பிக்பாஸ் 7: எல்லை மீறும் நிக்சன்- ஐஸ்வர்யா வீடியோ!

பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளர்களான நிக்சன்- ஐஸ்வர்யாவின் எல்லை மீறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. பிக்பாஸ் சீசன் 7 தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த 5 பேரை எப்படி காலி செய்வது என்று போட்டியாளர்கள் போடும் ஸ்கெட்சை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் போட்டியாளர்கள் நிக்சன்- ஐஸ்வர்யாவின் நெருக்கமான காட்சி வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை […]
Scam Alert : மின்வாரியம் சொல்வது என்ன?

மின்கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்வாரியத்தை மையப்படுத்தி புதிதாக களைகட்டியுள்ள ஸ்கேம் பற்றி மின்வாரியம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘மின்கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் மின் கட்டண நிலைப்பாடு குறித்து சரிபார்த்த பின்னர், நீங்கள் அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிக்காதீர்கள். […]
2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வருகிற 2023ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஈட்டுவோம் என்ற இலக்கை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். சென்னை பல்லாவரத்தில் சர்வதேச கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவின் முதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘சர்வதேச கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவின் முதல் கட்டிடத்தை சென்னையில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி என்று கூறியதுடன் 2ம் கட்ட கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவை தொடங்க தமிழக அரசு […]
கன்னட நடிகை தேஜஸ்வினி ஷர்மா! Classic Clicks

கன்னட நடிகையான தேஜஸ்வினி ஷர்மாவின் கிளாசிக் கிளிக்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட நடிகையான தேஜஸ்வினி ஷர்மா, இயக்குனர் ஆர்யா எம்.மகேஷ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி வெளியான இங்கிலிஷ் மஞ்சா கன்னட திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு முன்னர் மார்ச் 10ம் தேதி இயக்குனர் மனோஜ் பி நடலுமனே இயக்கத்தில் வெளியான மேரி திரைப்படத்திலும் அசத்தலாக நடித்திருந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் 17ம் தேதி இயக்குனர் என்.விநாயகா இயக்கத்தில் […]
போரை நிறுத்துவது ஹமாசிடம் சரணடைவதற்கு சமம்! இஸ்ரேல் பிரதமர்!

போர் நிறுத்தம் என்பது ஹமாசிடம் சரணடைவதற்கு சமம் என்று கூறிய இஸ்ரேல் நாட்டு பிரதமர் திட்டவட்டமாக போர் நிறுத்தத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சர்வதேச நாடுகள் தலையிட்டும் இன்னும் போர் நின்றபாடில்லை. இருதரப்பிலும் உயிர்சேதம் அதிகரித்துள்ள நிலையில் பணயக் கைதிகளும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரையில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் சர்வதேச நாடுகள் மத்தியில் சோகத்தை […]
தமிழகத்தில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்!

தமிழகத்தில் ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் பாதுகாப்பு உறுதி செய்யுமாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த 29ம் தேதி மதக்கூட்டரங்கில் திடீரென்று டிபன் பாக்ஸ் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தமிழக மாநில உளவுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், உளவுத்துறை துணை […]
சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார ஜாமீன் வழங்கிய ஆந்திர நீதிமன்றம்!

சிறையில் இருந்த தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது ஆந்திர நீதிமன்றம். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்தபடியே விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தில், சிறையில் இருக்கும் […]
டி.என்.பி.எஃப்.சி. தலைமை அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் டி.என்.பி.எஃப்.சி. தலைமை அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னை நந்தனத்தில் டி.என்.பி.எஃப்.சி. (மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்) தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கினறன. குறைவான வருமானவரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும் இந்த வருமானவரி சோதனையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. […]
லியோ வெற்றி விழா! ஆன்லைனில் டிக்கெட் விற்பனை!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட வெற்றி விழாவுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் ஆன்லைனில் மிகவும் ஆர்வமாக வாங்கி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனத்துடன் ரூ.500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து லியோ திரைப்படத்திற்கு வெற்றி விழா நடத்த படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான அனுமதியை பெரியமேடு காவல்துறையிடம் கோரியிருந்தனர். வெற்றி விழாவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
பட்டாசுக் கடையில் வெடி விபத்து! திருவாரூரில் பதற்றம்!

திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக் கடைகளில் திடீரென்று வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள பட்டாசு விற்பனைக்கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென்று வெடித்தது. பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் […]

