உச்சகட்ட சோகத்தில் பாலஸ்தீனர்கள்! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!

கட்டிட இடிபாடுகளுக்குள் தங்கள் குடும்பத்தினரும், உறவினர்களும் உயிருடன் இருக்கிறார்களா என்று பாலஸ்தீன மக்கள் தேடி அலையும் சோகக் காட்சிகள் நெஞ்சை பதறவைக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் போர் தொடங்கியது. போர் தொடங்கிய நாள் முதல் இஸ்ரேல் ராணுவம் காசா மீது வான்வழியாக ஆயிரக்கணக்கான குண்டுகளை வீச நகரத்தையே குப்பைமேடாக மாற்றியது. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். […]
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூலகம்! நாளை தொடக்கம்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூலகங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் பெயரில் இயங்கி வரும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் அதன் நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூலகங்களை திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை […]
அதிரடியாக உயர்ந்த தேர்வுக்கட்டணம்! மாணவர்கள் கடும் அதிர்ச்சி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்னர் ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், 50 சதவீதமாக அதாவது ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி இருப்பதால் ஒவ்வொரு மாணவரும் ரூ.2,050 கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் டிகிர பெறுவதற்கான கட்டணம் ஏற்கனவே ரூ.1,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,500 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாண்டு […]
கல்லூரி மாணவர் ரேகிங் விவகாரம்! 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!

கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ராகிங் கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவரை, சீனியர் மாணவர்கள் 8 பேர் சேர்ந்து ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ராகிங் காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலான நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த […]
திருவண்ணாமலையில் நாளை பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்! அண்ணாமலை அறிவிப்பு!

தமிழக அரசை கண்டித்து நாளை (நவ.18) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை கண்டித்து விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தி.மு.க. அரசின் அடக்குமுறையை பா.ஜ.க. […]
கலைஞர் நூற்றாண்டு விழா! ரஜினிகாந்த், கமலுக்கு அழைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு தமிழ் திரையுலக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அரசியல், தமிழ் சினிமா என பன்முகத்தன்மை கொண்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘கலைஞர் நூற்றாண்டு விழா’வுக்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாக […]
கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத்திருவிழா! திருவண்ணாமலையில் விழாக்கோலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (நவ.17) கொடியேற்றதுடன் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மாத தீபத்திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின்னர் 64 அடி […]
சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்! பா.ஜ.க.வின் நிலை என்ன?

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை (நவ.18) கூடும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் முன்வைக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்த […]
டீப்ஃபேக் வீடியோவில் சிக்கிய அடுத்த பிரபலம்! அதிர்ச்சி தகவல்கள்!

டீப்ஃபேக் வீடியோவில் நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைப் சிக்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகை சிக்கியிருப்பது பெரும் சட்டசிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களை தாண்டி தற்போது பாலிவுட்டில் கால்பதித்து வெற்றி நாயகியாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திரையுலகத்தினர், ரசிகர்கள் டீப்ஃபேக் வீடியோவை தயார் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி! அமெரிக்க அதிபர் ஜோபைடன் நெத்தியடி!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஒரு சர்வதிகாரி என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் பகிரங்கமாக குறிப்பிட்டு சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜீ ஜின்பிங் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவாக […]

