News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இரண்டாவது நாளாக ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு. யாரெல்லாம் மாட்டப் போறாங்க தெரியுமா?

சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்திய இலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்பட 12 இடங்களில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன், அவரை ஏன் சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை..? இவர் கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்துவின் பேத்தி தாரிணியின் கணவர். அமைச்சர் அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பர். உதயநிதியின் நம்பிக்கைக்கு உரியவர். இவரது வீடு தேனாம்பேட்டையில் உள்ள […]

உதயநிதி கைதுக்கு அமலாக்கத்துறை ஸ்கெட்ச்..? யார் இந்த ரத்தீஷ்?

எப்படியாவது உதயநிதிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே அமலாக்கத்துறை ரெய்டு நடந்திருப்பதாகவும், வாட்சப் ஸ்கிரீன்ஷாட் கிழித்து வீசப்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. நேற்று நடந்த அமலாக்கத்துறை ரெய்டை அடுத்து அ.தி.மு.க.வினர், ‘’டாஸ்மாக் எம்.டி. வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives […]

நாளை விஜய் கூட்டணி அறிவிப்பு..? மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டம்

பூத் கமிட்டி கூட்டம் நடத்திய நடிகர் விஜய் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து தெளிவான அறிவிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையுடன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார் நடிகர் விஜய்.  விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்ற விஜய் மாநாடு அவருக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டியது. அதேநேரம் அடுத்த படம் ரிலீஸ்க்குப் பிறகே நேரடி அரசியலுக்கு வருவார் என்று […]

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக ஜனாதிபதி முர்மு..? தள்ளிப்போகும் கவர்னர் மாற்றம்

துணைவேந்தர் நியமனம் மற்றும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பது ஆகியவை தொடர்பாக தி.மு.க. வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உடன்பிறப்புகள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். இதனால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றம் தள்ளிப்போகிறது என்கிறார்கள். இந்த வாரம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறார் என்று ஒரு பேச்சு உலவியது. புதிய கவர்னர் நியமனத்துக்கு டெல்லியில் ஆலோசனை நடப்பதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் […]

அன்புமணிக்கு இது கூட தெரியாதா..? சண்டைக்குத் தயாராகும் திருமாவளவன்

பா.ம.க. மாநாட்டில் பேசிய அன்புமணி, ‘’நான் மற்ற தலைவர்கள் போல நான் கிடையாது… அத்து மீறு, அதை செய், இதைச் செய் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். முதலில் படித்து வேலைக்கு போக வேண்டும். அதன் பிறகு கட்சிக்கு வர வேண்டும். எனது தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்கக் கூடாது’’ என்று நேரடியாக திருமாவளவன் மீது ஆவேசம் காட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுப்பது போன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கல் எடுத்து […]

நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு நியாயம் கிடைக்குமா? செல்வப்பெருந்தகைக்குச் சிக்கல்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் செல்வப்பெருந்தகை மீது குற்றச்சாட்டு எழுப்பினார். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையொட்டி சிபிஐ வழக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுக்கு சங்கர். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சவுக்கு சங்கர் பேசியிருந்தார். அதில் தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்யாமல் பணம் பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டு கூறியிருந்தார். இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாகக் […]

கதறிய பெண்களுக்கு நீதிமன்றம் ஆறுதல். பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை

’அண்ணா அடிக்காதீங்கண்ணா” என்று பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியதை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் […]

இதுக்குத்தான் நடந்ததா ஆபரேஷன் சிந்தூர். பாஜகவின் ஓட்டு ஊர்வலம்

இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்றதும் தாக்குதலை நிறுத்தி விட்டார்கள் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு முறை பாஜகவை பார்த்து பங்கமாக கலாய்த்திருக்கிறார். இந்த நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட ஊர் ஊரால் ஊர்வலம் செல்வதற்கு பா.ஜ.க. தயாராவது பக்கா தேர்தல் நாடகம் என்றே பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு ஆற்றிய உரையில், ’’இந்தியா மீது ஏவப்படும் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளையும் இனி சகித்துக் கொள்ள மாட்டோம் […]

அரசு பள்ளி மாணவர்கள் என்றால் மட்டமா..? பா.ஜ.க.வுக்கு வாய்க்கொழுப்பு

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 100/100 வாங்கியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று வாய்க்கொழுப்புடன் பேசியிருக்கும் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நாராயணன் திருப்பதி, ‘’சமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் வேதியியல் தேர்வெழுதிய 167 போன்ற முடிவுகள் சாத்தியம் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், இதை தவறு என்று சுட்டிக்காட்டி உண்மையை வெளிக்கொண்டு வர யாருமில்லாதது வேதனையளிக்கிறது. தேர்வுக்கு முன்னரே கேள்வி தாள்களை […]

விஜய் சர்வே உண்மையா..? சகாயத்துக்கு துணை முதல்வர் பதவி..?

நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இன்னமும் எந்த தேர்தலிலும் போட்டியிட்டு தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்தது இல்லை. ஆனால், தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல சர்வேக்கள் வலம் வருகின்றன. விஜய்க்கு 100 சீட் கிடைக்கும் என்று வெளியாகியிருக்கும் சர்வே தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஒரு நாளிதளில் மும்பை தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 95 -105 சீட் கிடைக்கும் என்றும் முதல்வர் வேட்பாளர் அடிப்படையில் […]