ஆளுநர் ரவிக்கு பளார் பளார் கேள்விகள். தீர்ப்பு என்னாகும்..?

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பொதுவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு வழக்கறிஞர்கள் தான் வாதங்களை வைப்பார்கள். ஆனால்,ஆளுர் ரவி விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே அவருக்கு எதிராக வாதங்களை வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘’காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநர், ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்; அது எப்படி முடியும்? […]
செங்கோட்டையனுக்கு என்னாச்சு.? அ.தி.மு.க. உடைப்பு வேலை ஆரம்பமாகிறதா..?

அத்திகடவு அவிநாசி திட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது மட்டுமின்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று நேரடியாக எடப்பாடி பழனிசாமியை குற்றம் சொல்லும் விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்துப் பேசிய செங்கோட்டையன், ‘’அத்திகடவு அவிநாசி திட்டம் புரட்சிதலைவி அம்மா கொண்டுவந்தது அவரின் படம் இல்லை என்பதால் நான் கலந்துகொள்ளவில்லை, இதை புறக்கணிப்பு என்று கூறக்கூடாது. இந்த திட்டத்துக்கு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே காரணம்’’ என்று செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். தன்னைவிட ரொம்பவும் ஜூனியரான எடப்பாடி முதல்வர் ஆனபோது […]
டெல்லியில் கம்யூனிஸ்ட் கட்சி அட்டகாச சாதனை. டக் அவுட் ராகுல் செம ஹேப்பி

தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி டக் அவுட் ஆகியிருக்கிறது. இதனால் கடுமையான வருத்தத்தில் இருக்கும் ராகுல் காந்திக்கு ஆறுதல் கொடுப்பது போல் செய்தி வந்திருக்கிறது. அதாவது, டெல்லியில் போட்டியிட்ட 70 தொகுதிகளிலும் சேர்த்து ஐந்தாயிரம் ஓட்டுக்கள் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் வாங்கவில்லை என்பது தான் அந்த ஆறுதல் செய்தி. இந்திய அரசியலை புரட்டிப்போட கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் வீரவசனம் பேசுகிறார்கள். ஆனால், […]
விடாது சவுக்கு. திரும்பத் திரும்ப விரட்டுறாங்க

ஸ்டாலினை நிம்மதியாக இருக்க விட மாட்டேன். ஆளும் தி.மு.க. அரசின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்திக்கொண்டே இருப்பேன் என்று சமூகவலைதளங்களில் பேசியதால் காவல் துறை மூலம் குண்டர் சட்டம் போடப்பட்டு, இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் சவுக்கு சங்கர். இப்போது மீண்டும் அவரை குறி வைத்து காவல் துறை பழிவாங்குவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். சவுக்கு சங்கரது பதிவில், ‘’பழிவாங்கும் போக்கில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அருண். கட்டுப்பாடிழந்த முதல்வர். கும்பமேளாவில் படபிடிப்பு நடத்துவதற்காக, சவுக்கு மீடியா கேமராமேன்களோடு சாலை மார்க்கமாக […]
டெபாசிட் பரிதாபங்கள். தனியே நின்றாலும் ஜெயிக்க மாட்டாரா சீமான்..?

ஈரோடு இடைத்தேர்தலில் அத்தனை எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல் பின் வாங்கி விட்டன. புதிதாக வந்த விஜய்யும் போட்டியில்லை என்று அறிவித்தார். அதனால் தி.மு.க.வை எதிர்கொண்ட நாம் தமிழர் சீமான் கணிசமான வாக்குகளைப் பெற்று கடும் போட்டி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் டெபாசிட் பறி கொடுத்திருக்கிறார். தேர்தல் முடிவின் படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நாம் […]
மாணவி ஸ்ரீமதியின் தாயார் முதல் குற்றவாளி..? வேங்கைவயல் பாணியில் கள்ளக்குறிச்சி

வேங்கைவயல் குற்றபத்திரிகைக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கிலும் யாரும் எதிர்பாராத வகையில், மாணவியின் தாயார் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது அதிர்வை உண்டாக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். இதையடுத்து நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. மாணவியின் மரணத்திற்கு […]
எடப்பாடியுடன் விஜய் கூட்டணி அம்பலம்…? அய்யநாதன் பேச்சுக்கு த.வெ.க. கப்சிப்

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு ஆலோசனை நடத்திய காலம் தொடங்கி அவருடன் நெருக்கமாக இருந்தவர் அய்யநாதன். அவர் விஜய் கூட்டணி குறித்து வெளிப்படையாகப் பேசிய விவகாரம் அவரது கட்சியினரை அதிர வைத்திருக்கிறது. கடந்த ஜனவரி 2ம் தேதி விஜய்யுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து அய்யநாதன், ‘’அ.தி.மு.க.வுடன் கூட்டணி சரியா வராது. ஒன்னு எடப்பாடிய நீங்க ஏத்துக்கணும், இல்ல உங்கள முதல்வர் வேட்பாளரா அதிமுக ஏத்துக்கணும் ரெண்டும் நடக்காதுன்னு சொல்லியிருக்காரு அதுக்கு விஜய் இரண்டாவது ஆப்ஷனுக்குத் தான் வொர்க் […]
ஆம் ஆத்மியை தோற்கடித்தது ராகுல் காந்தி..? ஊழலில் தொடங்கி ஊழலில் முடியும் கட்சி

டெல்லி காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டு என்ற கோஷத்துடன் களத்தில் இறங்கி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி அடைந்த ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே தோல்வி அடைந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சி கை கொடுக்காத காரணத்தாலே இந்த தோல்வி என்றும், இதற்கு ராகுல் காந்தியே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின்ர், ‘’டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 சதவீத அளவுக்கு வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த கோவா, […]
விஜய் முதல் கூட்டணிக் கட்சி இது தானா..? அப்பா பைத்தியம் ரங்கசாமி அறிவிப்பு

விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் முழு தொடர்பில் இருந்தார். புஸ்ஸி ஆனந்த் இவர்களுடைய சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இவர்கள் இணைவரும் இணைந்து புதுவையில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கபட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், ‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும்’ என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்து இருக்கிறார். புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கிழக்கு கடற்கரைச்சாலையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]
சீமானும் விஜய்யும் கூட்டாளிகளா..? சென்சஸ் மோடிக்கு பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம், கும்பமேளா மரணம், அமெரிக்காவில் இருந்து விலங்குடன் இந்தியர்கள் திருப்பப்பட்ட அவமானம் ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்காத நடிகர் விஜய் திடீரென ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்று மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரைப் போலவே சீமானும் இந்த விஷயத்துக்கு மட்டும் குரல் கொடுத்திருக்கிரார். சீமானுக்கும் விஜய்க்கும் இடையில் மிகப்பெரும் யுத்தம் நடப்பதாக அவர்களுடைய கட்சியினர் சண்டை போட்டு வரும் நேரத்தில், இருவரும் சொல்லிவைத்தது போன்று ஒரே நேரத்தில் ஒரே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரே […]

