செங்கோட்டையனுக்கு நோட்டீஸ்… கட்சியிலிருந்து கல்தா

எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் விதித்த பத்து நாள் கெடு கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் செங்கோட்டையனை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் எழுப்பியிருக்கும் விவகாரம் குறித்து பேசும் அதிமுகவினர், ‘’பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தேவையற்றது. எந்தக் காலத்திலும் பழனிச்சாமி அவர்கள் டிடிவி ஓபிஎஸ் சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டார். எல்லோரும் தேவர் சமுதாய வாக்கு வங்கியில் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் டிடிவி, […]
நயினார் நாகேந்திரன் மகனுக்குப் பதவி… பாஜகவின் வாரிசு பஞ்சாயத்து

தமிழக பாஜகவில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய பதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் ஒப்புதலுடன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையிலான நிர்வாக குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜிக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. நயினார் நாகேந்திரன் மகனுக்கு தமிழக பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் […]
செங்கோட்டையன் கெடுவுக்கு இபிஎஸ் ஆலோசனை. அடுத்த அதிரடி வேலுமணி..?

“அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு ஒரு காலக்கெடு வைத்துள்ளோம். அதற்குள் அது நடக்காவிட்டால் எங்களது அடுத்த கட்ட முடிவை எல்லோரும் இணைந்து அறிவிப்போம்” என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்று வெளிப்படையாக அறிவித்திருப்பது அதிமுகவில் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. அதோடு செங்கோட்டையன் பேசுகையில், ‘’நானும், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், அன்பழகன் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒற்றுமையை வலியுறுத்தியது உண்மை. ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்று செய்தியாளர்கள் […]
பன்னீர் வழியில் டிடிவி தினகரன் அவுட்… அண்ணாமலை சீக்ரெட் பிளான்

டெல்லியில் அமித்ஷா கூட்டிய அரசியல் கூட்டத்தில் அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டதன் அடிப்படையிலே டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்ததாகத் தெரிகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பதற்காக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி நடத்திவருகிறார். சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவுடன் இணைவதற்கு போராட்டம் நடத்திவருகிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இடம் பெற்றது. அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், நாடாளுமன்ற […]
மோடியின் அம்மா சென்டிமென்ட்… தேர்தல் ஸ்டன்ட்

பீகாரில் மோடிக்கு எதிராக ராகுல் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறார். இதை தடுப்பதற்கு திடீரென அம்மா செண்டிமெண்ட்டைக் கையில் எடுத்துள்ளார் மோடி. எனது தாயை அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஆவேசம் காட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. . இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் நடத்திய ஒரு பேரணியில் மறைந்த எனது தாயார் அவமதிக்கப்பட்டுள்ளார். […]
மீண்டும் செங்கோட்டையன் புகைச்சல்… 5ம் தேதி அதிமுகவில் பூகம்பம்..?

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் எழுச்சிப்பயணத்தில் மூத்த தலைவர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவரது தொகுதியை இபிஎஸ் புறக்கணிப்பதாக செய்திகள் வெளியாகின. நீண்ட காலமாகவே முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம், 5ம் தேதி கோபியில் உள்ள கட்சி […]
தலைவர் பதவிக்கு சசிகாந்த் நாடகம்..? சமாளிப்பாரா செல்வப்பெருந்தகை..?

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசலுக்கு எப்போதும் பஞ்சமே இருந்ததில்லை. அதற்கு முத்தாய்ப்பாக ஒரு உண்ணாவிரத நாடகம் அரங்கேறிவருகிறது. டெல்லி காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழக காங்கிரஸ் தலைமை ஆகிய யாரிடமும் ஆலோசனை, ஒப்புதல் பெறாமல் திடீரென உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில். அதாவது, சமக்ர சிக்க்ஷா அபியான் (SSA) திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க கோரி மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சாகும் […]
பிரேமலதா மீண்டும் பல்டி. இபிஎஸ் மீது பாய்ச்சல். காரணம் இவர்தானா..?

ஜிகே மூப்பனார் நிகழ்வில் நிர்மா சீதாராமன் வேண்டுகோளின் பேரில் எல்.கே.சுதிஷ் கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தேமுதிக சார்பில் பங்கேற்ற சுதிஷை மரியாதை நிமித்தம் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் என்றும் பணம் கொடுத்து கூட்டத்திற்கு ஆள் பிடிக்கிறார் என்றும் பிரேமலதா எகிறியிருக்கிறார். சென்னையில் தேமுதிக தென்சென்னை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, ‘’அதிமுக-வுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தபோது 5 மக்களவை […]
தமிழ்நாட்டுக்கு பொறுப்பு டிஜிபி அறிவிப்பு. வெங்கட்ராமன் முழுமையான தகவல்கள்

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால், தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று ஓய்வு பெறுவதையொட்டி, தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காவல்துறை வீட்டு வசதி நிறுவன இயக்குநர் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஐபிஎஸ் ஓய்வு பெற்றதால் புதிய இயக்குநராக டிஜிபி வினித் வான்கடே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று டிஜிபியாக பதவியேற்கும் வெங்கட்ராமன் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது காவல் நிர்வாகப் […]
அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்… நயினாருக்கு நல்ல யோகமடா

தமிழகம் வருகை தந்திருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை எடப்பாடி பழனிசாமி, எல்.கே.சுதிஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் நேரடியாகவே அண்ணாமலைக்கு ரெய்டு விடுத்திருக்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு நட்சத்திர ஓட்டலில் பாஜ நிர்வாகிகளுக்கு விருந்தளித்தார். இதையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் அண்ணாமலை […]

