News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

லியோ டிக்கெட் முன்பதிவு எப்போது? புதிய தகவல்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படத்தில் மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது.   இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய்தத், கவுதம்வாசுதேவ் மேனன், […]

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! டெல்லியில் உணரப்பட்டதால் மக்கள் பீதி!

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வாக உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். நேபாளத்தில் இன்று மதியம் சரியாக பிற்பகல் 2.15 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான நிலையில் நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் […]

பிரபாஸ் கன்னத்தில் பளார் விட்ட ரசிகை! என்ன நடந்தது தெரியுமா?

பாகுபலி நடிகர் பிரபாஸ் கன்னத்தில் ரசிகை ஒருவர் பளார் விட்ட வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரபாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் அவரது பாகுபலி திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று யார் இந்த பிரபாஸ் என்று அடையாளம் காணப்பட்டார். இருப்பினும் பிரபாசின் சமீபத்திய படங்களான ராதேஷியாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை. தற்போது சலார் திரைப்படத்தில் பிரபாஸ் மும்முரமாக பணியாற்றி வருகிறார். இத்திரைப்படம் […]

இடைநிலை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்! வீடியோ வைரல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் கலந்துரையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் 6வது நாளாக ஈடுபட்டு வந்தனர்.   இதைத்தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுடன் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு!

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று கோவையில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிவுக்கு பின்னர் இரு கட்சிகளின் ஒவ்வொரு நகர்வும் அரசியல் நோக்கர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மறைந்த தலைவர்களை அண்ணாமலை அவமரியாதையாக பேசிவிட்டார் என்பதை முன்னிறுத்தி பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டார். எனவே அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தமிழக பா.ஜ.க. தலைவர் நியமிக்கப்பட்டால் முறிந்த கூட்டணி மீண்டும் […]

இந்திய கோடீஸ்வரர் மகனுடன் பலி! ஜிம்பாப்வேயில் என்ன நடந்தது?

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹர்பால் ரந்தாவா தனது 22 வயது மகனுடன் ஜிம்பாப்வேயில் நடந்த விமான விபத்தில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள வைரச்சுரங்கம் அருகில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அது இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹர்பால் ரந்தாவாவுக்கு சொந்தமான தனிவிமானம் என்று அடையாளம் காணப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடந்த இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அதில் […]

நியூ லுக்கில் எம்.எஸ்.தோனி! லைக்குகளை குவிக்கும் அசத்தல் ஹேர் ஸ்டைல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் நியூ ஹேர் ஸ்டைல் புகைப்படம் தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு பெற்றாலும் கூட தற்போது களத்தில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்கிறார். இளைஞர்கள், ரசிகைகள் என எம்.எஸ்.தோனியை குறித்த ஏதேனும் ஒரு டாப்பிக் இணையத்தில் தினந்தோறும் டிரெண்டிங்கில்தான் உள்ளது. கிரிக்கெட்டுடன் சேர்த்து சினிமா தயாரிப்புகளிலும் இறங்கியுள்ள எம்.எஸ்.தோனி ஒரு ஹீரோவைப் போல காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் […]

எடப்பாடி பழனிசாமி- தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திடீரென்று சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீர் சந்திப்பு மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு தமிமுன் அன்சாரி கூறும்போது, […]

எம்.எல்.ஏ. காலில் விழுந்து கதறிய பெண்! ஏன் தெரியுமா?

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. வெங்கடேசனின் காலில் திடீரென்று விழுந்து கதறிய கிராமத்து பெண் ஒருவர், மதுபானக் கடையை மூடிவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   காந்தி ஜெயந்தியை முன்னிட்டு (அக்.2) தமிழகம் முழுவதும் நேற்று கிராமசபை கூட்டங்கள் கூட்டப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கிராமசபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.   அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மன்னாடிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கூடியது. […]

முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு! இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் வாபஸ்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை ஏற்றுக் கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் […]