News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய்க்கு குழி பறிக்கும் ஆதவ் அர்ஜூனா..? இப்பவே இளைய காமராஜரா..?

மூன்றாவது ஆண்டாக கல்வித் திருவிழா நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கி, எழுச்சியூட்டும் வகையில் பேசி எல்லோருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய். இந்த விழாவில் கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு மேலாக மலர்ந்த முகத்தோடு விஜய் கலந்துகொண்டு பேசியதைக் கண்டு ரசிகர்கள் புல்லரித்துப் போயிருக்கிறார்கள். அதேநேரம், நேற்று முதல் விஜய்க்கு புதிதாக இளைய காமராஜர் என்று பட்டம் கொடுத்து அவரது ஐடி விங் ஆட்கள் வைரலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரம் அனைத்துக் கட்சியினரையும் அப்செட் ஆக்கியுள்ளது. வாழ்நாள் […]

விஜய் கல்வி விழாவில் பண அரசியல்..? நீட்டுக்கு ஆதரவு..?

மூன்றாவது ஆண்டாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் விழாவில் சுமார் 2000 மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக இன்றும், அடுத்து இரண்டாவது கட்டமாக ஜூன் 4-ம் தேதியும், 3வது கட்டமாக ஜூன் மாதம் 13ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், ‘’உங்களை சந்தித்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி. […]

சல்மா ஒரு நடிகைன்னு தெரியாமப் போச்சே..? மூன்று மதத்துக்கும் எம்.பி.  வாய்ப்பு

திமுகவில் இருந்து ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதாவது இந்து மதத்தில் இருந்து சிவலிங்கம், கிறிஸ்தவ மதத்தில் இருந்து வில்சன், முஸ்லிம் மதத்தில் இருந்து சல்மா ஆகியோருடன் நாத்திகரான கமல்ஹாசனும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த பட்டியலில் சிவலிங்கம் எப்படி வந்தார் என்று பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள். இதற்கு திமுகவினர், ‘’சேலம் திமுக மாவட்டங்கள் மூன்று.  சேலம் மத்திய மாவட்டத்தின் செயலாளராக அமைச்சர் ராஜேந்திரன் இருக்கிறார். சேலம் மேற்கு ராஜகண்பதி எம்.பி.யாக இருக்கிறார். இப்போது சேலம் […]

’பாட்டில் மணி’யை ராமதாஸால் ஓரங்கட்ட முடியுமா…? இன்று கட்சியில் அதிரடி மாற்றம்

அன்புமணிக்கு எதிராக ஓப்பனாக ராமதாஸ் கொடுத்த பேட்டி வன்னிய மக்களிடம் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அய்யாவை அசிங்கப்படுத்திய பாட்டில் மணியை சும்மா விட மாட்டோம் என்று ஒரு குரூப்பும், சின்ன ஐயா வழியில் உறுதியுடன் நிற்போம் என்று ஒரு குரூப்பும் மோதத் தொடங்கியிருக்கிறார்கள். இன்று கட்சியைக் கைப்பற்றுவது யார் என்பதை அறிவிக்கும் வகையில் சில மாற்றங்கள் நடக்கும் என்று தெரிகிறது. நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் ராமதாஸ், ‘’அன்பு மணியை மத்திய கேபினெட்அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். […]

ஞானசேகரனுக்குத் தண்டனை… எடப்பாடி பழனிசாமி எழுப்பும் சந்தேகம்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு, ஞானசேகரன் குற்றவாளி- நீதிமன்றம் தீர்ப்பு அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியிருக்கிறார். தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி அறிவிக்க இருக்கும் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகள் எழுப்பியிருக்கிறார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று, ‘’நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அதிமுக […]

விஜய்க்கு ஆதரவாக சீமான்… வைஷ்ணவி கிண்டலுக்குக் கொதிக்கும் ரசிகர்கள்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம் என்று விஜய் கட்சியின் நிர்வாகி பாதிக்கப்பட்டதற்குக் குரல் கொடுத்திருக்கிறார் சீமான். இதுவரை சீமான் மீது கடுமையான தாக்குதல் தொடுத்த விஜய் ரசிகர்கள் என்ன ரியாக்‌ஷன் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். இன்று சீமான், ‘’சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் […]

அடங்காத அண்ணாமலை ஆர்மி… போஸ்டரில் படம் போடாத நயினாருக்கு கண்டனம்

திமுகவுக்கு பென் டீம் போன்று பாஜகவுக்கு மென் டீம் தொடங்கியிருக்கிறார் புதிய பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன். அதோடு அதிமுகவை விமர்சனம் செய்யும் பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த நிலையில் நயினாரின் ஆதரவாளர்கள் அண்ணாமலை போட்டோ போட்டாமல் பிளக்ஸ் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விவகாரம் அண்ணாமலை ஆதரவாளர்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. இது குறித்து பேசும் அண்ணாமலை ஆதரவாளர்கள், ’’தலைமை மாற்றத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் காரணம்? கடந்த மூன்று […]

அன்புமணி, வைகோ எம்.பி. பதவி அவுட்..? நடிகைக்கு எம்.பி. சீட்..?

வரும் ஜூன் 19ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் யார், யாருக்கு சீட் என்ற ஹேஸ்யங்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. கமல்ஹாசன் திமுக பக்கத்திலிருந்தும் கெளதமி அ.தி.மு.க. பக்கத்திலிருந்தும் டெல்லி போகிறார்கள் என்பது ரொம்பவே பரபரப்பாகிறது. தமிழகத்தில் 18 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடங்கள் உள்ளன. இதில், 6 எம்.பி.க்களுக்கான இடங்களுக்கு 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, அன்புமணி ராமதாஸ், […]

போலீசாருக்கு சந்தோஷ காலம் தொடங்கியாச்சு… மகிழ்ச்சிக்கு டிஜிபி திட்டம்

போலீசாரைக் கண்டால் மக்களுக்குப் பயம். அதேநேரம், யாரெல்லாம் குற்றவாளி என்று புரியாமல் எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் வேலை போலீசாருக்கு இருக்கிறது. அதனால் போலீசாரால் மற்ற பணியாளர்கள் போன்று மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை. இந்த குறையைத் தீர்த்துவைக்கும் வகையில் மகிழ்ச்சி திட்டத்தை போலீஸ் டிஜிபி சங்கர் ஜீவால் தொடங்கி வைத்திருக்கிறார்.  தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. சங்கர் ஜீவால் அவர்கள், போலீசாருக்கான மனநல பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் ‘மகிழ்ச்சி’ திட்டம் மற்றும் […]

விஜய் கட்சிக்கு புதிய அதிகாரி… புஸ்ஸி ஆனந்த் பதவிக்கு ஆபத்து

விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் பதவியில் இருந்து விலகியிருக்கும் அருண் ராஜ் ஐ.ஆர்.எஸ். இணைய இருக்கிறார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜூனா பதவிக்குச் சிக்கல் என தெரிகிறது. விஜய் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அருண்ராஜ் ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால், விரைவில் தவெக கட்சியின் தலைமையில் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட உள்ளது என தகவல். […]