News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பா.ஜ.க.வில் பார்த்திபன்..? கவர்னரை பாராட்டினால் துரோகியா..?

ஆளும் கட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு சோப்பு போடுவது போன்று அவ்வப்போது பாராட்டி வருபவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். அவரது சமீபத்திய படங்கள் எதுவுமே ஓடியதில்லை. அதனால் ராதாரவி, சரத்குமார் பாணியில் பார்த்திபனும் பா.ஜ.க.வில் சங்கமம் ஆக இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் கவர்னருடன் ஒரு விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன், ‘’இந்த நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் என்பது மிக மிக முக்கியமானது. இங்கு தமிழ் அழகாக மணந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறார் […]

எடப்பாடி பழனிசாமியுடன் சவுக்கு சங்கர் சந்திப்பு..? தனிக் கட்சி ஆலோசனை

vசவுக்கு சங்கர் வீட்டில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது என்றாலும் இது சவுக்கு சங்கருக்கு கொடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ‘’ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் […]

ஜனநாயகன் தேர்தல் அப்டேட். விஜய்க்கு ஜாக்டோ ஜியோ கேள்வி

விஜய் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் தயாராகி வரும் ஜனநாயகன் தைப் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்ட ஜனநாயகனை ஜனவரியில் வெளியிட்டால் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படும் என்று அவரது ஆலோசகர்கள் கூறியதன் அடிப்படையில் ரிலீஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டேவும், லேட்டஸ்ட் சென்சேஷன் மமிதா பைஜூவும் நடிக்கின்றனர். இந்த நிலையில் ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக திடீரென விஜய் பொங்கியெழுந்து அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஜாக்டோ ஜியோ அமைப்பை […]

அண்ணாமலைதான் எம்.ஜி.ஆரா..? அமைச்சர்களுக்கு ஆப்பு. டாஸ்மாக், சிபிஎஸ்சி பள்ளிகளுக்குப் பூட்டு?

திருச்சி பா.ஜ.க. மாநாட்டில் எக்கச்சக்க கூட்டத்தைக் காட்டிவிட்டார்கள். இதையடுத்து, எம்.ஜி.ஆருக்குப் பிறகு அண்ணாமலைக்குத் தான் இத்தனை பெரிய கூட்டம் கூடியிருக்கிறது என்று எக்கச்சக்க பில்டப் கொடுத்தார்கள். அதேநேரம், அண்ணாமலை பேசிய நேரத்தில் கலைந்துசென்ற தொண்டர்களை புகைப்படம் எடுத்த விவகாரம் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ’’ பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அகில உலக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் உண்மையான தலைவராக உள்ளார். பாடல் வெளியீட்டு விழா, உதயநிதி […]

ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் சக்சஸ்…? மோடி கப்சிப்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒரு கற்பனையான பயத்தை உருவாக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தியிருக்கிறார். அதேநேரம், இந்த கூட்டம் பற்றி டெல்லி பா.ஜ.க. அமைதி காக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு நடக்கவே நடக்காது, அப்படியே நடந்தாலும் மக்களவையில் தமிழ்நாட்டிற்கு தற்போதுள்ள 7.18% பங்கு குறையாது என்று பிரதமர் மோடி அறிவித்தல் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு அபாயம் குறித்து தென் மாநிலங்கள் போதிய […]

சீமான் போராட்டம் வீணாகிப் போச்சு..? பா.ஜ.க.வின் ஏ டீம் காரணமா..?

சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பஞ்சமர் நிலம் மீட்பு பேரணி, மாநாடு குறித்து எந்த ஊடகமும் ஒளிபரப்பு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது குறித்து நாம் தமிழர் சீமான் வேதனைப்பட்டுள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ‘’நாங்க பஞ்சமர் நில மீட்பு, சாதிவாரிக் கணக்கெடுப்பு போன்ற மிக முக்கியமான மக்கள் பிரச்சனைய முன்னெடுக்கும் போதெல்லாம் இந்த ஊடகம் காட்டுறதே இல்ல.. இது எப்படி அறமாக இருக்கும். எங்கள் சக்தி எல்லாம் வீணாகிறது. என்ன செய்தி […]

வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனம். கெட்ட வார்த்தையில் திட்டினாரா சேகர் பாபு..? கூட்டணி என்னாகும்?

அமைச்சர் சேகர் பாபுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்துக்குப் போய் ஸ்டாலினை கொந்தளிக்க வைத்தது. இந்த விவகாரம் நாடகமா அல்லது கூட்டணியில் இருந்து வெளியே தள்ளப்படுவாரா என்பது அரசியல் பரபரப்பாக மாறியுள்ளது. சட்டப்பேரவையில் நேற்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது, தமிழக அரசின் மொழிக்கொள்கை மற்றும் கல்விக்கொள்கை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், அதிமுக ஆட்சியில் ஒரு துறைசார்ந்த ஆள் தேர்வு நடத்தப்பட்டது […]

அமலாக்கத் துறையுடன் மோதும் ஸ்டாலின்… நீதிமன்றத்தில் டாஸ்மாக்

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்குப் பிறகு 1000 கோடி ரூபாய் முறைகேடு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை மற்றும் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது இது தொடர்பாக பேசும் அதிகாரிகள், ‘’கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை அரசியல் தலைவர்கள் மீது PMLA சட்டத்தின் கீழ் 193 வழக்குகளை பதிவு செய்துள்ளது அந்த வழக்குகளில் […]

டெல்லியில் மாப்பிள்ளை சார் ராஜாங்கம்..? சரண் அடையும் தி.மு.க. எம்.பி.க்கள்

அப்பா என்று ஸ்டாலினை மாணவர்கள் அன்புடன் அழைக்கிறார்கள் என்றால் தி.மு.க. உடன்பிறப்புகளால் மாப்பிள்ளை சார் என்று அன்புடனும் அச்சத்துடனும் அழைக்கப்படுபவர் மாப்பிள்ளை சபரீசன். அவர் நாடாளுமன்றத்தில் தி.மு.க.வை ஆட்டுவிக்கும் சக்தியாகத் திகழ்வதுடன் பா.ஜ.க.வுக்கு  பி டீம் ஆக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் மாப்பிள்ளை சபரீசன் பந்தாவாக நிற்பதும், அவரைச் சுற்றிலும் அடிமை போன்று தி.மு.க. எம்.பி.க்கள் நிற்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாப்பிள்ளை விசிட் குறித்து தி.மு.க.வினர் அதிகாரபூர்வமாக எதுவும் […]

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் மீட்பு. அப்படின்னா அந்த நிலவு பயணம்..?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்று எட்டே நாளில் திரும்ப வேண்டிய சுனிதா வில்லியம்ஸ் விண்கலம் பழுதடைந்த காரணத்தால் ஒன்பது மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி இருக்கவேண்டிய கட்டாய சூழல் நிலவியது. உயிருடன் சுனிதாவை மீட்பது மிகப்பெரும் சவாலாக கருதப்பட்ட நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு மீட்கப்பட்டுள்ளார். இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் ஒகையோவின் யூக்லிட்டில் பிறந்தவர் சுனிதா. இவரது தந்தை தீபக் பாண்டியா, குசராத்தின் மெக்சனா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க நரம்பியல் நிபுணர். கடந்த ஆண்டு ஜூன் […]