விஜய்க்கு குல்லா, இப்தார் விருந்து… இப்படி பண்றீங்களே புரோ..?

அரசியலில் நாங்கள் மற்ற கட்சி மாதிரி இயங்க மாட்டோம். எங்க ரூட்டே தனியாக இருக்கும். என்று தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கும் நேரத்தில் மிகப்பெரிய பில்டப் கொடுத்தார் நடிகர் விஜய். அவர் மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே குல்லா போட்டுக்கொண்டு இப்தார் கஞ்சி குடிப்பதற்குத் தயாராகி இருப்பதைப் பார்த்து அவரது ரசிகர்களே கொதிக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 7ம் தேதி ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் […]
வேலுமணி வீட்டுக் கல்யாணமா… பா.ஜ.க. மாநாடா..? இபிஎஸ் எஸ்கேப் அரசியல்

கோவை ஈச்சநாரியில் அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான வேலுமணியின் மகன் விகாஸ் – தீக்ஷனா திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு பா.ஜ.க.வின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததும் ஏகப்பட்ட அரசியல் யூகங்களைக் கிளப்பியிருக்கிறது. வேலுமணி இல்லத் திருமண விழாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, நடிகை குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் ஏகப்பட்ட தலைவர்கள் வரிசையாக வந்து ஆஜரானார்கள். பா.ஜ.க. […]
விஜய்காந்த் சிலையா… குட்டிச் சாத்தானா..? பிரேமலதா அலப்பறைகள்

விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுக்கு எல்லாம் பிரேமலதா அன்புக்கட்டளை போட்டிருக்கிறார். அதாவது, அவரவர் ஏரியாவில் விஜயகாந்திற்கு சிலை ஏற்பாடு செய்ய வேண்டும். அதனை நானே திறந்து வைப்பேன். சிலை வைக்காத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்று நெருக்கடி கொடுக்கிறாராம். இதையடுத்து அவரது நிர்வாகிகள் அவர்களால் முடிந்த வரை செலவு செய்து விஜயகாந்திற்கு அவர்களுடைய சொந்த இடத்தில் குட்டிக் குட்டி சிலைகளை உருவாக்கிவருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணத்தில் பிரேமலதா திறந்த விஜயகாந்த் உருவச் சிலை கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ஏனென்றால், அந்த […]
சீமான் மாமா…. நான் விருப்பப்பட்டு வர்றேன்… எவ்வளவு குடுப்பீங்க? வரிசை கட்டும் அழைப்புகள்.

அவ விருப்பப்பட்டு வந்தாள் என்று விஜயலட்சுமியை பாலியல் தொழிலாளி ரேஞ்சுக்கு சீமான் பேசிய விவகாரம் பெரும் வில்லங்கமாகியிருக்கிறது. கண்ணீரும் கம்பலையுமாக விஜயலட்சுமி, ‘நான் பாலியல் தொழிலாளியா?’ என்று நியாயம் கேட்கிறார். இந்த நிலையில், விருப்பப்பட்டு ஒரு பெண் கூப்பிட்டதும் போகிறார் என்றால் சீமானும் பாலியல் முதலாளியா..? நானும் விருப்பப்படுகிறேன், சீமான் ரெடியாக இருக்கிறாரா என்று எக்கச்சக்க பேர் சீமானுக்குப் போன் போடுகிறேன். ‘மாமா… நான் விருப்பப்பட்டு வர்றேன், எங்க வரணும், எப்படி வரணும், என்ன செய்வீங்க, எவ்வளவு […]
மோடியின் கச்சத்தீவு மீட்பு.? மீனவர்கள் கடத்தல்காரர்கள்..? ஆளுநர், அண்ணாமலை சூப்பர் டிராமா

மோடியின் ஆட்சியில் தமிழக மீனவர்களை தொட்டுப் பார்க்கும் தைரியம் கூட இலங்கைக்கு வராது என்று பா.ஜ.க.வினர் உறுதி அளித்தார்கள். ஆனால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்கக் கோரியும், கைது நடவடிக்கையை நிறுத்தவும் மீனவர்கள் போராட்டம் செய்துவருகிறார்கள். இந்த போராட்டத்தினரை சந்தித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘’ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். […]
பிரசாந்த் கிஷோர் செல்வதெல்லாம் உண்மையா…? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு மாநாட்டில் மேடையேறிய பிரசாந்த் கிஷோர், விரைவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறினார். அவரே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 5 முதல் 10 வருடங்கள் உழைத்தால் தான் பெரிய கட்சியாக முடியும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து விஜய் இலக்கு 2031 தேர்தல் தானா என்று அவரது கட்சியினர் அதிர்ந்து நிற்கிறார்கள். தனியார் தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த பேட்டியில், “அதிமுக + பாஜக கூட்டணி அமைத்தால், திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்தால் […]
அமெரிக்காவை நம்பி மோசம் போன லெஜன்ஸ்கி… மோடிக்கும் இதுதான் நடக்குமா..?

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனுக்கு இந்த போரில் பல்வேறு வழிகளில் அமெரிக்க உதவியது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் ரஷ்யாவுடன் தைரியமாக மோதினார் அதிபர் லெஜன்ஸ்கி. ஆனால், அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றம் உக்ரைனுக்குச் சிக்கலாகிவிட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளை படிப்படியாக நிறுத்தத் […]
ஒரு உறைக்குள் மூன்று துப்பாக்கி..? விஜய்க்கு சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாதா..?

அரசியல் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவது கட்டாய நிகழ்வாகிவிட்டது. ஆனால், கட்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே ஜான் ஆரோக்கியசாமியின் வழிகாட்டுதல் விஜய்க்குத் தேவைப்பட்டது. அதன் பிறகு ஆதவ் அர்ஜூனா வந்தார். இப்போது பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம் என்று ஆதவ் பேசினார். இந்த நிலையில் ஒரு கட்சிக்கு ஒரு வியூக வகுப்பாளர் இருந்தால் சரியாக இருக்கும். மூணு பேர் இருந்தால் முக்காடு தான் போட வேண்டும். […]
ரேப்பிஸ்ட் தலைவர் சீமான்… இப்படி பொசுக்குன்னு பேசிட்டாரே

சீமான் வளர்ச்சியைப் பிடிக்காமல் ஸ்டாலின் அரசு வேண்டுமென்றே போலீஸாரை அனுப்பி மிரட்டிப் பார்க்கிறது என்று ஆவேசப்பட்ட ஆதரவாளர்களை எல்லாம் அதிர வைக்கும் அளவுக்கு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார் நாம் தமிழர் சீமான். தருமபுரியில் நாம் தமிழர் கட்சியினரின் கலந்தாய்வுக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், ” இது ஒரே வழக்கு, ஏற்கனவே காவல்துறையிடம் விளக்கம் அளித்துள்ளேன். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு மூன்று மாதம் காலம் அவகாசம் கொடுத்திருக்கு. அதற்குள் இவ்வளவு அவசரம் ஏன் […]
சீமானை கைவிட்ட ஆதரவு தலைவர்கள்… கைது நடவடிக்கை தீவிரம்..?

சீமான் வீட்டு காவலாளி அராஜகமாக கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று காத்திருந்த சீமான், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றதும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதனாலே, இன்று மாலை காவல் நிலையத்தில் ஆஜராக முடிவு எடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சீமான் மனைவி கயல்விழி செய்தியாளர்களிடம் இன்று, ‘சீமான் வீட்டில் இல்லாத நேரத்தில் சம்மன் ஒட்டப்பட்டது. அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே கிழிக்கச் சொன்னேன்’ என்று […]

