News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ம.பி., சத்தீஸ்கர், தெலுங்கானா: முதல்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அரசியல் களம் சூடுபிடித்து தேர்தல் யுக்திகளை கையாண்டு வருகின்றனர். மேலும் தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தயார் செய்து படிப்படியாக வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் அதன்படி, மத்திய பிரதேசத்தில் 144, […]

ஒன்றுபட்டு செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்தலாம்! மு.க.ஸ்டாலின் உறுதி!

ஒற்றுமையாக செயல்பட்டால் பா.ஜ.க. வீழ்த்திவிடலாம் என்றும் 2024ம் ஆண்டுக்குமேல் பா.ஜ.க.இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.   தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   இம்மாநாட்டில் மகளிர் புடை சூழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.   அப்போது அவர் […]

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்

  ஒரு நாள் உலகக்கோப்பை 12வது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் ஆரம்பமானது.   டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை முகமது சிராஜ் தட்டித்தூக்கி வெற்றிக்கான முதல் படியை தொடங்கி வைத்தார்.   தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக் இருவரும் ஜோடி போட்டு ஆடத்தொடங்கிய« […]

கிழக்கு தி.மு.க. சார்பில் மருத்துவ முகாம்! தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை முகாமில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.   தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை மட்டுமல்லாது அனைத்து துறையிலும் கவனம் செலுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வருகிறார்.   அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம், விளையாட்டு போட்டி என தி.மு.க. சார்பில் பல நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரகிறது.   […]

நடிகை காயத்ரிரமணா! Exclusive clicks

நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரமணா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். திரைப்படம், வெப்சீரிஸ், நடனப்பயிற்சி என காயத்ரி ரமணா திரையுலகில் மிகவும் பிசியான நபராக இருந்து வருகிறார்.   தெலுங்கு திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகையான காயத்ரி ரமணா, சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! இம்மாதத்துக்கான பணம் இன்று கிடைத்துவிடும்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக இந்த மாதம் பணி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது மகளிர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க […]

அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? சோனியா காந்தி ஆலோசனை!

தமிழகத்தின் அடுத்த காங்கிரஸ் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வரும் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைந்தநிலையில் புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் […]

‘லியோ’ முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணாதீங்க! லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்!

லியோ திரைப்படத்தின் முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இத்திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். வருகிற 19ம் தேதி ரிலீசாகப் போகும் திரைப்படம்தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், அர்ஜுன், திரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள […]

துணை நிலை ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும்! நாராயணசாமி வலியுறுத்தல்!

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.   கடந்த 10ம் தேதி புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த சந்திர பிரியங்கா தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். அத்துடன் தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் பல பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.   ராஜினாமா கடிதத்தில், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக […]