அரக்கோணம் மாணவிக்கு இபிஎஸ் போராட்டம்… தமிழகத்தை கலக்கும் போஸ்டர்கள்

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது போலவே, ‘அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி’ என்று சொல்லி போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அவர், ‘’ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக “சார்”களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக […]
பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்..? எல்லாமே நாடகமா ராமதாஸ்..?

டாக்டர் ராமதாஸ் நடத்திவரும் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்துவரும் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று எழுந்திருக்கும் பரபரப்புக்குப் பின்னே இருக்கிறது, தேர்தல் நாடகம். நேற்று தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தெரிவித்திருந்தார். வன்னியர் சங்கத்தில் ஒரு மாநில தலைவர், 4 மாநில செயலாளர்கள், 62 மாவட்ட செயலாளர்கள், 62 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அதேபோல் 2 துணை […]
கனிமொழிக்கு பா.ஜ.க. மரியாதை, அதிமுகவுக்கு கெட் அவுட்

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணியை அமித்ஷா உறுதி செய்துவிட்டார் என்றாலும், கட்சி மேலிடத்திலும் ஒற்றுமை நிலவுவதாகத் தெரியவில்லை. அதனாலே வெளிநாடுகளுக்கு அனுப்பும் எம்.பி.க்கள் குழுவில் திமு.க.விற்கு மட்டும் இடம் கிடைத்திருக்கிறது. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகளின் நியாயத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச்சொல்லும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ரஷ்யா, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இப்போது கூட்டணியில் இருக்கும் […]
விசாகன் ஐ.ஏ.எஸ். ஒப்புதல் வாக்குமூலம்..? வைரலாகும் யார் அந்த தம்பி போஸ்டர்

அமலாக்கத்துறை மூலம் 14 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்யப்பட்ட டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐ.ஏ.எஸ். ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் திமுகவினருக்கு பெரும் கலக்கமாக மாறியிருக்கிறது. இன்று சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல்படி டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் டாஸ்மாக்கில் ரத்தீஷ் உத்தரவுப்படியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டதாகக் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ரத்தீஷை உதயநிதியின் பிரதிநிதியாகப் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலிடம் கூறிய தகவல்கள் படி விசாகன் ஐ.ஏ.எஸ். அவருக்குத் தெரிந்த […]
இரண்டாவது நாளாக ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு. யாரெல்லாம் மாட்டப் போறாங்க தெரியுமா?

சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்திய இலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்பட 12 இடங்களில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன், அவரை ஏன் சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை..? இவர் கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்துவின் பேத்தி தாரிணியின் கணவர். அமைச்சர் அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பர். உதயநிதியின் நம்பிக்கைக்கு உரியவர். இவரது வீடு தேனாம்பேட்டையில் உள்ள […]
உதயநிதி கைதுக்கு அமலாக்கத்துறை ஸ்கெட்ச்..? யார் இந்த ரத்தீஷ்?

எப்படியாவது உதயநிதிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே அமலாக்கத்துறை ரெய்டு நடந்திருப்பதாகவும், வாட்சப் ஸ்கிரீன்ஷாட் கிழித்து வீசப்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. நேற்று நடந்த அமலாக்கத்துறை ரெய்டை அடுத்து அ.தி.மு.க.வினர், ‘’டாஸ்மாக் எம்.டி. வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives […]
நாளை விஜய் கூட்டணி அறிவிப்பு..? மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டம்

பூத் கமிட்டி கூட்டம் நடத்திய நடிகர் விஜய் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து தெளிவான அறிவிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையுடன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார் நடிகர் விஜய். விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்ற விஜய் மாநாடு அவருக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டியது. அதேநேரம் அடுத்த படம் ரிலீஸ்க்குப் பிறகே நேரடி அரசியலுக்கு வருவார் என்று […]
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக ஜனாதிபதி முர்மு..? தள்ளிப்போகும் கவர்னர் மாற்றம்

துணைவேந்தர் நியமனம் மற்றும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பது ஆகியவை தொடர்பாக தி.மு.க. வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உடன்பிறப்புகள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். இதனால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றம் தள்ளிப்போகிறது என்கிறார்கள். இந்த வாரம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறார் என்று ஒரு பேச்சு உலவியது. புதிய கவர்னர் நியமனத்துக்கு டெல்லியில் ஆலோசனை நடப்பதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் […]
அன்புமணிக்கு இது கூட தெரியாதா..? சண்டைக்குத் தயாராகும் திருமாவளவன்

பா.ம.க. மாநாட்டில் பேசிய அன்புமணி, ‘’நான் மற்ற தலைவர்கள் போல நான் கிடையாது… அத்து மீறு, அதை செய், இதைச் செய் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். முதலில் படித்து வேலைக்கு போக வேண்டும். அதன் பிறகு கட்சிக்கு வர வேண்டும். எனது தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்கக் கூடாது’’ என்று நேரடியாக திருமாவளவன் மீது ஆவேசம் காட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுப்பது போன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கல் எடுத்து […]
நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு நியாயம் கிடைக்குமா? செல்வப்பெருந்தகைக்குச் சிக்கல்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் செல்வப்பெருந்தகை மீது குற்றச்சாட்டு எழுப்பினார். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையொட்டி சிபிஐ வழக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுக்கு சங்கர். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சவுக்கு சங்கர் பேசியிருந்தார். அதில் தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்யாமல் பணம் பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டு கூறியிருந்தார். இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாகக் […]

