மத்தியபிரதேசத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு!

மத்தியபிரதேசத்தில் இன்று ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியபிரதேசத்தில் கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவில் அடர் என்ற தொகுதியில் கிஷுபுராவில் இயங்கிய வாக்குச்சாவடியில் மட்டும் சிலர் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது என்பதால் கிஷுபுரா வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாகுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்று […]
தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்! காங்கிரசுக்கு தி.மு.க. ஆதரவு!

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ்.மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க பி.ஆர்.எஸ். கட்சியினர் மற்றும் […]
அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை! எங்கெங்கு தெரியுமா?

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையில் ஒரு சில பகுதிகளில் நேற்று […]
இன்று மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

இன்று மாலை 4 மணியளவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை 4 மணியளவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் கட்சி கிளை அமைப்புகளை பலப்படுத்துவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்த பிறகு வரவிருக்கும் 2024ம் ஆண்டு […]
கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது இல்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தந்த மாநில கட்சி தலைவர்களுடனும், கட்சி பிரதிநிதிகளுடனும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று (நவ.20) […]
சூட்கேசில் இளம்பெண்ணின் சடலம்! பரபரப்பு தகவல்கள்!

சூட்கேசில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் நசுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சம்பவம் மும்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை குர்லா பகுதியை அடுத்த சாந்தி நகர் பகுதியில் நேற்று (நவ.19) மாலை நேரத்தில் சூட்கேஸ் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமாக கிடந்த அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண் […]
சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு! உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் இடைக்கால மனுவை தற்போது சாதாரண ஜாமீனாக மாற்றி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதியன்று கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் விஜயவாடாவில் உள்ள ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திலும் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையில் கண்பார்வை உள்ளிட்ட உடல்நலக்குறைவால் தான் […]
வானில் தோன்றிய பறக்கும் தட்டுகள்! மணிப்பூரில் பதற்றம்!

மணிப்பூரில் வானில் திடீரென்று சந்தேகத்திற்கிடமான மர்மப் பொருள் பறந்ததால் சில மணி நேரம் பதற்றம் நிலவியது. மணிப்பூரில் நேற்று (நவ.19) பிற்பகல் 2 மணியளவில் பறக்கும் தட்டுகள் திடீரென்று பறந்து கொண்டிருந்தது. இது குறித்து உடனடியாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவற்றை தேடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை 2 ரபேல் ஜெட் விமானங்களை தேடுதல் பணியில் ஈடுபடுத்தியது. போர் விமானம் வான்வெளியில் தரையில் இருந்து மிகக்குறைந்த உயரத்திலேயே பறந்து தேடுதல் […]
கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம்!

சென்னையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. வருகிற 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிப்பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான பணியை அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளது. அதன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் […]
குட்நியூஸ்! மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை அறிவிப்பு!

மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை டிசம்பர் 11ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை நடத்தப்படும் என்று அட்டவணையில் […]

