தெலுங்கானாவில் பா.ஜ.க.வால் எப்படி சமூக நீதி வழங்க முடியும்? -ராகுல்காந்தி

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பீரங்கியாக மாறிய ராகுல்காந்தியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று அவரின் பிரசாரத்தை ஆர்வமுடன் கேட்டனர். சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன. அந்த வகையில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி மற்றும் […]
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்! பக்தர்கள் அதிர்ச்சி!

செங்கல்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று (அக். 19) காலமானார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக செயல்பட்டு வந்து பக்தர்கள் மத்தியில் பிரபலமானவர் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82. அதோடு மட்டுமல்லாமல் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு இந்திய […]
உச்சநீதிமன்றத்திற்கு வெளியே நடந்த விபரீதம்! அதிர்ச்சி தகவல்!

உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தன்பாலின தம்பதி மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்தது. அயல்நாடுகளில் தன் பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அந்த சுவடு மறையாத சூழ்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் […]
காஸாவுக்கு உதவலாம்! எகிப்துக்கு அனுமதி வழங்கிய இஸ்ரேல்!

காஸாவில் மனிதநேய உதவி வழங்கலாம் என்று எகிப்து நாட்டுக்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது சற்று ஆறுதலை அளித்துள்ளது. காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட தில் 500 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இஸ்ரேல்&ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தற்போது 13வது நாளாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இருதரப்பிலும் உயிரிழந்து […]
டி.கே.சிவக்குமாருக்கு வந்த சிக்கல்! அரசியல் களத்தில் பரபரப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமரி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவக்குமார் மீது சொத்துக்குவிப்பு வழக்கை சி.பிஐ. பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த […]
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீன் மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி தனது உடல்நலத்தை காரணம் காட்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு சென்னை அமர்வு […]
இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக சொல்வாரா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சங்கரன்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்பு உரையாற்றினார். அவர் பேசும் போது, ‘‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பில்லை. தி.மு.க. நிச்சயமாக தோல்வியடையும். அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சி கால உழைப்பால்தான் தமிழகம் இந்தியாவிலேயே […]
படிப்படியாக குறைந்து வரும் பால் கொள்முதல்! ஆவின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு!

ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலசங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ஆவின் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதற்கான காரணம் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த 13.10.2023 அன்று ஆவின் நிர்வாக இயக்குனர் வினித் ஐஏஎஸ் கூறும்போது, ‘‘கடந்த செப்டம்பர் மாதத்தோடு அக்டோபர் […]
கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்! ‘லியோ’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு!

இன்று வெளியான ‘லியோ’ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் இன்று (அக்.19) வெளியான திரைப்படம் ‘லியோ’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படம் பல சிக்கல்களை கடந்து வெளி வந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி குறித்த சென்னை நீதிமன்றத்தின் வழக்கு மற்றும் தமிழக அரசின் அறிவிப்பு என […]
2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை!

சென்னையில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று அதிகாலை (அக்.18) சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதன்படி இந்த சோதனை ஆயிரம்விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. வரி ஏய்ப்பு தொடர்பாக பெறப்பட்ட ரகசிய புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இன்று […]

