரை கல்லால் அடித்துக் கொல்லாமல் ஹீரோ போன்று வாழ்த்தி கொண்டாடியிருக்கிறார்கள். இது தான் பெரியார் கனவு கண்ட தமிழகமா..? நடப்பது சமூக நீதி ஆட்சியா? என்ற கேள்விகள் எழுகின்றன. எந்த ஒரு குற்றவாளி என்றாலும் சிறையில் இருந்து […]