பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் மேலும் 2 வழக்குகளில் கைது!

கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. இதற்கு பா.ஜ.க.வினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. வாகனத்தை […]
மருது பாண்டியர்களின் நினைவுநாள்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மருது பாண்டியர்களின் நினைவுநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருதுபாண்டியர்களின் 222வது நினைவுநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சிவகங்கை மாவட்டம் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் இது குறித்து கூறும்போது, ‘‘சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மருது பாண்டியர்களின் நினைவுநாள் விழா மற்றும் […]
பெட்ரோல் குண்டுவீச்சு: ஆளுநரின் துணை செயலாளர் காவல்துறைக்கு புகார் கடிதம்!

பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு ஆளுநரின் துணைச் செயலாளர் காவல்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத், நேற்று பிற்பகல் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சம்பவம் நடந்த […]
சந்திரகிரகணம்! திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்படும்!

சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 29ம் தேதி சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியிருப்பதாவது:- வருகிற 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.22 மணிக்கு சந்திரகிரகணம் நிறைவடைய உள்ளது. கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) இரவு 7.05 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் […]
என் தந்தை யார் கால்களிலும் விழுந்து முதலமைச்சர் ஆகவில்லை! உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

ஸ்டாலின் படிப்படியாக முன்னேறியவர், யாருடைய கால்களில் விழுந்து அவர் முதலமைச்சர் ஆகவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர்கள் அணி செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘தலைமை கூறுவதை செயல்படுத்தி காட்டுபவர்களே உண்மையான செயல்வீரர்கள்; மருது சகோதரர்கள் போல விருதுநகர் மாவட்டத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர் என்று அமைச்சர்களை முன்னிலைப்படுத்தி […]
நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருகிற நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிக்கையில் கூறியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யரபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழகம் முழுவதும் நாளை (அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வருகிற டிசம்பர் 9ம் தேதி […]
இந்த 3 நாட்களில் பேருந்துகள் இயங்குமா? முக்கிய தகவல்கள்!

தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 3 நாட்கள் காத்திருப்பு போராட்ட அறிவிப்பால் போக்குவரத்து சேவை முடங்கும் அபாயத்தால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த கொரோனா காலமான 2020ம் ஆண்டு 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் சி.ஐ.டி.யு.சி. சார்பில், […]
ரகசிய காதலனை அம்பலப்படுத்திய பிரபல நடிகை! வைரல் வீடியோ!

நடிகை அமலாபால் தனது காதலன் யார் என்பது குறித்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யுடன் இணைந்து செய்து கொண்ட திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதற்கிடையில் இயக்குனர் விஜய் 2வது திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டிலாகிவிட்டார். இருப்பினும் தமிழ் இந்தி என பல்வேறு மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அமலாபால், சமூக வலைதளங்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அமலாபால் தனது […]
பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் சம்பந்தம் இல்லை! – அமைச்சர் ரகுபதி!

பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார். நேற்று (அக்.25) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் கருக்கா வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் போலீசார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, […]
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு! பா.ம.க. கருத்தரங்கம்!

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அதன் அவசியம் குறித்தும் கட்சிகள், அமைப்புகள் என பலரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பென்னாகரம் […]

