மலைப்பாதைகளில் வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாடுகள்! உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

சுற்றுலாதலங்களில் பொது மக்கள் தங்கள் பிள்ளைகளின் காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி ஆண்டுத்தேர்வு விடுமுறைகளில் படையெடுப்பது வழக்கம். ஆனால் தற்போது அந்த நடைமுறை மாறி வார இறுதிநாட்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் அனைவரும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பதால், அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை வந்தது. […]
சோனியா காந்தியை புத்தகம் கொடுத்த வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் […]
‘கல்கி ‘கல்கி 2898 ஏடி’ போஸ்டர் வெளியீடு! கலக்கும் கமல்ஹாசன்’

‘உலகநாயகன்’ கமல்ஹாசன் புதிதாக நடிக்க உள்ள அடுத்த படத்தின் டிரெண்டிங் போஸ்டர் வெளியானதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்2’ திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன், பாகுபடி நடிகர் பிரபாஸ் இணைந்து நடிப்பதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திரைப்படத்திற்கு ‘கல்கி 2898 ஏடி’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இதில் கமல்ஹாசன் மிரட்டல் வில்லனாக நடிக்க இருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் […]
லியோ திரைப்படத்திற்கு ஒரே ஒரு சிறப்பு காட்சிக்கு அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் விஜயின் லியோ திரைப்பட சிறப்பு காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்துறை செயலாளர் திடீரென்று கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வருகிற உலகளவில் திரையிடப்பட உள்ளது. அதன்படி சமீபத்தில் நியூ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி நியூ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென்று […]
ஹிருத்திக் ரோஷன் மெட்ரோ ரெயிலில் திடீர் பயணம்! பயணிகள் உற்சாகம்!

போக்குவரத்து நெரிசல் காரணமாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் மெட்ரோ ரெயிலில் பயணிகளுடன் சாதாரணமாக பயணம் செய்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் இன்று மும்பை மெட்ரோ ரெயிலில் பயணிகளுடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டார். படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்த அவர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் திடீரென்று மெட்ரோவில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அதன்படி மும்பை டிராபிக் […]
2028 ஒலிம்பிக் தொடரில் இணைந்த கிரிக்கெட்! ரசிகர்கள் உற்சாகம்!

2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்தான். இப்போட்டித் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாகவே இருந்து வந்தது. ஆனால் 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடர் ஒன்றில் மட்டுமே கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட123 ஆண்டுகள் கழித்து தற்போது கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. […]
Hot Clicks சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் தற்போது இன்று மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தாவின் யசோதா, சாகுந்தலம் திரைப்படங்கள் சரியாக போகாததால் சமந்தா மிகவும் வேதனையடைந்தார். இருப்பினும் தான் வீழ்ந்துவிட மாட்டேன் என்ற தோரணையில் பல்வேறு போட்டோசூட்களை நடத்தி ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!
6,200 அடி உயர ஜாகேஷ்வர் கோவில்! பிரதமர் மோடி சாமி தரிசனம்! exclusive photos

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பித்தோராகர், உத்தரகாண்ட் பார்வதி குளத்தில் பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அங்குள்ள மக்களை சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடி கைகுலுக்கி, பெரியர்வகளிடம் ஆசிர்வாதம் பெற்றார். பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் பகுதிக்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள பார்வதி குளத்தில் சிவபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஜாகேஷ்வர் தாமில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார். 6,200 அடி உயரத்தில் […]
ஓவியா Army-க்கு குட்நியூஸ்! போட்டோஸ் வைரல்!

நடிகை ஓவியா மிகவும் வெளிப்படையான பெண் என்ற அடையாளத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பல்வேறு திரைப்படங்களில் நடித்த போதிலும் நடிகை ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னரே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து நடிகை ஓவியா ஆர்மி என்று ரசிகர்கள் ஆரம்பித்து அடிக்கடி பல்வேறு ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நடிகை ஓவியா காஞ்சனா&3 திரைப்படத்தில் அழகு பொம்மை போல் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டோசூட்களை நடத்தில் இணையத்தில் பதிவிட்டு […]
Smiling Beauty சோனியா அகர்வால்!

நடிகை சோனியா அகர்வால் என்றாலே ‘7ஜி ரெயின்போ காலனி’ அனிதா கதாபாத்திரம் தான் நினைவுக்கும் வரும். அல்லது திருட்டுப்பயலே திரைப்படத்தில் வந்த அழகான பொம்மை போன்ற தோற்றம்தான் நினைவுக்கு வரும். நடிப்பு, திருமணம், விவாகரத்து என பல்வேறு கட்டங்களை கடந்தும் சோனியா அகர்வால் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன்7ல் சோனியா அகர்வால் இடம்பெறுவார் என்று சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியான போது ரசிகர்கள் ஆர்வமுடன்தான் காத்திருந்தனர். […]

