News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி..? ஜெயிலுக்குப் போகும் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடித்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாளை முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலுக்குப் போவதை யாராலும் தடுக்க முடியாது.   70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குப் […]

இந்தியர்களுக்கு கை விலங்கு, கால் விலங்கு. விஸ்வகுரு மோடிக்கு வீரம் இல்லையா?

இந்தியர்களை கை, கால்களில் விலங்கு போட்டு அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பிய விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்தது. அமெரிக்காவிலிருந்து கை விலங்கிட்டு அழைத்து வரப்பட்டவர்கள் கைதிகள் அல்ல மனிதர்கள் என களத்தில் இறங்கி மோடி அரசுக்கும் டிரம்ப அரசுக்கும் எதிராக ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். அமெரிக்காவில் போதிய ஆவணங்கள் இல்லை என 104 இந்தியர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு சர்வதேச குற்றவாளிகளை கடத்துவது போல இந்தியாவிற்கு ராணுவவிமாஙஅனுப்பியுள்ளது அமெரிக்கா. சாப்பிடும் போது கூட […]

சீமானுக்கு நீதிமன்றத்தில் நச் குட்டு. அடேங்கப்பா சொத்துப் பட்டியல்

செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் அவ்வப்போது வில்லங்க வார்த்தைகள் பேசுவதுண்டு. அப்படி இன்று, ‘மண்டையை உடைச்சுடுவேன்’ என்று எகிறினார். இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை […]

அண்ணா பல்கலை விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு செம வெற்றி… நீதிமன்றம் சொன்னது என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அண்ணா தி.மு.க. தொடங்கிவைத்த, ‘யார் அந்த சார்?’ என்ற விவகாரத்தை திசை திருப்பும் வகையில் பத்திரிகையாளர்களிடம் செல்போனை வாங்கிவைத்து, தொடர் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறை நெருக்கடி கொடுத்தது. இந்த நெருக்கடிக்குப் பணியாமல் நீதிமன்றத்தில் போராடிய பத்திரிகையாளர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை […]

மீண்டும் வெடித்தது சாம்சங் போராட்டம். மூடப்பட்ட டாய்லட்

கடந்த வாரம் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இதை தொழிலாளர்களும் பின்னிருந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களும் அட்டகாசமாக கொண்டாடின. தொழிற்சங்கப் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி என்று அறிவித்தார்கள். இந்நிலையில் மீண்டும் சாம்சங் நிறுவனத்தில் இன்று உள்ளிருப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. சாம்சங் நிர்வாகத்தின் அராஜகம் தொடர்வதால் இன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாகத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அராஜகத்தை திமுக அரசு வழக்கம் போல வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என்று கொதித்துள்ளனர்.  தொழிற்சங்கம் அமைத்தற்காக சங்க நிர்வாகிகள் மூன்று […]

புனித நீராடும் மோடி… கும்பமேளா மரணங்கள் மறைக்கப்படுகிறதா..?

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் கும்பமேளா புனித நீராடல், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதேபோல் இமயமலை தியானம், கன்னியாகுமரி தியானம், ராமர் கோயில் திறப்பு, புனிதநீராடல் என்று முழுக்க முழுக்க மதத் தலைவராக மோடி செயல்படுகிறார் என்றும் குற்றம் […]

அயோத்தியாகும் திருப்பரங்குன்றத்தால் தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து..? அலறும் சேகர் பாபு.

இந்திய அரசியலை அயோத்தி மாற்றியது போல் தமிழக அரசியலை திருப்பரங்குன்றம் மாற்றும். அங்கே ஸ்ரீராமன் இங்கே திருமுருகன். அங்கே பாபர், இங்கு சிகந்தர். மிகப்பெரும் எழுச்சி உருவாகி வருகிறது. கந்தன் மலையை கை வைத்தவர், அரசியலில் இனி கந்தல் ஆவது உறுதி என்று தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர் போர்க்குரல் எழுப்புகிறார்கள். இதற்கு அமைச்சர் சேகர்பாபு இன்று திருப்பரங்குன்றம் போராட்டம் குறித்து, ‘’தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் மதுரையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். […]

இந்தியர்களை நாடு கடத்தத் தொடங்கியது அமெரிக்கா..? டிரம்ப்பை நேரில் மிரட்டுவாரா மோடி..?

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கோஷத்தை எழுப்பியே டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரம் செய்து, அதனால் வெற்றியும் பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டார். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில், பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மோடியும் அமெரிக்க அதிபர் டிரெம்பும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்தியர்களுக்குப் பிரச்னை வராது என்றே பலரும் நம்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், […]

அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி உறுதி..? ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

வரயிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., சட்டமன்ற எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புதிதாக அரசியல் களத்தில் குதித்திருக்கும் விஜய் ஆகிய மூவரும் மிகுந்த உறுதியுடன் இருக்கிறார்கள். அதேநேரம் இவர்கள் மூவரும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் விஜய்யும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதே அரசியல் பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவை விஜய்க்கு வழங்கப்படுவதாக எடப்பாடி […]

பெண் நிர்வாகிக்கு ஆபாச அர்ச்சனை..? விஜய் கட்சிக்குள் பதவி மோதல்

விஜய் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடைந்திருக்கிறது. இப்போதுதான் நிர்வாகிகள் நியமனம் நடைபெறுகிறது. அதற்குள் ஜாதி, பணம் பார்த்து பதவி கொடுக்கப்படுகிறது என்று வெளிப்படையாக வீடியோ மூலம் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. குற்றம் சாட்டிய பெண் நிர்வாகி மீது பா.ஜ.க. பாணியில் ஆபாச அர்ச்சனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா நந்தகுமாருடைய வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது. போலீஸ் கேஸ் இருக்கிறது என்று பொய்யான குற்றச்சாட்டை சொல்லி இவருக்கு கிடைக்க இருந்த பதவி நிறுத்தப்பட்டிருக்கிறது. […]