News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி!

சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த வாரத்தில் தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து இன்று தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி 12 காவல் உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1.வேப்பேரி காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த கண்ணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் […]

இஸ்ரேலில் இருந்து 14 தமிழர்கள் சென்னை வருகை! அனைவரையும் மீட்போம்!

இஸ்ரேலில் சிக்கித் தவித்த 14 தமிழர்கள் சென்னை வந்தடைந்துள்ள நிலையில் அனைவரையும் விரைவில் மீட்போம் என்று அமைச்சர்  மா.சுப்பிரமணியன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.   இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாதிகள் மோதல் சம்பவத்தால் இஸ்ரேலில் தங்கியுள்ள அயல்நாட்டினர் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாட்டு அரசுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.   அதன்படி இந்திய நாட்டின் மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 212 இந்தியர்களை பத்திரமாக விமானம் மூலம் மீட்டு தாயகம் […]

தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு! முதலமைச்சர் நந்தனம் மைதானத்தில் ஆய்வு!

தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில் அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதற்கான அழைப்பை கனிமொழி எம்.பி. […]

ரேஷன் கடைகளில் யு.பி.ஐ. வசதி! பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் காரணமாக பொதுமக்கள் கையில் ரொக்கம் வைத்துக் கொள்ளாமல் யு.பி.ஐ.மூலம் பணத்தை செலுத்தி வருகின்றனர். அதன்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் யு.பி.ஐ. வசதியே நடைமுறையில் உள்ளது. ரேஷன் கடைளில் யு.பி.ஐ. வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஏற்கனவே தமிழ்நாட்டு கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டு […]

கொடநாடு வழக்கு நவ.24ம்தேதிக்கு ஒத்திவைப்பு! கால அவகாசம் கேட்டதன் பின்னணி!

கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் செல்போன் ஆதாரங்களை திரட்ட காலஅவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சயான், வளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் என்பவர் விபத்தில் உயிரிழந்தார்.   இவ்வழக்கை கோவை மாவட்ட […]

வைகோவின் கார் ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணம்! என்ன நடந்தது?

ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோவின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் சின்னத்துரை. இவர் நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நேற்று (அக்.12) நெல்லை அருகே உள்ள இட்டேரி பகுதியில் உள்ள தோட்டத்து  பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் சின்னத்துரை தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது நீச்சல் குளத்திற்கு அருகே சின்னதுரை திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சின்னத்துரையை மீட்டு நெல்லையில் உள்ள ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் […]

5 மாநில சட்டமன்ற தேர்தல்! இன்று வேட்பு மனுதாக்கல் தொடக்கம்!

வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கியது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 20ம் தேதி கடைசி நாள் என்று ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் […]

வடகாசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் வெளியேறுங்கள்! இஸ்ரேல் எச்சரிக்கை!

வடகாசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.   இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி இன்று 7வதுநாளாக நடைபெற்று வருகிறது. மேலும் பல பிணைக்கைதிகளை பிடித்து வைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர் தாக்குதலை நடத்தி […]

நாகப்பட்டினம்- இலங்கையின் காங்கேசன்துறை கடல் சேவை! நாளை தொடக்கம்!

நாகப்பட்டினம்- இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் நாகப்பட்டினம்- இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை நாளை (அக்.14) தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி பயணிகள் முனையத்தில் குடியுரிமை, சுங்கத்துறை ஆகிய பிரிவுகளின் சார்பில் சோதனை செய்யும் கருவி, அடிப்படை தேவைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. முதல் நாள் சேவையை¬ முன்னிட்டு நாளை ஒரு நாள் […]

ரூ.173 கோடி சொத்துக்கள் முடக்கம்! 2வது நாளாக லாட்டரி மார்ட்டின் வீட்டில் சோதனை!

லாட்டரி மார்ட்டின் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வருமானவரித்துறையினர் ரூ.173 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈடுடியதாகவும், சட்ட விரோதமாகவும் பணப்பரிமாற்றம் செய்ததாக கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் தொடர்ச்சியாக காந்திபுரத்தில் உள்ள மார்ட்டின் வீட்டிலும் அவருக்கு தொடர்புடைய 4 இடங்களிலும் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று (அக்.13) […]