News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பன்னீருக்கு கட்சி ரெடி… கொடியும் ரெடி. தொண்டர்களைக் காணோமேப்பா…

அதிமுகவில் இணைவது சாத்தியமே இல்லை என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஆகவே, வரும் தேர்தலுக்குள் ஒரு கட்சியைத் தொடங்கி பாஜகவிடம் பத்து சீட்டாவது வாங்க வேண்டும் என்று ஆர்வமாக வேலை பார்த்துவருகிறார். இது குறித்து பேசும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‘’எங்களுக்குத் தொடர்ந்து அவமானம் நடந்துகொண்டே இருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் தனிக்கட்சி அவசியம் என்பதை உணர்ந்துவிட்டார். ஆகவே, இப்போது எம்.ஜி.ஆர். அதிமுக என்று புதிய கட்சிக்கு பேர் வைத்திருக்கிறோம். இந்த கட்சியை பதிவு செய்வதற்கு தேர்தல் […]

திருமாவளவன் கூட்டணி குடைச்சல் ஆரம்பம். இபிஎஸ் வெயிட்டிங்

அதிக சீட் வாங்குவதற்காக தேர்தல் நெருக்கத்தில் கூட்டணிக் கட்சிகள் கொஞ்சம் கெத்தாகப் பேட்டி கொடுப்பது சகஜமான ஒன்று. அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உரக்கக் குரல் கொடுத்துவிட்டு ஓய்ந்துவிட்டார்கள். அடுத்தபடியாக திருமாவளவன் ஆரம்பித்திருக்கிறார். நேற்றைய தினம்  மதுரை ஆனையூர் அருகே உள்ள முடக்கத்தான் பகுதியில் பேசிய திருமாவளவன், ‘’ஆளும் கட்சியோடு நாம் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் நமது கொடியை அகற்றி வருகின்றனர். இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளித்துக் கொண்டு போராடிக் கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில் தான் […]

சூப்பர் ஸ்பீடு ராமதாஸ்… கோயிலில் செளமியா… தடுமாற்றத்தில் அன்புமணி

பாட்டாளிகள் மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரிக்கிறதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை. அன்புமணி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வீசிவரும் நிலையில் அன்புமணியோ, ‘’கட்சியில் நிலவும் குழப்பத்திற்கான காரணத்தை வெளியே சொல்ல முடியவில்லை’’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம், இந்த பிளவுக்குக் காரணம் திமுக என்று அரிய கண்டுபிடிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் அன்புமணியின் பேச்சை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து நியமனம் செய்துவருகிறார். ஏற்கெனவே 12 மாவட்ட செயலாளர்கள், 18 மாவட்ட தலைவர்கள் நியமித்து […]

டபுள் ஆக்ட் விஜய்க்கு சரவெடி பதிலடி..? சாதிவாரி சர்வே குளறுபடி

கல்வி விருது விழாவில் அரசியல் பேசாமல் ஒதுங்கிக்கொண்ட விஜய் மீண்டும் அறிக்கை அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார். மத்திய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது போதாது, தமிழக அரசும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கண்டிப்பு காட்டியிருக்கிறார். சினிமாவில் போன்று அரசியலிலும் டபுள் ஆக்ட் எதற்கு என்று திமுகவினர் வரிசை கட்டி விஜய்யை வெளுத்துக்கட்டுகிறார்கள். ஒன்றிய அரசை காப்பாற்றுவதற்காகவே தமிழக அரசு மீது மீண்டும் பாய்ந்திருக்கிறார் விஜய் என்று பதிலடி கொடுக்கிறார்கள். இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’தமிழ் நாட்டில் […]

பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தை கைவிட்ட திருமாவளவன்..? கட்டப்பஞ்சாயத்து ஜெகன்மூர்த்திக்கு ஆதரவு

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை அதிகாரியும் ஆட்கடத்தல் செய்து அட்டூழியம் செய்திருக்கும் அநியாயம் மக்களை அலறவிட்டுள்ளது. இந்த நிலையில் பூவை ஜெகன்மூர்த்திக்கு திருமாவளவன் கூறியிருக்கும் ஆதரவு கருத்து சர்ச்சையாகியிருக்கிறது. நடந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பேசுகையில், ‘’திருவள்ளூரை சார்ந்த தலித் இளைஞன் தனுஷ், தேனி மாவட்டத்தை சார்ந்த ‘வடுக’ வகையறா பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி கலப்பு மணம் செய்கிறான். சமுக மற்றும் பொருளாதார ரீதியாக […]

பா.ம.க.வுக்கு இரண்டு மாங்காய்.? தந்தையர் தினத்தில் உச்சகட்டம் தொட்ட ராமதாஸ் அன்புமணி மோதல்.

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடந்துவந்த அதிகாரப் போட்டி தந்தையர் தினத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. பா.ம.க.வுக்கு புதிய பொதுச்செயலாளர் நியமனம் செய்யப்பட்டிருப்பதை அடுத்து கட்சி இரண்டாக உடைவது உறுதியாகியுள்ளது. பிரச்னை தொடங்கிய நேரத்திலேயே கட்சிப் பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை ராமதாஸ் நீக்கினார் டாக்டர் ராமதாஸ். இந்நிலையில், அன்புமணியுடன் சென்ற மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கட்சிப் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கிவிட்டு, அப்பதவிக்கு […]

இயற்கை கள் குடித்து சீமான் போராட்டம். அடுத்து இயற்கை கஞ்சா விற்பனை..?

தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கிக் குடித்தார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இயற்கை பானம் என்பதால் கள் குடிப்பதில் தவறு இல்லை என்று கூறியிருப்பது போன்று இயற்கையாக விளையும் கஞ்சா விற்பனைக்கும் போராட்டம் நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் நேற்று நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் […]

அண்ணாமலைக்கு ட்ஃப் கொடுக்கும் காயத்ரி… கதற விடுறாங்கப்பா

அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி இணைந்து கூட்டணியை உறுதி செய்த பிறகும் அண்ணாமலை அமைதியாக இருப்பதில்லை. போகிற இடமெல்லாம் பா.ஜ.க. ஆட்சி என்றே பேசி வருகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சீட் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் வம்பிழுத்து வருகிறார். இதற்கு சீனியர்கள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவு போட்டுவிட்டார். அண்ணாமலையின் வாய் சவடாலை புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே விரும்பவில்லை. அண்ணாமலை மீது டெல்லிக்குப் […]

திருமா பேரணியை டம்மியாக்குவதற்கு பூஜை ஜெகன் நாடகம்..? திமுக மீது பாயும் சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் நீல நிறத்தில் கோட், சூட் போட்டுக் கொண்டு திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் என்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. விசிக பேரணிக்கு வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் நீல நிறத்திலான ஆடை மற்றும் புடவைகளை அணிந்திருந்தனர்.  இந்த பேரணி போதிய கவனம் பெறக்கூடாது என்பதற்காகவே பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்கு போலீஸாரை களத்தில் இறக்கி பெரும் பரபரப்பை திமுக கிளப்பியதாக குற்றம் சாட்டப்படுகிறது. திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் […]

விமான விபத்துக்கு கடவுள் காரணமா..? மோடி போட்டோஷூட், அமித்ஷா டிராமா

உலகை உலுக்கிய வகையில் இந்தியாவில் விமான விபத்து நடந்துள்ளது. இந்த விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிடச் சென்ற மோடி காஸ்ட்யூம் மாற்றியதும் அமித்ஷா இந்த விபத்தை விதி என்று விட்டு விட வேண்டும் என்று கூறியதும் வைரலாகிவருகிறது. விமான விபத்துக்கு கடவுளே காரணம், விதி என்று விட்டுவிட வேண்டும் என்றெல்லாம் அமித்ஷா பேசியிருக்கிறார். நாட்டுக்கு என விமான நிறுவனம் இல்லை. தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சக்தியும் அமைச்சரவைக்கு இல்லை. பிறகு எதற்கு இந்த டிராமா என்று […]