ஈரான், இஸ்ரேல் கொடூர யுத்தம்… தரைமட்டமாகும் வீடுகள். உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியிருப்பதை அடுத்து, இரண்டு பக்கமும் மிகப்பெரிய போர் வெடித்திருக்கிறது. ஈரான் மீது இன்று அதிகாலையில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல் உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்பு, ஓமனில் இருக்கும் ஹவுதி அமைப்பு உள்ளிட்டவற்றிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. […]
அமைதிப் புயலாக வைகோ..? புதிய கூட்டணிக்குப் பேச்சுவார்த்தை

மதிமுகவுக்குள் நடந்த உட்கட்சி பஞ்சாயத்து எல்லாம் முடிந்து கிட்டத்தட்ட அனைவரும் துரை வைகோவை தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். மதிமுகவுக்கு செல்வாக்கு குறைகிறது என்ற பேச்சை தடுத்து நிறுத்தும் வகையில் துரை வைகோ தினமும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் வைகோவுக்கு எம்.பி. சீட் கொடுக்கவில்லை என்பது மதிமுகவில் கடும் அதிருப்தியானது. துரைவைகோ வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார். வைகோ இது பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும் திமுக மீது ஆத்திரத்தில் இருக்கிறார். நேற்று வந்த கமல்ஹாசனுக்குக் […]
மாணவிகளை அழுத்தமாக கட்டியணைத்த விஜய்… வேல்முருகன் எங்கே இருக்கீங்க..?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா நடத்திவருகிறார். மூன்றாம் மட்டும் இறுதிக் கட்டத்திற்கான விழா இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியது. தவெக தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசை வழங்கி வருகிறார். இந்த விழாவின் தொடக்கத்தில் விமான விபத்து குறித்து பேசினார். ‘’அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை என்று கூறிய விஜய் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் […]
அன்புமணியிடம் விலை போன வடிவேல் ராவணன். ராமதாஸ் புது கட்சி..?

பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டுபிடிப்போருக்கு 100 ரூபாய் பரிசு என்று ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு கட்சிக்குள் நிலவும் மோசமான உட்கட்சி மோதலை அம்பலப்படுத்தியிருக்கிறது. இனிமேல், பா.ம.க. ஒற்றுமைக்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் ராமதாஸ் தொடர்ந்து அன்புமணி மீது குற்றம் சுமத்தி வருகிறார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘’எனக்கும் செயல் தலைவருக்கும் உள்ள பிரச்சனை எல்லோருக்கும் தெரியும், இரண்டு பேரின் சமரச பேச்சுவார்த்தைக்கு தைலாபுரம் வந்தார்கள் நான் அங்கே […]
கரிக்கட்டை உடல்கள், கடைசி செல்ஃபி, பைலட் குரல். விமான விபத்தில் நெஞ்சை உலுக்கும் தகவல்கள்

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் விமான விபத்து நடந்த இடத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமான விபத்து குறித்து வெளியாகும் தகவல்கள் நெஞ்சை உலுக்குகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவ மாணவர்கள் விடுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் முழுவதுமாக நிரப்பப்பட்டு இருந்த எரிபொருள் […]
விசிகவில் வேடன் வேட்டை…. திருமாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை முழுமையாக கைப்பற்றி விஜய்யிடம் ஒப்படைப்பதற்கு ஆதவ் அர்ஜுனா செய்த முயற்சிகள் போதிய பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் இப்போது கேரளாவில் படு பாப்புலராக இருக்கும் வேடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய இருப்பதாகவும் அவருக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுத்து தேர்தல் பிரசாரம் செய்ய வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் திருமாவளவனின் சொத்து மதிப்பு உயர்வும் கேள்வியாகியுள்ளது. இந்த முயற்சிக்கு தமிழகத்திலும் பெரும் வரவேற்பு இருக்கும் என்று தெரியவரவே விசிக […]
எடப்பாடியின் மாதிரி மந்திரி சபை. பூமராங்க் ஆகும் திமுகவின் டிரோல்

வரும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தால், அவரது மந்திரி சபை எப்படி இருக்கும் என்று கற்பனையாக ஒரு டிரோல் செய்து திமுக ஐ.டி. விங் வெளியிட்டுள்ளது. இதை பார்த்து அதிமுகவினர், ‘’எப்படியோ அடுத்தது அதிமுக ஆட்சி என்பதையாவது திமுக ஒப்புக்கொண்டதே, அது போதும்’’ என்று கிண்டல் அடிக்கிறார்கள். அதிமுகவை கிண்டல் செய்து திமுகவினர் வெளியிட்டிருக்கும் பட்டியல் இது. அதன் படி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு துணை முதல்வராக நயினார் நாகேந்திரனும், அன்புமணி […]
மோடிக்கு அண்ணாமலை ரகசிய கடிதம்…?. நயினாருக்கு மதுரையில் பலப்பரிட்சை

தமிழகத் தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகும் அண்ணாமலை அடங்குவதாக இல்லை. மதுரையில் அமித்ஷா முன்னிலையில் மாஸ் காட்டியதன் தொடர்ச்சியாக மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு மதுரையில் கலவர அரசியலுக்குத் தயாராகிறார். இந்த விவகாரத்தில் அண்ணாமலையை அடக்கி நயினார் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்பது தான் பாஜக டாக். மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில், ‘’மதுரையில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா பேசியிருக்கிறார். கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றால் தொகுதிப் பங்கீடு அந்த வகையில் […]
ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் அதிரடி மாற்றம்…? பதவி உயர்வு யாருக்கு..?

தமிழ்நாடு காவல் துறையில் நிர்வாக சீர்திருத்தம் நடைபெற்றுள்ளது. அதன்படி 6 டி.ஐ.ஜி.க்கள் மற்றும் 12 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றம் குறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி, சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை […]
சீமானுக்கு புதிய எதிரி டாக்டர் கிருஷ்ணசாமி. போதை மோதல்

தமிழக அரசுக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்துவரும் நாம் தமிழர் சீமான் வரும் 15ம் தேதி கள் இறக்கும் போராட்டம் அறிவிப்பு செய்திருக்கிறார். இதற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இன்று டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’கள்’ உணவு அல்ல கொடிய விஷம். கள், சாராயம், அல்லது பீர், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் எதுவாயினும் உடலுக்கும் உயிருக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது. தமிழகத்தில் ஏறக்குறைய 2750 சில்லறை விற்பனை கடைகள் மூலம் […]

