இஸ்ரேல் போர் அறிவிப்பு! ஹமாஸ் ஊடுருவல் எதிரொலி!

ஹமாஸ் ஊடுருவலால் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் போர் அறிவிப்பு விடுத்துள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனிய போராளிகள் தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளின் மீது இன்று காலை திடீர் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டனர். மேலும் பல போராளிகள் ஆயுதமேந்தி எல்லை வேலியை கடந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியது. அப்போது பாலஸ்தீன போராளிகள் பலர் காயமடைந்ததாகவும், ஒரு பெண் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொதித்தெழுந்த இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாங்கள் […]
பா.ஜ.க., அ.தி.மு.க. அடிமைக் கூட்டணி! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பளிச்!

பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருந்தது அடிமைக் கூட்டணி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளிப்படையாக கூறியுள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்துக் கொண்டு பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க.பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அ.தி.மு.க., பா.ஜ.க.வில் இருந்து விலகியதை போல மேலும் சில கட்சிகள் விலகக் […]
பற்றி எரிந்த ஏ.டி.எம்.! பல லட்சம் ரூபாய் பணம் நாசம்!

சென்னையில் தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் எரிந்து சாம்பலானதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் எரிந்து நாசமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் கேம்ப் நெடுஞ்சாலையில் பிரபல ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகே இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. ஓட்டல் ஊழியர்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய சமயத்தில் அன்று அதிகாலை 4.30 மணியளவில் ஓட்டல் அருகே இருந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரம் தீப்பற்றி எரிந்தது. […]
பாலிவுட்டை தெறிக்கவிட்ட அட்லீ! மிரளும் இயக்குனர்கள்!

கோலிவுட் இயக்குனரான அட்லீ, பாலிவுட்டில் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்ததால் அங்குள்ள டைரக்டர்கள் மிரண்டு போயுள்ளனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய்சேதுபதி, யோகிபாபு என மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியான படம் ஜவான். இத்திரைப்படத்தை இயக்கிய அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அட்லீ பழைய படங்களை காப்பி எடுத்து […]
உ.பி.யின் நீர்வாழ் விலங்கு டால்பின்கள்! முதல்வர் அறிவிப்பு

உத்தரபிரதேசத்தின் மாநில நீர்வாழ் விலங்காக டால்பினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடல்வாழ் உயிரினங்களில் டால்பின்கள் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் நட்பான உயிரினமாகும். அறிவுத்திறமை கொண்ட டால்பின்கள் மனிதர்களுடன் நட்புடன் பழகுவதில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாநில பழம், மாநில விலங்கு என தனித்தன்மை உண்டு. அதன்படி உத்தரபிரதேசத்தின் மாநில நீர்விலங்காக டால்பினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் குளங்கள் மற்றும் நீர்நிலைகளை தூய்மையாக […]
அடுத்த 10 ஆண்டுகளுக்கு யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு சிக்கல்! முக்கிய பின்னணி!

பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடியாக அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே சென்னை& பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மோட்டார் சைக்கிளில் தனக்கு தானே விபத்தும் காயமும் ஏற்படுத்திக் கொண்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன்படி கடந்த மாதம் 19ம் தேதி அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற […]
கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம்! முக்கிய தகவல்கள்!

கிளாம்பாக்கத்தில் புதியதாக அமைய உள்ள ரெயில் நிலையத்திற்கான ரூ.20 கோடி மதிப்பிலான டெண்டரை தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது. தாம்பரத்தை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவைக்கான புதிய பேருந்து நிலையம் முழுவீச்சில் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மிகவும் பரபரப்பாக உள்ள கிளாம்பாக்கத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய ரெயில் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி தாம்பரம்& செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரே புதிய ரெயில் […]
இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி! சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (அக்.8) இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் இந்தியா, […]
நாளை 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து! என்னவென்று தெரியுமா?

நாளை (அக்.8) 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரட்ஜ் வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (அக்.7) இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.30 மணிவரையில் அந்த வழித்தடங்களில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 14 ரெயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் […]
நாகை மீனவர்கள் மீது தாக்குதல்! அட்டகாசம் செய்யும் கடற்கொள்ளையர்கள்!

நாகை மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான வலை, ஜி.பி.எஸ். கருவிகளை அபகரித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ், கோடிலிங்கம் ஆகிய 4 மீனவர்கள் நேற்று மாலை படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இவர்கள் 4 பேரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ஒரு படகில் 3 இலங்கை […]

