News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அதற்கு தி.மு.க.தான் காரணம்! ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுத்து நிறுத்தியது தி.மு.க.தான் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் பா.ம.க. சார்பில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ‘‘சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கிடைத்த 3 வாய்ப்பையும் தி.மு.க. தான் கெடுத்துவிட்டது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தி.மு.க.வுக்கு மனம் […]

ஆசிய பாரா விளையாட்டு போட்டி: 100 பதக்கங்களை குவித்த இந்தியா!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரரான திலீப் மகாதேவ் கவித் தங்கம் வென்றார். இவர் இலக்கை 49.48 நொடிகளில் அடைந்து சாதனை படைத்தார். திலீப் மகாதேவ் கவித் பெற்றது இந்தியாவின் […]

இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று!

நடப்பாண்டான 2023ம் ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது. நிலவுக்கும், சூரியனுக்கும் நடுவே பூமி வரும்போது ஏற்படும் நிகழ்வையே நாம் சந்திரகிரகணம் என்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இன்று (அக்.28) நள்ளிரவு 1.03 நிமிடத்தில் துவங்கும் சந்திரகிரகணம் 2 மணி 23 நிமிடத்தில் முடிவடைகிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு இந்தியாவில் பார்க்க முடியும் என்பதால் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் என்று ஏற்கனவே […]

இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகம் மீது நேற்று (அக்.27) இரவு 9 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் பாட்டில், கற்கள் உள்ளிட்ட பொருட்களைவீசி தாக்குதல் நடத்தினர். அந்த வேளையில் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லை என்பதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தாக்குதல் சம்பவம் குறித்து மாம்பலம் போலீஸ் […]

சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் பலி!

சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் 80 வயதான சுந்தரம். இவர் செவிதிறனற்ற, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கடந்த 18ம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த போது, அங்கு சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் முதியவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி […]

நாங்குநேரி சிறுவன், சிறுமி குடும்பத்தாருக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் உதயநிதி!

நாங்குநேரியில் தாக்கப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமியை அவர்களது குடும்பத்தாரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்தார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதி பாகுபாட்டால் சிறுவன் மற்றும் அவனது தங்கை வீடு புகுந்து சக மாணவர்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிர்வலைகள் ஏற்பட்டன. தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறுவன் மற்றும் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி […]

மகளிர் சுய உதவிக்குழுவினரை ஊக்கப்படுத்திய அமைச்சர் உதயநிதி!

தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலியில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சந்தித்து உரையாடினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களையும் அமைச்சர் உதயநிதி பார்வையிட்டு அவர்களை ஊக்கப்படுத்தினார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகளிரை தொழில் முனைவோர் ஆக்கிடும் வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் […]

தி.மு.க. வார்டு உறுப்பினர் இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. வார்டு மன்ற உறுப்பினர் இல்லத்திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக 87-வது வார்டு மாமன்ற உறுப்பினரான டாக்டர் ஏ.பி. பூர்ணிமா& கே.ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு அமைச்சர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது. இத்திருமண விழாவில்  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியரசுத் தலைவருடன் லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

சென்னை வருகை தந்திருந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை திடீரென்று சந்தித்து பேசியுள்ளனர். சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று (அக்.27) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்னைக்கு வந்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை 6.50 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், ஆளுநர் மாளிகைக்கு […]

C.S.K. ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன எம்.எஸ்.தோனி!

2024ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் […]