News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மகளிர் உரிமைத் தொகை! கடைசி மேல்முறையீடு எப்போது தெரியுமா?

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்வதற்கான கடைசி தேதி குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பணம் பெறுவதற்கு 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த 2 மாதங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் சிலர் […]

சென்னையில் 20 இடங்களில் ஐ.டி.சோதனை! பரபரப்பு தகவல்கள்!

சென்னையில் இன்று அதிகாலை முதல் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   வரி ஏய்ப்பு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   அந்த வகையில் பிரபல மருந்து வணிக நிறுவனமான கவரிலால் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய மற்றும் சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் […]

மருத்துவமனை மீது தாக்குதல்! ஏவுகணை வீசியது காஸாவா இஸ்ரேல் ராணுவமா?

காஸாவில் இயங்கி வரும் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி இன்று வரை நடந்து வருகிறது. காஸாவில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்த நிலையில் 10 லட்சத்திற்கும் அதிமாக மக்கள் காசாவை விட்டு […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 வாரங்களில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது என்பதால், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகள் எப்போது வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் தீபாவளி போனஸ் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஒப்புதல் அறிவிப்பின்படி ‘சி’ பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் […]

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்! எடப்பாடி பழனிசாமி பயணம்!

அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்.18) சங்கரன் கோவிலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.   அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழா நேற்று (அக்.17) தமிழகமெங்கும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியேற்றி, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தொண்டர்களுக்கு […]

சார் பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்!

புதன்கிழமை (அக்.18) சுபதினமான இன்று பொது மக்கள் வசதிக்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் சுபதினமான புதன்கிழமைகளில் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அதனை கருத்தில் கொண்டு அன்றைய தினங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவில் ஆவணப் பதிவு செய்யும் வகையில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.   அதன்படி இன்று (அக்.18) ஐப்பசி மாதத்தின் முதல் தினம் (புதன்கிழமை) என்பதாலும், சுபதினம் என்பதாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து […]

அ.தி.மு.க.வின் 52 ஆண்டு கால சாதனைப்பயணம்! முழு விவரம் உள்ளே!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தனது 52வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்த மாவட்டந்தோறும் அ.தி.மு.க.வினர் தங்கள் மகிழ்ச்சியுடன் சேர்த்து இனிப்புகளையும் பகிர்ந்து வருகின்றனர். சற்று பின்னோக்கி பார்க்கும் போது அ.தி.மு.க. இந்த 52 ஆண்டு காலத்தை எப்படியெல்லாம் கடந்துவந்தது? அதன் ஏற்ற இறக்கங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு. தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர் தான் நடிகரும், […]

தன்பாலின திருமணம்! உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

தன் பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் பரபரப்பான பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது.   இந்தியாவில் தன் பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இன்றைய தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று அனைவருமே ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர.   இந்நிலையில் இந்தியாவில் தன் பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா என்பது இனி மத்திய அரசு முடிவு எடுக்க […]

காஸாவில் பலியான ஊழியர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு! ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

காஸாவில் கொல்லப்பட்ட மீட்பு மற்றும் பாதுகாப்பு உறுப்பினர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.   இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான தாக்குதல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.  இதில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், பணியில் இருந்த மனிதாபிமான ஊழியர்களும் கொல்லப்பட்டனர். எனவே பலி எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.   காஸாவில் […]

பிரபல ரவுடி படுகொலை! மதுரையில் பதற்றம்!

மதுரையில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா ஆஸ்டியன்பட்ட அருகில் உள்ளது கருவேலம்பட்டி ரெயில்வேகேட். இப்பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.   அவரது உடல் மதுரை அரசு  மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது நெல்லை மாவட்டம் […]