10 கோடி ரூபாய் குப்பைக்குப் போயாச்சு. யார் ஐடியா சார் இது..?

இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இருக்கிறது. எல்லோருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. இந்த நிலையில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்புக்கு பணம் ஒதுக்கியது முட்டாள்தனமான யோசனை என்று அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் எக்கச்சக்க நல்ல திட்டங்கள் இருக்கிறது என்பதால், அதை மக்கள் நேரடியாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வகையில் […]
பிரிவினைவாதத்துக்கு ஆட்சிக் கலைப்பு..? ஸ்டாலினை மிரட்டும் நிர்மலா சீதாராமன்

இந்தியைத் திணிக்க முயலும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரூபாய்க்கான குறிபீட்டை ஸ்டாலின் நீக்கியிருப்பது தேச விரோதச் செயல் என்று மத்திய நிதியமைச்சர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நிர்மலா சீதாராமன், ‘’மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது, அரசியலமைப்பின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் உறுதிமொழிக்கு எதிரானதாகும் பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக […]
தமிழ்நாட்டுக்கு மானக்கேடு. குற்றவாளி யுவராஜை செருப்பால் அடிக்க வேண்டாமா..?

தமிழகத்தில் தலித்துகள் வாழவே முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சாதி வெறியால் கொடூரமாக கோகுல்ராஜ் என்ற இளைஞனை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ் பரோலில் வெளிவந்த நேரத்தில், அவரை கல்லால் அடித்துக் கொல்லாமல் ஹீரோ போன்று வாழ்த்தி கொண்டாடியிருக்கிறார்கள். இது தான் பெரியார் கனவு கண்ட தமிழகமா..? நடப்பது சமூக நீதி ஆட்சியா? என்ற கேள்விகள் எழுகின்றன. எந்த ஒரு குற்றவாளி என்றாலும் சிறையில் இருந்து […]
அண்ணாமலைக்கு விஜயலட்சுமி செம ரெய்டு…. த்ரிஷா, குஷ்புக்கு மட்டும் ஏன் ஆதரவு

சமீபத்தில் நாம் தமிழர் சீமானை ஒரு திருமண விழாவில் சந்தித்த அண்ணாமலை, ‘ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்கண்ணா…’ என்று ஆதரவு கொடுத்தார். இந்த விவகாரத்திற்கு எதிரபாராத பக்கத்தில் இருந்து அண்ணாமலைக்கு செம அடி விழுந்திருக்கிறது. ஆம், சீமானை மட்டும் பொளந்துகட்டும் நடிகை விஜயலட்சுமி அண்ணாமலைக்கும் ஒரு கண்டன வீடியோ போட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ‘’அண்ணாமலை உங்கள் மீது எனக்கு ரொம்ப மரியாதை உள்ளது. உங்கள் நண்பர் சீமான் ஈழத்துக்காக போராடியோ அல்லது கச்சத்தீவை மீட்கப்போய் இந்த புகாரை வாங்கவில்லை. […]
தைரியமிருந்தால் சீமானை சீண்டிப் பாரு…. விஜய்யை வம்பிழுக்கும் தம்பிகள்

பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் விஜய். அதனாலே பெரியாரைப் பற்றி சீமான் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். சீமானின் பெரியார் வெறுப்புக்கு விஜய் ஒருபோதும் கண்டனம் தெரிவித்தது இல்லை. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் பெரியாரைப் பற்றி கண்டனம் தெரிவித்ததும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பெரியார் பேச்சுக்கு விஜய், ‘’பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே? […]
ஜெயலலிதா 5 மாத கர்ப்பம்… தற்கொலை முயற்சி..? அ.தி.மு.க. அமைதி ஏன்..?

சமீபகாலமாக தி.மு.க. மேடையில் தென்படுபவர் குட்டி பத்மினி. பா.ஜ.க.வில் அவருக்குப் போதிய கவனிப்பு இல்லை என்றதும் தி.மு.க. பக்கம் திசை மாறி வந்திருக்கிறார். இப்போது ஜெயலலிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்றும் தற்கொலை முடிவு செய்தார் என்றெல்லாம் பேசி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுக்கும் லிவிங் டுகெதர் ரிலேஷன்சிப் உண்டு என்பது தெரிந்த தகவல் என்றாலும் யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், சாய் வித் சித்ராவில் குட்டி பத்மினி மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். […]
சீமானுக்கு சிக்னல் கொடுத்தாரா அண்ணாமலை..? வைரலாகும் மீட்டிங்

சென்னை, திருவான்மியூரில் பாஜக நிர்வாகி மகள் ரிசப்ஷனுக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் சீமானும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் திடீரென சந்தித்துப் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது. விழாவுக்கு வந்த சீமான் காரில் இருப்பது தெரியவந்ததும் அங்கு வரும் அண்ணாமலை, ‘’நலமா அண்ணா, ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க அண்ணா” என கை கொடுத்து பேசினார். இந்த விவகாரம் வைரலாவதை அடுத்து அண்ணாமலையிடம் கேட்கப்பட்டதும், ‘’சீமான் அண்ணனுக்கும் எனக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கு அரசியல் முரண் […]
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க… இதுக்குத்தான் டெல்லி போனாங்களா..?

தி.மு.க. எம்.பி.க்கள் நாகரிகம் தெரியாதவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினமே தான் பேசிய பேச்சுக்கு தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில், ஏன் அதே பிரச்னையை எழுப்பி கோஷம் போடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் எவ்வளவு முக்கியமான பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன. குறிப்பாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து […]
வேலுமணி வீட்டுக் கல்யாணத்தில் இபிஎஸ் அரசியல் மீட்டிங். செங்கோட்டையன் எங்கே..?

வேலுமணி மகன் கல்யாணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் கலந்துகொண்ட சூழலில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாமல் இருந்தது அரசியல் பஞ்சாயத்தாக கருதப்பட்டது. இந்த நிலையில் கோவை, அவினாசி சாலை, கொடிசியா வளாகத்தில் அமைந்துள்ள ஏபிசி ஹாலில் நடைபெற்ற, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக […]
ஏழைகள் தங்கத்தை சுருட்டும் ரிசர்வ் வங்கி..? குரல் கொடுக்கும் சீமான்

ஏழைகளின் வ்லி என்றால் என்னவென்றே தெரியாதவர்களே மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதனால் தான், வெங்காயம் விலை ஏறுவது ஏன் என்று கேட்டால், நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று நிதியமைச்சர் அறிவிப்பு செய்தார். இந்த நிலையில் ஏழைகளின் கையில் இருக்கும் கொஞ்சநஞ்ச தங்கத்தையும் சுருட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. நகைக் கடன் மீட்டு திரும்ப வைக்கும் நடைமுறையில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்திருக்கும் மாற்றம் கடுமையான சிக்கலை உண்டாக்கும் என்று நாம் தமிழர் சீமான் முதல் நபராகக் குரல் […]

