News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை கிடையாது! கனிமொழி எம்.பி. தகவல்!

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என்று கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அப்போது புத்தகம் ஒன்றை சோனியா காந்தியின் கைகளில் கொடுத்த முதலமைச்சர் சிறந்த வரவேற்பை அளித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் உரிமை […]

இந்தியா- பாகிஸ்தான் போட்டி! போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த மைதானம்!

இந்தியா- பாகிஸ்தான் போட்டி! அகமதாபாத் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!   உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் 12வது லீக் போட்டி நடைபெற உள்ளது.   உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு வந்துவிடும். அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் இந்தியா& பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 2 அணிகளும் உலகக்கோப்பை […]

அக்.18ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்! அண்ணாமலை அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளார்.   பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.   உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் […]

கொலை வழக்கு! தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. நிர்வாகி கைது!

  திண்டுக்கல் மாவட்டத்தில் கார் ஓட்டுநரை அடித்து கொலை செய்த வழக்கில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரை சென்னையில் வைத்து  போலீசார் கைது செய்துள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜனிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அந்த பணியுடன் சேர்த்து நடராஜன் நடத்தி வரும் நெய் கம்பெனியில் பணம் வசூல் செய்யும் வேலையையும் சேர்த்து பார்த்து […]

இதுவரை 447 குழந்தைகள் பலி! ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

காசாவில் இதுவரை 447 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.   இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் ஒரு வாரத்தை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. 3 ஆயிரத்துக்கும் மேல் கொல்லப்பட்டுள்ள நிலையில் காசாவில் கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. காசாவில் தாக்குதல் நடத்தினால் பிணைக் கைதிகளை […]

இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்கள் மீட்பு! 2வது விமானத்தில் பயணம்!

இஸ்ரேலில் இருந்து 2வது விமானம் மூலம் 235 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதம் ஒரு வாரத்தை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. 3 ஆயிரத்துக்கும் மேல் கொல்லப்பட்டுள்ள நிலையில் காசாவில் கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு […]

மெத்தைக்கு அடியில் ரூ.42 கோடி பணம்! வருமானவரித்துறையினர் அதிர்ச்சி!

    காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர வீட்டு படுக்கை அறை மெத்தையின் கீழ் ரூ.42 கோடியை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில  நாட்களாகவே பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களையும், கணக்கில் வராத ரொக்கத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.   அந்த வகையில் பெங்களூரில் உள்ள காங்கிரஸ் ன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டிற்கு நள்ளிரவு […]

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! முக்கிய பின்னணி!

  சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.800 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அக்டோபர் மாத முதல வாரத்தில் குறைந்து காணப்பட்ட நிலையில் சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் இன்று 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதன் தாக்கம் […]

வி.ஏ.ஓ. மீது லாரி ஏற்றி கொலை முயற்சி! டி.டி.வி. தினகரன் கண்டனம்!

வி.ஏ.ஓ. மீது லாரி ஏற்றி கொலை முயற்சி! டி.டி.வி. தினகரன் கண்டனம்! வி.ஏ.ஓ. மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்த சம்பவம் குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ மீது லாரியை ஏற்றி கொலை செய்ய […]

டி.பி.ஐ. வளாகத்திற்குள் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

சென்னை டி.பி.ஐ. வளாகத்திற்குள் இனி எந்த போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் கடந்த வாரத்தில் டி.பி.ஐ. வளாகத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று பல திருமண மண்டபங்களில் கொண்டு சேர்த்தனர். அதைத்தொடர்ந்து தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர். […]