ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலில் 700 பேர் பலி! இஸ்ரேலில் பயங்கரம்!

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேல் நாட்டின் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் என்ற பயங்கரவாத குழு திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஏவப்பட்ட ஏவுகணைககால் பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில்பாபாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் மாதம் கைது செய்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட போது அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அமலாக்கத்துறையினர் மீண்டும் தங்கள் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு […]
5 மாநில தேர்தல் தேதி! தேர்தல் ஆணையம் 12 மணிக்கு அறிவிப்பு!

நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மற்ற 4 மாநிலங்களுக்குமான பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய […]
சந்தியாவை கொலை செய்த சாதிச்சமூகம்! ஒருதலை காதல் போர்வை?

தான் வேலை செய்யும் கடைக்கான பொம்மைகளை குடோனுக்குள் அடுக்கிக் கொண்டிருந்த 18 வயதான சந்தியா என்ற இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்த 17 வயது சிறுவன் அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்கிறான். எங்கு செல்கிறது இந்த சமூகம் என்ற கேள்வியோடு இந்த கொலையும் அதன் பின்னணித் தகவல்களும் உங்களுக்காக. நெல்லைக்கு மற்றொரு பெயர் என்று சொல்கிற அளவுக்கு உலகளவில் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு […]
கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு ரெயில் அறிவிப்பு!

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (அக்.8) இந்தியா& ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் வேளச்சேரி, சிந்தாதரிப்பேட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் இந்தியா, […]
மகளிர் உரிமைத் தொகை கேட்டு போராட்டம்! எங்கே தெரியுமா?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வானவர்களான 1.06 கோடி பயனாளர்களின் வங்கிக்கணக்கில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்கு […]
அக்.11ம் தேதி முழு அடைப்பு போராட்டம்! டெல்டா மாவட்டங்களில் பதற்றம்!

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் அதன் அமைப்புகளையும் கண்டித்து வருகிற 11ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தும் கூட அதனை ஏற்க மறுத்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினரும், விவசாய அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், ரெயில் மறியல், தர்ணா என பல்வேறு […]
பா.ஜக. போஸ்டரில் காங்கிரஸ் தலைவர் புகைப்படம்! குழப்பத்தில் மக்கள்!

ராஜஸ்தானில் அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றில் பா.ஜ.க. தலைவர்களுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் குழம்பிப்போயுள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளன. இதில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 100 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அங்கு […]
முன்னதாக வழங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! முக்கிய அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் முன்னதாகவே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வானவர்களான 1.06 கோடி பயனாளர்களின் வங்கிக்கணக்கில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்கு மேல்முறையீடு செய்யலாம் […]
ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ! ஏன் தெரியுமா?

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர், விவசாயியை எட்டி உதைத்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர் தங்பாண்டியன், தன்னிடம் கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்து பெரும் சர்ச்சை எழுந்தது. இவ்விவகாரத்தை தொட்ர்ந்து தங்பாண்டியன் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில், கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தங்பாண்டியனை இடைநீக்கம் செய்வதாக […]

