சென்னையில் பரபரப்பு! சென்டர் மீடியனில் மோதி நின்ற பேருந்து!

மாநகர பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காத காரணத்தால் சென்டர் மீடியனில் மோதி நின்ற சம்பவம் சென்னை தங்கசாலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் மழைக் காலங்களில் பேருந்துகளின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிகிறது என்றும் பேருந்துக்குள் குடை பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வள்ளலார் நகரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த 48சி […]
இஸ்ரேல்- ஹமாஸ் போர்! இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள்!

உச்சத்தை எட்டியுள்ள இஸ்ரேல் -ஹமாஸ் போர் எதிரொலியாக காஸாவின் இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி ஆரம்பமான இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம், காஸாவை தரைமட்டமாக்கிவிட்டது. இதுவரையில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் உருகுலைந்து போயுள்ள காஸாவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு […]
சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்கள் 100% உயர்வு!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்கள் உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இத்திருத்தக் கட்டண உயர்வு வருகிற 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், கட்டிட அனுமதிக் கட்டண உயர்வு மற்றும் பழைய கட்டிங்களை இடிப்பதற்கான அனுமதி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்மானங்களும் மாநகராட்சி மன்றக் […]
இன்று முதல் மின்கட்டணம் குறைப்பு! யாருக்கெல்லாம் தெரியுமா?

10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இன்று முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வகிப்பவர்களின் மோட்டார், மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு இதற்கு முன்னர் ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் 15 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைந்து கடந்த மாதம் (அக்டோபர்) 18ம் தேதி புதிய உத்தரவை பிறப்பித்தார். முதலவரின் அறிவிப்பைத் தொடர்ந்து மின்சாரத்துறை அதற்கான […]
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்துள்ளது ஓட்டல் உரிமையாளர்களை கலக்கமடைய செய்துள்ளது. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ஏற்ற, இறக்கமாகவே […]
தீபாவளி பண்டிகை! அரசு பேருந்துகளில் 70 ஆயிரம் பேர் முன்பதிவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்லும் பயணிகள் இதுவரை 70 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்மாதம் (நவம்பர்) 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி வருகிற 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் சென்னையில் தினசரி இயங்கும் 2,100 பேருந்துகளுடன் […]
தமிழகத்தில் 86 காலி எம்.பி.பி.எஸ். இடங்கள்! கலந்தாய்வு எப்போது தெரியுமா?

தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற நவம்பர் மாதம் 7ம் தேத வரை நடைபெறும் என்று மருத்துவத்துறை அறிவித்துள்ளது. மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வருகிற நவம்பர் மாதம் 7 தேதி முதல் 15ம் தேதிவரை நடைபெறும் என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அகில இந்திய ஒதுக்கீடு16, நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு 50, எய்ம்ஸ் 3, சுயநிதிக்கு 17 என […]
டிரெண்டிங்கில் #Leoscam லோகேஷ் கனகராஜூக்கு சிக்கல்!

லியோ திரைப்படத்தின் பிளாஷ் பேக்கை கிண்டல் செய்யும் ரசிகர்கள் அதனை லியோஸ்கேம் என்ற ஹேஷ்டேக்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அனைத்து திரைப்படங்களும் எப்போதும் தனித்தன்மை வாய்ந்ததாக ரசிகர்களை கவர்ந்து வந்தது. அவரது கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் கற்பனைக்கும் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டு கவர்ந்து ரசிக்க வைத்தது. இதற்கிடையில் கடந்த 19ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் இந்த எண்ணங்களை பொய்யாக்கிவிட்டது என்று […]
மாலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்! வீடியோ வைரல்!

பெங்களூர் லுலு மாலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் அத்துமீறும் சில்மிஷக்காரர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் பதிவிட்ட வீடியோ தற்போது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ குறித்து அந்த பயனர் கூறும்போது, ‘‘கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள லுலு மாலில் இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் முதியவர் ஒருவர் இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டதை […]
விராட் கோலிக்கு சர்பிரைஸ்! பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டம்!

வருகிற நவம்பர் மாதம் 5ம் தேதியன்று விராட் கோலியின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இமாலய வெற்றி பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலியின் பிறந்தநாள் வருகிற நவம்பர் மாதம் 5ம் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியும். அதே நாளில் இந்திய& தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. […]

