News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அரசு பள்ளி மாணவர்கள் என்றால் மட்டமா..? பா.ஜ.க.வுக்கு வாய்க்கொழுப்பு

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 100/100 வாங்கியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று வாய்க்கொழுப்புடன் பேசியிருக்கும் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நாராயணன் திருப்பதி, ‘’சமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் வேதியியல் தேர்வெழுதிய 167 போன்ற முடிவுகள் சாத்தியம் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், இதை தவறு என்று சுட்டிக்காட்டி உண்மையை வெளிக்கொண்டு வர யாருமில்லாதது வேதனையளிக்கிறது. தேர்வுக்கு முன்னரே கேள்வி தாள்களை […]

விஜய் சர்வே உண்மையா..? சகாயத்துக்கு துணை முதல்வர் பதவி..?

நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இன்னமும் எந்த தேர்தலிலும் போட்டியிட்டு தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்தது இல்லை. ஆனால், தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல சர்வேக்கள் வலம் வருகின்றன. விஜய்க்கு 100 சீட் கிடைக்கும் என்று வெளியாகியிருக்கும் சர்வே தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஒரு நாளிதளில் மும்பை தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 95 -105 சீட் கிடைக்கும் என்றும் முதல்வர் வேட்பாளர் அடிப்படையில் […]

எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் வாழ்த்துகள்… விஜய் வாழ்த்து சொல்வாரா..?

2026-ல் அரியணை ஏறப்போகும் நமக்கான தலைவர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் 7.5% எனும் நாடுபோற்றும் உள்இடஒதுக்கீட்டால் சமநீதி காத்த “புரட்சித் தமிழர்” என்றெல்லாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பாராட்டுகளைக் குவித்துக்கொணு இருக்கிறார்கள். நேற்றைய தினமே பா.ஜக.வை சேர்ந்த அண்ணாமலை தொடங்கி நயினார் நாகேந்திரன் வரையிலும் வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டார்கல். அதேநேரம், இன்னமும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் வாழ்த்து சொல்லவில்லை. விஜய் வாழ்த்து சொல்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இன்று சீமான், […]

ராமதாஸ் எச்சரிக்கை யாருக்கு..? அன்புமணி படித்து பாஸ் ஆனரா..? பா.ம.க. மாநாடு சர்ச்சை

பாமக வன்னியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டில் கட்சியினருக்கு எச்சரிக்கை என்ற பேரில் அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஐ.ஏ.எஸ். நியமனம் பற்றி அன்புமணி பேசியிருப்பது அவரது கட்சியினரையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது. இந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், ‘’10.5 சதவிவித இடஒதுக்கீடு குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோமே தவிர அவர்கள் கொடுப்பதாக இல்லை. 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்காக பாமக சார்பில் நிச்சயம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்காக […]

இதுக்குத்தானே நிர்மலா சீதாராமனை சந்தித்தார் சீமான்..? விவசாயி சின்னம் கிடைச்சாச்சு

யாருக்கும் தெரியாமல் தனியே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. அப்போது விவசாயி சின்னம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்று சொல்லப்பட்டது. அதற்கு தகுந்த பலன் கிடைத்தது போன்று இப்போது சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைத்துவிட்டது. இது குறித்து சீமான், ‘’மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது’’ என்று பெருமையுடன் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த […]

போர் நிறுத்திய டிரம்ப்.. வாலாட்டும் பாகிஸ்தான். வீணானதா மோடியின் ராஜதந்திரம்..?

“கடந்த 48 மணி நேரமாக அமெரிக்கா முன்னின்று நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக சண்டை நிறுத்தம் செய்யப்படுகிறது” என்று அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிவிப்பு இந்தியா முழுக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா அமைதி காக்கும் நிலையில் பாகிஸ்தான் அதிபர் தனது X தளப் பதிவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அரசுச் செயலாளர் ஆகியோருக்கு நன்றி கூறியிருக்கிறார். போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் தொடர்ச்சியாக எல்லையில் பல பகுதிகளில் தாக்குதல் நடப்பதாக தகவல் […]

பாகிஸ்தான் அட்டாக்கில் இந்திய அதிகாரி கொல்லப்பட்டாரா..? அண்ணாமலை மீது கடுப்பில் நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த நேரத்தில் மற்ற தலைவர்கள் யாருமே பேட்டி கொடுப்பதற்கு அவர் அனுமதி கொடுத்தது இல்லை. அதனால் மூத்த நிர்வாகிகள் அனைவரும் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை அகற்றப்பட்ட பிறகும் அவர் மீண்டும் மீண்டும் பா.ஜ.க.வின் முகமாக பேட்டி கொடுப்பது புதிய தலைவர் நயினார் நாகேந்திரனை செமையாக கடுப்பாக்கியுள்ளது. இது குறித்து பேசும் பா.ஜ.க.வினர், ‘’இந்தியாவின் போர் நடவடிக்கை குறித்து […]

போருக்காக மாநாட்டை தள்ளிப் போடுவாரா அன்புமணி..? கட்சிக்குள் கலகம்

பாமக சார்பில் நாளை அதாவது ஞாயிர்றுக்கிழமை மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. போர் நடக்கும் சூழலில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் அன்புமணி இந்த நிகழ்ச்சியை தள்ளிப் போடுவதில் பிடிவாதம் காட்டுவது அவரது கட்சிக்குள்ளே கலகம் உண்டாகியுள்ளது. பா.ம.க. மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் சென்னை – திருச்சி சாலை […]

பாகிஸ்தானுக்கு உதவும் வளைகுடா நாடுகள்… முழு போர் வெடிக்குமா..?

காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு துருக்கி நாடு தொடர்ந்து ஆதரவு அளித்துவருகிறது. இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு துருக்கியின் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன. மேலும் பல வளைகுடா நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களம் இறங்குமா, இது முழு போராக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியூயார்க் டைம்ஸிற்கு கொடுத்த பேட்டியில், ‘’ஏற்கனவே இந்தியாவின் 5 விமானங்களை வீழ்த்தி விட்டோம். 2 ட்ரோன்களை வீழ்த்தி விட்டோம். இத்துடன் மோதலை நிறுத்தி கொள்ள […]

வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானம்… விமானி கைது. அடேங்கப்பா ஆயுதங்கள் பட்டியல்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடி கொடுப்பதற்குத் திட்டமிட்ட பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போர் தீவிரம் அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 9 இடங்களில் இருந்த 21 […]