News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பிரேமலதாவை டென்ஷனாக்கிய விஜய்… என்னாச்சு..?

திமுகவில் வாய்ப்பு இல்லை எனும் பட்சத்தில் அதிமுகவில் ஐக்கியமாக வேண்டும் என்பதுதான் பிரேமலதாவின் எண்ணம். தங்கள் பலத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக விஜய் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக அவ்வப்போது பேசிக்கொண்டு இருந்தார். இதையடுத்து பிரேமலதா எங்கே போனாலும் அவரிடம் விஜய் பற்றி கேள்வி எழுப்புவதும் அவர் பதில் சொல்வதுமாக இருந்தார். ஆனால், விஜய் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை என்பதுடன் டென்ஷாகிவிட்டார். நெல்லை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று, ‘’நாடு முழுவதும் வாக்கு […]

டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அனுபவத்திற்கு சூப்பர் பதவி…. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பணிக்காலம் நாளை மறுநாள் முடிவடையும் நிலையில், இன்று அவரை தீயணைப்பு ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார் சங்கர் ஜிவால். சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்துக்கு நெருக்கமானவர்.  பொறியாளரான இவர் கடந்த 1990 ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தனது முதல் பணியை மன்னார்குடி உதவி எஸ்பியாக தொடங்கிய அவர், சேலம், மதுரை […]

ராமதாஸை அம்பலப்படுத்திய அன்புமணி. ராமதாஸ் – சுசிலா திருமண நாள் கொண்டாட்டம்

தைலாபுரத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி மாலை நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் – சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சி நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ராமதாஸ் – சுசிலா 50வது திருமண நாள் நிகழ்வு குறித்து ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் பின்னணியில் அன்புமணி இருப்பதாக கூறப்படுகிறது. . பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இருவரும் கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். […]

திருப்பூர், ஈரோடு ஜவுளி தொழிலுக்கு மூடு விழா..? மோடி கப்சிப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50% வரிவிதிப்பால் திருப்பூர், ஈரோடு ஜவுளித் தொழில் சர்வநாசமாகிவிடும் என்று உற்பத்தியாளர்கள் கதறுகிறார்கள். இதனால் என்ன நடக்கப்போகிறது என்பதே புரியவில்லை, இந்த தீபாவளி மேற்கு மாவட்டங்களில் ரண வேதனையை ஏற்படுத்த போகிறது என்று புரியாமல் விழிக்கிறார்கள். இந்நிலையில் ஜவுளி ஆலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க ஆயத்தமாகிவருகிறது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ‘’அமெரிக்க அரசின் புதிய வரிவிதிப்பால் இந்தியா 4 […]

கிறிஸ்தவர் விஜய்யை பிள்ளையாரா மாத்திட்டாங்கப்பா… எலியாக புஸ்ஸி ஆனந்த்

பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நடிகர் விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான ஒரு வாழ்த்து தெரிவித்தார். அதாவது, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். அதாவது விஜய் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலே இப்படி வாழ்த்து கூறியிருந்தார். ஆனால், அவரது ரசிகர்கள் எல்லை மீறிப் போய்விட்டார்கள். கிறிஸ்தவரான விஜய்யை பிள்ளையாராக சித்தரித்து சிலை வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் பாஜகவினரை கொதிக்க வைத்திருக்கிறது. பிள்ளையாரை முதல்வர் சேரில் அமரவைத்து, கையெழுத்து போடுவது போன்று வைத்திருக்கிறார்கள். பிள்ளையார் […]

விஜய் ஜெயிலுக்குப் போவாரா..? சிக்கலாகும் ரேம்ப்வாக் வழக்கு

மருத்துவமனையில் இருக்கும் விஜய் ரசிகர் காவல் நிலையத்தில் அளித்திருக்கும் புகாரை அடுத்து விஜய் மற்றும் அவரது பவுன்சர்களுக்கு கைதாகும் சிக்கல் உருவாகியிருக்கிறது. கடந்த 21ஆம் தேதி மதுரையில் நடந்த விஜய் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 30 மீட்டர் தூரத்திற்கு போடப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் விஜய் நடந்த வந்த போது, இளைஞர்கள் பலரும் ராம்ப் வாக் மேடையில் ஏறி விஜய்க்கு துண்டை அணிவிக்கவும் கட்டிப்பிடிக்கவும் முயன்றனர். இந்த ரசிகர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அப்படி […]

அமைச்சர் நேரு மீது நில மோசடி குற்றச்சாட்டு. திருச்சியில் எடப்பாடி அட்டாக்

திருச்சி பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் நேரு செய்திருக்கும் கோல்மால்களை எடப்பாடி பழனிசாமி அம்பலப்படுத்தியிருக்கிறார். நேற்று திருச்சி புதூர் பிஷப் சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரையாற்றினார். அப்போது அவர், “அமைச்சர் நேரு  இந்த தொகுதியின் எம்.எல்.ஏ..  தமிழ்நாட்டில் இவருடைய இலாகாவில்தான் நிறைய பிரச்னைகள். சொத்துவரி ஏற்றிவிட்டனர்.  குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட […]

வரலாறு மட்டுமல்ல, அறிவியலையும் மாத்துறாங்க… பாஜக விண்வெளி லீலைகள்

இஸ்லாம் வழிபாட்டுத்தலங்களை இடித்துவிட்டு, அங்கெல்லாம் இந்து கோயில்களைக் கட்டுவதில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. அதேபோல், காந்திக்கு இணையாக கோட்சே புகழ் பாடப்படுகிறது. சாவர்க்கருக்கு என்று தனியே வரலாறு உருவாக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களிடம் பாஜக அமைச்சர் கூறிய அறிவியல் சமாச்சாரம் எக்கச்சக்க சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. அதாவது, முதன்முதலில் விண்வெளிக்குப் போனவர் அனுமன் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., ‘முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு […]

ஆட்டோவுக்கு மானியம் தரும் எடப்பாடி… மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு அமித்ஷா

எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் எழுச்சிக் கூட்டங்களில் ஏதேனும் ஒரு தேர்தல் அறிவிப்பு வெளியிடுகிறார். அந்த வகையில் ஆட்டோவுக்கு மானியம் தரப்படும் என்று அறிவிப்பு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று தொடர்ந்து குண்டு போட்டுக்கொண்டே இருக்கிறார். இது குறித்து பேசும் அதிமுகவினர், ‘’அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறார். எடப்பாடி தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்று சொல்கிறார், இதை தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் அமைக்கிற தனிப்பெரும்பான்மை ஆட்சியில் […]

விஜய் மாநாட்டில் இவ்வளவு சேதாரமா..? ரசிகர்கள் செலவு எவ்வளவு தெரியுமா..?

முதல்வர் ஸ்டாலின் துண்டு சீட்டு பார்த்து படிப்பார். அதேபோல் விஜய் ஏ4 சீட் பார்த்து படித்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. எல்லாவற்றையும் எழுதி வைப்பது பிரச்னையில்லை, இதையுமா என்று அவரது ரசிகர்களே ஆதங்கப்படுகிறார்கள். ஏனென்றால், அவர் எழுதி வைத்தது இதுதான். மதுரை கிழக்கு வேட்பாளர்: விஜய் மதுரை மேற்கு வேட்பாளர்: விஜய் மதுரை வடக்கு வேட்பாளர்: விஜய் 234 தோகுதிகளிலும் வேட்பாளர்: விஜய். இதையுமே எழுதிப்படிக்க வேண்டும்? அதேநேரம், விஜய் மாநாட்டில் எவ்வளவு சேதாரம் என்று ஒரு […]