News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

2 ரவுடிகளின் உடல் இன்று பிரேத பரிசோதனை! பரபரப்பான ஸ்டான்லி மருத்துவமனை!

நேற்று (அக்.12) என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் இன்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார், பிரபல கூலிப்படைத் தலைவன் முத்து சரவணன்தான் கொலையாளி என்று உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார் ரவுடி முத்து சரவணனை தேடி வந்தனர்.  இந்நிலையில் நேற்று (அக்டோபர் […]

தாயகம் திரும்பிய 212 இந்தியர்கள்! திகிலூட்டும் இஸ்ரேல் நாட்கள்!

மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கித்தவித்த 212 இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பினர்.   இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலுக்கு இடையே சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார்.   இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தி காசா பகுதி தங்களுடைய நாட்டின் எல்லை என்று இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் […]

பேச்சுவார்த்தையில் உடன்பாடு! ஆசிரியர்கள் போராட்டம் ரத்து!

அமைச்சர் அன்பில் மகேஷ் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆசிரியர்கள் நடத்த இருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக டிட்டோஜாக் ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.   பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது, எண்ணும் எழுத்தும் திட்டடத்தை கைவிடுவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுதொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களை கூட்டு நடவடிக்கைக் குழு இன்று சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். […]

உலகக்கோப்பை போட்டி! சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு!

  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உலகக்கோப்பை போட்டியை ரசிகர்கள் காண்பதற்கு ஏதுவாக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.   13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய ஆட்டத்தில் (அக்.13) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.   இதனையொட்டி கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பநப்தம் கையெழுத்தானது. அதன்படி ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை வழக்கத்தை […]

தனியார் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து! உடல்நலக்குறைவால் மக்கள் அவதி!

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் வீசிய காற்றில் துர்நாற்றம் வீசி மக்கள் அவதிப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் டாக்ரோஸ் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் புதிதாக கட்டியுள்ள எம்.பி.பி.பிளாண்ட் இரண்டாவது தளத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு ரசாயன ரிக்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் அளவுக்கதிமாக துர்நாற்றம் வீசி மக்கள் அவதிப்பட்டனர். மேலும் அளவுக்கதிமான புகைவெளியேறியதால் அப்பகுதி மக்களுக்கு கண் […]

ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை!

  ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.9.40 கோடி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.   சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர்.   சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வாங்கி குவித்து […]

தகுதியுள்ள ஒரு பயனாளி கூட விடுபட்டு விடக்கூடாது! அமைச்சர் உதயநிதி!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியுள்ள ஒரு பயனாளி கூட விடுபட்டு விடக்கூடாது என்பதில் நம் தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்துள்ள மகளிருக்கு நம்பிக்கை தரும் விதமாக பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.   கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயனடைந்து வரும் நிலையில், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்களின் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, […]

உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் அழைப்பு!

உடல் உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அழைப்பு விடுத்துள்ளார். உடல் உறுப்புதானத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டில்  அதற்கான விழிப்புணர்வும் அதிகளவில் இருந்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில், உடல் உறுப்புதானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் செய்வோம் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இதனால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக […]

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி! உடலை வாங்க மறுக்கும் தந்தை!

போலீசார் பணம் வாங்கிக் கொண்டு தான் என் மகனை கொன்றுவிட்டார்கள் என்று இன்று காலை என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி சரவணனின் தந்தை பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.   அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார், பிரபல கூலிப்படைத் தலைவன் முத்து சரவணன்தான் கொலையாளி என்று உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்த போலீசார் ரவுடி முத்து சரவணனை […]

1.5 லட்சம் பெண்கள் மாயம்! பிரியங்கா காந்தி சொல்வது என்ன?

பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை 1.5 லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மத்தியபிரதேசம் மண்ட்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசும்போது, […]