News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு! தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் என்னவென்றே தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அந்த வகையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளிட்ட 13 மசோதாக்கள் இன்றளவும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. மசோதாக்கள் குறித்த எந்த  நகர்வையும் ஆளுநர் மேற்கொள்ள […]

கடுமையாக உயர்ந்த வெங்காயத்தின் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், வெங்காய வரத்து குறைந்துள்ளதாலும் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளியின் விலை கடும் உச்சத்தைத் தொட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மெல்ல மெல்ல தக்காளியின் விற்பனை விலை இயல்புநிலைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு […]

நின்று கொண்டிருந்த 10 பேருந்துகளில் திடீர் தீ! எங்கே தெரியுமா?

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 பேருந்துகள் தீயில் கருகி சாம்பலான சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வீரபத்ர நகரில் தனியார் பேருந்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு இன்று திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அருகருகே நின்று கொண்டிருந்த அடுத்தடுத்த பேருந்துகளில் பற்றி எரிந்தது.  இதில் மொத்தம் 10 பேருந்துகள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகையுடன் காணப்பட்டதால் பொது மக்கள் […]

பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு அவமரியாதை! தொண்டர்கள் அதிர்ச்சி!

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக சென்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சிலர் அவமரியாதையாக நடந்து கொண்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்தராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித் தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் முத்துராமலிங்கத் தேவர் […]

தேர்தல் பிரசாரத்தில் எம்.பி.க்கு கத்திக்குத்து! தெலுங்கானாவில் பரபரப்பு!

தேர்தல் பிரசாரத்தின் போது எம்.பி.யை மர்ம நபர் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் தெலுங்கானா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் ஆட்சி செய்து வரும் நிலையில் 3வது முறையாக தானே முதலமைச்சராகிவிட வேண்டும் என்று ஆவேசமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பி.ஆர்.எஸ். கட்சியின் சார்பில் மேடாக் எம்.பி. பிரபாகர் ரெட்டி துப்பாக் […]

சென்னை கடற்கரை- தாம்பரம் மின்சார ரெயில்கள் ரத்து- தென்னக ரெயில்வே!

சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்மார்க்கமாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரெயில்கள் காலை […]

நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவரா? மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சமீப காலமாக அதிகரித்து வரும் இளம் வயதினரின் மாரடைப்புக்கு காரணம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுதான் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. இருப்பினும் பலர் நோய் தொற்றில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.     […]

டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலி! திருவண்ணாமலையில் சோகம்!

திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி புகழேந்தி, கீதா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற 10 வயது மகளும் இருந்தார். பிரியதர்ஷினியின் தாய் பிரசவத்தின் போது இறந்ததால் புகழேந்தி சிறுமியை தனியாக வளர்த்து வந்துள்ளார்.   இந்நிலையில் பிரியதர்ஷினி 5ம் […]

பிரபல இயக்குனருக்கு ‘ஆட்டிசம்’! அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!

பிரபல இயக்குனர் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாக இணையத்தில் பதிவிட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘நேரம்’ இத்திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ்  புத்திரன். அதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு ‘பிரேமம்’ திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, யார் இந்த இயக்குனர் என்று பிரபலமானார். இத்திரைப்படத்தில் நிவின்பாலி, சாய் பல்லவி நடித்தது ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது. அதில் […]

3 நாட்கள் போலீஸ் காவலில் கருக்கா வினோத்! நீதிமன்றம் உத்தரவு!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 25ம் தேதி சென்னையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசு பா.ஜ.க.வுக்கு எதிராகவும், ஆளுநருக்கு எதிராகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து கருக்கா […]