விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமியக் கட்சியா..? திருமாவளவன் மீது திடுக் குற்றச்சாட்டு

விபூதியை அழித்துவிட்டு செல்ஃபி போஸ் கொடுத்த திருமாவளவன் மீது பாஜகவினர் பாயந்துவருகிறார்கள். அதற்கு திருமாவளவன் விதவிதமாக விளக்கம் கொடுத்தாலும் அது எடுபடவில்லை. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமியக் கட்சியாக மாறிவிட்டது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து அர்ஜூன் சம்பத் இன்று, ‘’திருமாவளவன் விடுதலை சிறுத்தை கட்சியை தொடங்கிய போது அதில் இஸ்லாமியர்களே கிடையாது. அதுவரை இந்து எதிர்ப்பு கொள்கை அந்த கட்சியில் இருந்தது இல்லை. ஆனால் நாளடைவில் அக்கட்சியில் இஸ்லாமியர்கள் சிகவில் நுழைந்தார்களோ அன்று […]
இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு… மக்களுக்கு மோடியின் சூப்பர் பரிசு

சீனியர் மக்களுக்கு ரயிலில் இருந்த கட்டண சலுகை முற்றிலும் மறுக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தபிறகும் மோடி அரசு மக்கள் மீது கொஞ்சமும் கருணை காட்டவில்லை. இந்த நிலையில் ரயில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் அறிவிப்பின்படி, திருத்தியமைக்கப்பட்ட புதிய ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், புறநகர் ரயில் பயணக் கட்டணங்கள் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. புறநகர் அல்லாத பிற ரயில்களில் சாதாரண, ஏசி […]
டெல்லியில் அன்புமணி கூட்டணி அறிவிப்பு..? பறிபோகும் ராமதாஸ் பதவி

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டத்தில் அன்புமணி அடுத்தகட்ட நடவடிக்கையாக இன்று டெல்லிக்குப் போயிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ராமதாஸ் – அன்புமணி இடையேயான நேரடி மோதல் பாமக பொதுக்குழு கூட்டத்தில் வெட்ட வெளிச்சமானது. அதன் பிறகு, பாமகவுக்கு இனி தானே தலைவர் என்றும், அன்புமணி செயல் தலைவராகச் செயல்படுவார் எனவும் அறிவித்த ராமதாஸ், பின்னர் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், தனது உயிர் மூச்சு இருக்கும் வரை தானே பாமக தலைவராக செயல்படுவேன் என அறிவித்தார். மேலும், […]
டாக்டர் ராமதாஸை பைத்தியம்னு சொல்லிட்டாரே…. அன்புமணி மீது பாயும் பாட்டாளிகள்

பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இதில் ஒரு பகுதியாக ராமதாஸ்க்கு புத்தி பேதலித்துவிட்டதாக அன்புமணி நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரு கட்சி உருவாக்கிய மாபெரும் தலைவரை பைத்தியம் என்று அன்புமணி பேசியிருப்பது அவரது கட்சி நிர்வாகிகளையே அலறவிட்டுள்ளது. தொடர்ந்து ராமதாஸ் மட்டும் குற்றச்சாட்டுகள் வைத்துவந்த நிலையில் அன்புமணியும் இப்போது பதிலுக்குப் பேசத் தொடங்கியிருக்கிறார். ராமதாஸ் நடவடிக்கை குறித்து அவர், ‘’12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு […]
ராமதாஸ் நிர்வாகிகளுக்கு அன்புமணி மிரட்டல்… வெட்டுகுத்து நடக்கப் போகுதா..?

கட்சி என்றாலே ஏதாவது உட்கட்சிக் குழப்பம், சண்டை, வெட்டு, குத்து போன்றவை சகஜம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் எப்போது வெட்டு குத்து நடக்குமோ என்று பா.ம.க. வட்டாரத்தில் பதற்றம் நிலவுகிறது. ராமதாஸ் நியமனம் செய்யும் நபர்களை எல்லாம் அன்புமணியின் ஆட்கள் மிரட்டிவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற்து. இரண்டு பக்கமும் புதுப்புது நிர்வாகிகள் நியமனம் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு ஊரிலும் பதவிக்கு சண்டை நடந்துவருகிறது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், ‘’என் மூச்சிருக்கும் வரை பாமக […]
எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் அமித்ஷா அணுகுண்டு. விஜய்க்கு குறி வைக்கிறார்களா..?

எதிர்க்கட்சித் தலைவராக இப்போது திமுகவை எதிர்த்து கடுமையாக போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் அமித்ஷா கொடுத்திருக்கும் பேட்டி எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது. தொடர்ந்து கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, ‘’நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், […]
நடிகை மீனாவுக்கு பாஜகவில் புதிய பதவி..? கடுகடுப்பில் குஷ்பு

அரசியலுக்குள் நுழையவே செய்யாத நடிகை மீனாவுக்கு விரைவில் பாஜகவில் மிகப்பெரும் பதவி கொடுக்க இருப்பதாக வரும் தகவல்களால் நடிகை குஷ்பு கடும் கோபத்தில் இருப்பதாக கட்சிக்குள் களேபரம் நடக்கிறது. டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி அணிந்தபடி பங்கேற்ற பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் நடிகை மீனா கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கியது. அடுத்து அமைச்சர் முருகனுடன் சில நிகழ்ச்சிகளில் மீனா பங்கேற்றார். இந்நிலையில் […]
முருகன் தமிழ்க்கடவுள் என்றால் கணேசன் யார்..? திருநீறு அழித்த திருமாவின் அடுத்த சர்ச்சை.

மதுரையில் திருநீறு அழித்து சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன் மீண்டும் இந்துக்களிடம் மோதும் வகையில் அடுத்த சர்ச்சையைத் தொடங்கி வைத்திருக்கிறார். திருமா பேசுகையில், ‘’”முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவனும், பார்வதியும் தமிழ் கடவுளாகத்தானே இருக்க முடியும்? கணேசன் மட்டும் ஏன் தமிழ் கடவுளாக இல்லை..?” இதை கேட்டால் அவர்களுக்கு கோவம் வருகிறது. ஏன் முருகனுக்கு வேறு எங்கேயும் வழிபாடு இல்லை’’ என்று லாஜிக்காக கேள்வி எழுப்பியிருக்கிறார். இதையடுத்து திருமாவளவன் மீது இந்து முன்னணி ஆட்களும் பாஜகவினரும் பாய்ந்துவருகிறார்கள். […]
ராமதாஸ்க்கு 60வது கல்யாண நாள். சரண்டர் ஆவாரா அன்புமணி..?

இன்று 60 ஆவது திருமண நாள் காணும் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறர்கள். இன்றைய தினம் அன்புமணி சரண்டர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் ஆளுக்கு ஒரு பக்கம் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துவருகிறார்கள். இதனால் கட்சி இரண்டாக உடைவது உறுதியாகிறது. இந்நிலையில் அன்புமணி இன்று ராமதாஸின் திருமண நாளில் சந்தித்து சரண்டர் ஆகவேண்டும் என்பதே பாட்டாளிகள் ஆர்வமாக இருக்கிறது. இது குறித்து பா.ம.க.வினருக்கு ஒரு […]
சமஸ்கிருதத்துக்கு இத்தனை கோடிகளா..? தமிழுக்கு மோடியின் பட்டை நாமம்

தமிழ் நாட்டில் பிறக்கவில்லை, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்றெல்லாம் வசனம் பேசும் மோடி, அவற்றை எல்லாம் தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டதில்லை. மீண்டும் தமிழைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தைத் தூக்கி தோளில் வைத்து கொண்டாடியிருக்கிறது மத்திய அரசு. இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி;., ‘’சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக […]

