அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை! எங்கெல்லாம் தெரியுமா?

புயல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் ஆகியோர் கடும் அவதிக்கு ஆளானார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் எப்படியோ தப்பித்துவிட்டார்கள் என்றுகிறார்கள் பெற்றோர்கள். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதனை […]
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. திடீர் மரணம்! தொண்டர்கள் அதிர்ச்சி!

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.வேணு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.வேணு தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். அதோடு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கே.வேணு திடீர் உடல்நலக்குறைவு குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.வேணு மறைவுக்கு அப்பகுதி […]
சாலையோரம் உணவருந்திய அண்ணாமலை! சிலிர்க்கும் தொண்டர்கள்!

திருப்பூர் மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் போது நள்ளிரவு நேரத்தில் சாலையோரம் காரில் அமர்ந்தபடி அண்ணாமலை உணவு அருந்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இது பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட பகுதிகளான பல்லடம், அவுநாசி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற யாத்திரையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் […]
குழந்தை பெற்ற நடிகை ஸ்ரேயாவா இது? Hot Clicks

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் கூட நடிகை ஸ்ரேயா சரண் மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷூட்டை நடத்தி ரசிகர்களை திணறடித்துள்ளார். நடிகை ஸ்ரேயா சரணை தமிழ், தெலுங்கு என எந்த ரசிகர்களும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ரஜினி, விஜய், விஷால் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார். அதைத்தொடர்ந்து திருமணம், குழந்தை என பிசியான அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இயக்குனர் மாதேஷ் […]
நடிகை ஜெயபிரதாவுக்கு 6 மாத சிறை! பரபரப்பு தகவல்கள்!

நடிகையும் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த ஜெயப்பிரதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழில் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, கடைசியாக தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. உறுப்பினராக […]
உலகக்கோப்பை கிரிக்கெட்! தொடர்ந்து 2வது இடத்தில் இந்திய அணி!

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டித் தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. 50 ஓவர்கள் கொண்ட 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டித் தொடரில் இந்திய அணி தனது 4வது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 261 ரன்களை குவித்தது. அதன்படி 7 […]
ராஜஸ்தானில் இன்று பிரியங்கா காந்தி பரப்புரை! தொண்டர்கள் உற்சாகம்!

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையாற்ற உள்ளார். சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன. அந்த வகையில் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற […]
ஆயுதபூஜை தொடர் விடுமுறை: தமிழகத்தில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பண்டிகைக்கு முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது. சொந்த ஊர்களில் இருந்து படிப்புக்காகவும், வேலைக்காகவும் பல்வேறு ஊர்களில் தங்கியுள்ளவர்கள், விழா மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படிப்பட்ட […]
பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த பங்காரு அடிகளாரில் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்திபீட நிறுவனர் பங்காரு அடிகளார் (வயது 82) நேற்று மாலை 5 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடல் மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் மறைவு செய்தியை கேட்ட சக்திபீட ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘‘அம்மா… அம்மா’’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதோடு அனைத்து மாநிலங்களில் […]
ஒரே நேரத்தில் ஒலித்த லட்சக்கணக்கான செல்போன்கள்! மக்கள் அதிர்ச்சி!

ஒரே நேரத்தில் ஒலித்த லட்சக்கணக்கான செல்போன்கள்! மக்கள் அதிர்ச்சி! லட்சக்கணக்கானவர்களின் செல்போன்கள் ஒரே நேரத்தில் ஒலித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட செல்போன் சேவைகளை பயன்படுத்துவோர்களின் செல்போன்கள் இன்று காலை 11.27 மணியளவில் எம்ர்ஜென்சி அலர்ட் என்ற பெயரில் ஒலிக்க ஆரம்பித்தது. இந்த எச்சரிக்கை ஒலி தன்னுடைய செல்போனில் மட்டும்தான் வருகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அடுத்தடுத்த செய்தி என்னவென்றால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களின் செல்போனில் ஒலித்தது. இது குறித்து […]

