News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை! தெலுங்கானாவில் பரபரப்பு!

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியினர் பின் வாங்கி இருப்பது கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவுடன் இணைவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.   இந்த சமயத்தில் தான் […]

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

தமிழக மீனவர்கள் 64 பேரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் எல்லையை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதனால் கடந்த 2 வாரங்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்கும் படி மத்திய, மாநில அரசை […]

படுத்த படுக்கையாக இருந்த இயக்குனரின் மனைவி! மு.க.ஸ்டாலின் உதவிக்கரம்!

இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு மருத்துவக்குழுவுடன் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கடந்த 1990ம் ஆண்டு ‘புது வசந்தம்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் பிரபலமானவர்தான் இயக்குனர் விக்ரமன. அதைத்தொடர்ந்து பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னை நினைத்து, வானத்தை போல உள்ளிட்ட பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்திருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இவர் நினைத்தது யாரோ என்ற திரைப்படத்திற்கு பிறகு […]

இஸ்ரேல்- ஹமாஸ் போர்! 9,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான 24நாள் போரில் இதுவரை 9,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ம் தேதி (அக்டோபர்) இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் வான்வழி, தரைவழி என தாக்குதல்களை மேற்கொண்டு காஸாவை தரைமட்டமாக்கிவிட்டது. இதில் மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என பாரபட்சமின்றி இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. உணவு, தண்ணீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய […]

முதலில் கைதி-2 அப்புறம்தான் ரோலக்ஸ்- லோகேஷ் கனகராஜ்

முதலில் கைதி-2, பிறகுதான் ரோலக்ஸ் திரைப்படத்தை எடுக்க உள்ளேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   வருகிற தீபாவளி பண்டிகையன்று நடிகர் கார்த்திக் நடிப்பில் தயாராகி உள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் விழா சென்னையில் நடைபெற்ற போது அதில் ஜப்பான் திரைப்படத்தின் டிரெய்லரும் வெளியானது.   இவ்விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூர்யா, தமன்னா, யுவன், இயக்குனர்கள் சிறுத்தை சிவா, எச்.வினோத் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து […]

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அரசியல் பிரபலங்களின் லிஸ்ட் இதோ!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அரசியல் பிரபலங்களின் லிஸ்ட் இதோ உங்களுக்காக.   பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள் மற்றும் 61வது குருபூஜை விழா இன்று கோகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.   அந்த வகையில் காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

கேரள ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்ற சர்வதேச மாநாட்டு மையத்தில் ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள் ஜெபக்கூட்டம் கடந்த 27ம் தேதி தொடங்கி நேற்று கடைசிநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. காலை 9.45 மணியளவில் தொடங்கிய இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக எர்ணாகுளம், ஆலுவா, அங்கமாலி, […]

ஆந்திரா ரெயில் விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் பலியான பயணிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்ட கண்டகப்பள்ளி ரெயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று (அக்.29) ராயகடா நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயில் கேபிள் பிரச்சினை காரணமாக இயக்கப்படாமல் நின்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே  ஊழியர்கள் பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த வழியாக […]

லியோ வெற்றி விழா அனுமதி! தரமான சம்பவம் ரெடி!

லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளதாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய்தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான முதல் நாள் முதல் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது. இசை வெளியீட்டு விழா ரத்து, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு என விஜய் ரசிகர்கள் […]

தொடர் மழை: ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   அதேபோல் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 20க்கும் […]